இளைஞர்கள் விளையாட்டை வாழ்க்கைக்குள் கொண்டு வர வேண்டும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேச்சு

0
78

இளைஞர்கள் விளையாட்டை வாழ்க்கைக்குள் கொண்டு வர வேண்டும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேச்சு

சென்னை, 24பிப்ரவரி, 2022

புதுவைப் பல்கலைக்கழகம் விளையாட்டுத் துறை சார்பில் உலகத் தரத்திலான நவீன உள் விளையாட்டரங்கத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் தலைமையேற்று வரவேற்புரை வழங்கினார். அப்போது பேசிய அவர் புதிய உள் விளையாட்டரங்கைப் பயன்படுத்தி விரைவில் ஆடவர் மற்றும் பெண்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். மாணவர்கள் விளையாட்டரங்கைப் பயன்படுத்தி உலகச் சாதனைகளை நிகழ்த்த முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினராக புதுவை ஆளுநர் மருத்துவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு விளையாட்டரங்கைத் திறந்து வைத்துப் பேசினார்,

அப்போது அவர், மறைந்த விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்  செயல்களை மாணவர்கள் மத்தியில் நினைவுக்கூறும் வகையில் புதிய உள் விளையாட்டரங்கிற்கு அவர் பெயரைச் சூட்டிள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

நவீன தொழில் நுட்பமும், சமூக ஊடகங்களும் பெருகி வரும் நிலையில் மாணவர்களிடையே விளையாட்டில் ஆர்வம் குறைந்து வருகிறது. அதனால் விளையாட்டுத் துறைச் சேர்ந்த பேராசிரியர்களும், மாணவர்களும் பொதுமக்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டும்.

கொரேனா போன்ற நோய்த் தொற்று பரவி மனித சமுதாயத்தை அச்சுறுத்தும் சூழலில் ஆரோக்கியமான உடல் மிக முக்கியம் என்பதை அனைவரும் புரிந்து விளையாட்டிற்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும்.

இந்த உணர்வுகளை பல ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் மத்தியில் ஏற்படுத்தியவர் மகாகவி பாரதி. ” ஓடி விளையாடு பாப்பா..” என்றவர் “காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா” என்று  குழந்தைப் பருவத்திலேயே விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர் பாரதி.

அதனால் பாரதியின் கனவு நினைவேற அனைவரும் உடல் நலனில் அக்கறைச் செலுத்த ேவண்டும், அதற்கான சூழலைப் புதுவைப் பல்கலைக்கழகம் உருவாக்கிவுள்ளது” என்று பேசினார்.

நிறைவாக பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் அமரேஷ் சமந்திராயா நன்றி கூறினார். விழாவில் பல்கலைக்கழக இயக்குநர் பேராசிரியர் பாலகிருஷ்ணன், கலாச்சார துறை சிறப்பு அதிகாரி பேராசிரியர் ராஜீவ் ஜெயின் , புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.