Rowdy Pictures நயன்தாரா, விக்னேஷ்சிவன் தயாரிப்பில் அடுத்த ரொமான்ஸ் திரைப்படம் “Walking/Talking Strawberry Ice Cream“!

0
105

Rowdy Pictures நயன்தாரா, விக்னேஷ்சிவன் தயாரிப்பில்    அடுத்த ரொமான்ஸ் திரைப்படம் “Walking/Talking Strawberry Ice Cream“!

நயன்தாரா, விக்னேஷ்சிவன் இணைந்து தங்களது Rowdy Pictures தயாரிப்பு நிறுனத்தின் சார்பில் அடுத்த தயாரிப்பாக “Walking/Talking Strawberry Ice Cream “ எனும் ரொமான்ஸ் திரைப்படத்தினை தயாரிக்கிறார்கள்.

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து உருவாக்கியுள்ள Rowdy pictures தயாரிப்பு நிறுவனம், ஆரம்பிக்கப்பட்ட மிகக்குறுகிய காலத்தில், தமிழ் சினிமாவில் பலரது புருவத்தையும் உயர்த்தும் அளவில் பல ஆச்சர்ய அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. ஒரு புறம் “ராக்கி” மற்றும் “கூழாங்கல்” போன்ற அழுத்தமான தீவிர சினிமாக்களின் உரிமையை பெற்று உலகளவில் எடுத்து செல்லும் பணியினை செய்து வருகிறது. மற்றொருபுறம் ரசிகர்களை மயக்கும் கமர்ஷியல் சினிமாக்களாக “நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல்” படங்களையும் உருவாக்கி வருகின்றது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் “நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம்” படங்களில் பணிபுரிந்த உதவியாளர் வினாயக் அவர்களின் அறிமுக இயக்கத்தில் ‘Walking/Talking Strawberry Ice Cream’ எனும் ரொமான்ஸ் திரைப்படம் உருவாகிறது. இப்படம் முழுக்க, முழுக்க காதலை மையப்படுத்தி, காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகவுள்ளது.

இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்பொது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு 2021 ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.