கடந்த 24 மணி நேரத்தில் 36.7 லட்சத்துக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் போட்டு இந்தியா சாதனை
புதுதில்லி, ஏப்ரல் 2, 2021
கடந்த 24 மணி நேரத்தில் 36.7 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போட்டு இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.
76-வது நாளான நேற்று 36,71,242 தடுப்பூசிகள் போடப்பட்டன. மொத்தத்தில் இன்று காலை 7 மணி வரை 6.87 கோடி (6,87,89,138) தடுப்பூசிகள் போடப்பட்டன.
மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, தில்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 81,466 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 81.25 சதவீதம் பேர் மேற்கண்ட 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 43,183 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 6,14,696-ஐ எட்டியுள்ளது.
நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,15,25,039 -ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 50,356 பேர் குணமடைந்துள்ளனர். 469 பேர் உயிரழந்துள்ளனர்.