‘எனது தம்பி மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்’ – மு.க அழகிரி

0
227

‘எனது தம்பி மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்’ – மு.க அழகிரி

தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அவரது அண்ணன் மு.க.அழகிரி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைப்பெற்றது. இதில் திமுக – காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளுடனும், அதிமுக – பாஜகவுடனும் களம் கண்டன. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடந்தது. இதில் 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது திமுக. அதோடு 25 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.

50 வருடம் அரசியலில் இருந்தாலும், இப்போது தான் முதல் முறையாக அரியணை ஏறவிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதோடு நாளை காலை 9 மணிக்கு முதல்வராக அவர் பதவியேற்கிறார். இதையடுத்து தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து பிரபலங்கள் பலர் ஸ்டாலினுக்கு, திமுக கூட்டணிக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மு.க.ஸ்டாலினின் அண்ணன் மு.க. அழகிரி அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ”திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆனது கண்டு பெருமைபடுகிறேன். அவர் எனது தம்பி. அவருக்கு வாழ்த்துக்கள். நிச்சயம் அவர் நல்லாட்சி தருவார்” என அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.