சென்னை அண்ணா மேம்பாலம் ரூ.9 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது

0
113

சென்னை அண்ணா மேம்பாலம் ரூ.9 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது

சென்னை: சென்னையின் அடையாளமாக விளங்கும் அண்ணா சாலையின் மையப்பகுதியில் அண்ணா மேம்பாலம் உள்ளது.

ராதாகிருஷ்ணன் சாலை- ஜி.என்.ஷெட்டி சாலை-நுங்கம்பாக்கம் சாலைகள் சந்திக்கும் பகுதியில் 1971-ம் ஆண்டு பிரமாண்ட மேம்பாலம் கட்ட அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் 250 அடி நீளம் 48 அடி அகலத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு 21 மாதத்தில் இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு 1973-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி திறக்கப்பட்டது.

இந்த மேம்பாலத்திற்கு அண்ணாவின் பெயரை கருணாநிதி சூட்டி இருந்தார்.

சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம் என்ற பெருமையை பெற்ற அண்ணா மேம்பாலம் இந்திய அளவில் கட்டப்பட்ட 3-வது பெரிய மேம்பாலமாக அப்போது திகழ்ந்தது.

மேம்பாலத்திற்கு அருகே நீண்ட காலமாக ஜெமினி ஸ்டூடியோ அமைந்திருந்ததால் ஜெமினி மேம்பாலம் என்றும் அழைப்பது வழக்கம். அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டு தொடங்குவதையொட்டி மேம்பாலத்தை அழகுபடுத்தி புதுப்பிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி ரூ.9 கோடி செலவில் அண்ணா மேம்பாலம் புதுப்பிக்கப்படுகிறது.

அண்ணா மேம்பாலம் புதுப்பிக்கப்படுவதையொட்டி மேம்பால சந்திப்பில் கதீட்ரல் ரோடு செல்லும் பகுதியில் பல்லவர் கால பாணியில் செதுக்கப்பட்ட 6 அடி உயர சிங்கம் சிலை அழகிய வடிவமைப்புடன் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் ஒவ்வொரு நுழைவு பகுதி, வெளியேறும் பகுதி என 8 இடங்களில் அழகிய கல்தூண்கள் அமைக்கப்படும்.

புகழ்பெற்ற வடிவமைப்பு கலைஞரான ஸ்ரொஸ்கி மருது கல்தூண்களுக்கு வடிவமைப்பு கொடுக்க உள்ளார்.

அண்ணா மேம்பாலத்தில் மொத்தம் 80 தூண்கள் உள்ளன. இதில் பல தூண்கள் பக்கவாட்டுச்சுவரால் மூடப்பட்டு உள்ளது.

இதில் சில தூண்களை மக்கள் பார்க்கும் வகையில் அழகுபடுத்தவும் முடிவு செய்துள்ளோம்.

மேம்பாலத்தின் அருகே புல்தரைகளில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் அழகிய தமிழ் எழுத்துக்கள் அமைக்கப்படவும் உள்ளது. தமிழகத்தின் வரலாற்றை பறைசாற்றும் வண்ணம் கலை வடிவத்துடன் கூடிய சிற்பங்களும் சில பகுதிகளில் நிறுவ உத்தேசித்துள்ளோம். பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரது பொன்மொழிகளும் தூண்களில் செதுக்கப்படும் அண்ணா மேம்பாலம் புதுப்பிக்கப்படுவதையொட்டி அதன் அருகே உள்ள அமெரிக்க தூதரகம் பகுதியில் பொதுமக்கள் விசா பெறுவதற்கு பிளாட் பாரத்தில் வரிசையில் நிற்பது வழக்கம். அவர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில் நடைமேடையை புதுப்பித்து இருக்கை வசதிகளும் செய்து கொடுக்க யோசித்து வருகிறோம்.

தமிழ் நாகரிகம், திராவிட அரசியலின் அடையாளங்கள் ஆகியவற்றை சிற்பங்களாகவும், ஓவியமாகவும் பிரதிபலிக்கும் வகையில் அழகிய வேலைப்பாடுகளும் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.