உடலுக்கு இப்போது.. ஊழலுக்கு அடுத்த மாதம் – கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

0
75

உடலுக்கு இப்போது.. ஊழலுக்கு அடுத்த மாதம் – கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

சென்னை: நாடு முழுவதும் 60 வயது மேற்பட்டவர்களுக்கு நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்களும் ஊசி போட்டு கொண்டுள்ளனர்.

இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தடுப்பூசி போட்டுக்கொண்டார். சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்த தகவலை கமல்ஹாசனே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நான் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த்தடுப்பூசி உடனடியாக.., ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம்….. தயாராகிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.