அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 முதல் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் – மத்திய அரசு

0
131

அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 முதல் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் – மத்திய அரசு

இரு சக்கர மோட்டார் வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் பயணித்தல் அல்லது அமர்ந்து செல்லும்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது

புதுதில்லி, பிப்ரவரி 16, 2022

இரு சக்கர மோட்டார் வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் பயணித்தல் அல்லது அமர்ந்து செல்லும்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதி 138 பிப்ரவரி 15, 2022 அன்று திருத்தப்பட்டதன் அடிப்படையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் பிரிவு 129-ன் கீழ் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு சேணம் அல்லது தலைக்கவசம் பயன்படுத்தப்பட வேண்டும். இத்தகைய மோட்டார் வாகனங்களின் வேகம் மணிக்கு 40 கிலோ மீட்டராக மட்டுமே இருக்க வேண்டுமென்றும் இந்த அறிவிக்கை கட்டுப்பாடு விதித்துள்ளது.

மத்திய மோட்டார் வாகனங்கள் (இரண்டாவது திருத்த) விதிகள் 2022 வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக்குப் பின் இந்த விதிகள் அமலுக்கு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Click the link below for the Gazette Notification