இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைவுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ ஆழ்ந்த இரங்கல்!

0
525

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைவுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ ஆழ்ந்த இரங்கல்!

இயற்கை , ஈ , பேராண்மை , புறம்போக்கு என்கிற பொதுவுடமை… படங்களைத் தொடர்ந்து., இறுதியாக தற்போது லாபம் திரைப்படத்தையும் கிட்டத்தட்ட எடுத்துக்கொடுத்து முடித்து விட்டு … இன்று , நம்மைவிட்டு பிரிந்த நேர்மையான படைப்பாளி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவுக்கு எமது ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

“தங்கள் நேர்மையான உழைப்பின் மூலம்., இறுதியாக, லாபம் எனும் படத்தை எடுத்துக்கொடுத்து விட்டு …இப்படி,
உங்கள் எதிர்பாரா இழப்பின் மூலம் தமிழ் திரையுலகினரை நஷ்டம் அடைய வைத்து விட்டீர்களே தோழரே ..! இது நியாயமா .?!” எனும் ஒரு வினாவையும் அவரது ஆன்மாவிற்கு வைத்து இந்த இரங்கல் செய்தியை கண்ணீருடன் நிறைவு செய்கிறோம் !

D.R.பாலேஷ்வர்,
தலைவர்

R.S.கார்த்திகேயன் ,
செயலாளர்

மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் & உறுப்பினர்கள்.

சினிமா பத்திரிகையாளர் சங்கம். சென்னை – 24