உறுதியாக இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் – நடிகர் சூர்யா ட்வீட்

0
154

உறுதியாக இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் – நடிகர் சூர்யா ட்வீட்

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் விவசாயிகள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பில் இருந்தும் விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றி குறித்து பெருமிதமாக பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

“உழவே தலை

விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…” என சொல்லியுள்ளார் சூர்யா.