ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

0
250

ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்து மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நிலவரம் தடுப்பூசி, ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து பிரதமர் மோடி 9 மாநில பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 46 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனையில் நடத்தினார். ஆலோசனையில் மாநில முதல்-அமைச்சர்கள், அதிகாரிகள், சுகாதாரச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க தமிழகத்தில் தடுப்பூசி மருந்து உற்பத்தி நிலையங்களை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகளை தமிழகத்தில் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்காணும் அத்தியாவசிய பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும்.

குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் ஆலைகளை நிறுவ வரும் 31-ம் தேதிக்குள் விருப்பக் கருத்துகளை அளிக்க வேண்டும்.

இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் விருப்ப கருத்துகள் அடிப்படையில் கரோனா தடுப்பூசி உற்பத்தி, ஆக்ஸிஜன் உற்பத்திக்கான உள்கட்டமைப்புகள் விரைவில் நிறுவப்படும் என கூறப்பட்டு உள்ளது.