அரசு மருத்துவமனைக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய விஜய் மக்கள் மன்றத்தினர்

0
157

அரசு மருத்துவமனைக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய விஜய் மக்கள் மன்றத்தினர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தண்ணீர் சுத்தகரிப்பு இயந்திரங்கள் மற்றும் ஆக்ஸிஜன் கிட் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர்.

கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி வரும் முன்களப் பணியாளர்களான துப்புரவு பணியாளர்களின் சேவையை பாராட்டும் நோக்கில் அவர்களுக்கு ஊக்கத்தொகையும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பரணிபாலாஜி வழங்கினார். கொரோனா காலத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது பொதுமக்களின் பாராட்டை பெற்றது. இந்நிகழ்வில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.