அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் – மு.க.ஸ்டாலின்

0
299

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் – மு.க.ஸ்டாலின்

சென்னை முகப்பேர் கிழக்கு ஜேஜே நகர் பகுதியில் திமுகவினர் மதுரவாயல் தொகுதியில் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவித்து அவ்வழியாக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த அம்மா உணவகத்தில் இருந்த பெயர் பலகை வெளியே எடுத்து வந்து சாலையில் வீசி எரிந்துள்ளனர். மேலும் அம்மா உணவகத்தில் நுழைந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி, அம்மா உணவகம் என்ற பெயர்ப்பலகை தொங்க விடக்கூடாது என அங்கிருந்த ஊழியர்களை எச்சரித்து சென்று உள்ளனர்.

திமுகவினர் அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பலர் கேட்டுக் கொண்டனர். இதனிடையே அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை ஸ்டாலின் கட்சியிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார் என்று திமுக எம்எல்ஏ சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார் என்றுள்ளார்.