போர் சினிமா விமர்சனம் : போர் இளமை கல்லூரி கலாட்டா மோதலுடன் ஆக்ஷன் கலந்து சுழலும் போர்வாள் | ரேட்டிங்: 2.5/5
டி-சீரிஸ், கெட்அவே பிக்சர்ஸ், ரூக்ஸ் மீடியா சார்பில் பிஜாய் நம்பியார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர் தயாரித்திருக்கும் போர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிஜாய் நம்பியார்
இதில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா சீனிவாசன், மெர்வின் ரோஜாரியோ மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:இசை: சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி, பின்னணி இசை : ஸ்கோர் மார்டன் டேப் ஸ்கோர்கள் (ஹரிஷ் வெங்கட் மற்றும் சச்சிதானந்த் சங்கரநாராயணன்), கௌரவ் கோட்கிண்டி, ஒளிப்பதிவு : ஜிம்ஷி காலித் மற்றும் பிரெஸ்லி ஆஸ்கார் டிசோசா,எடிட்டர் : பிரியங்க் பிரேம் குமார், கலை இயக்குனர் : மணிமொழியன் ராமதுரை ,பாடகர்கள் : சஞ்சித் ஹெக்டே, வி.எம்.மகாலிங்கம், வர்ஷா எஸ்.கிருஷ்ணன், கபில் கபிலன், பாடல் வரிகள் : கிருத்திகா நெல்சன், விக்னேஷ் ஸ்ரீPகாந்த், மோகன் ராஜன், அதிரடி இயக்குனர் : ரியாஸ் மற்றும் ஹபீப், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : பாலகுமாரன், ஒலி வடிவமைப்பு : டான் வின்சென்ட், நிர்வாக தயாரிப்பாளர் : லக்ஷய் குமார், பிஆர்ஓ : சதீஷ்குமார்
யுவா (காளிதாஸ் ஜெயராம்) பாண்டிச்சேரி மதுக்கரையில் உள்ள செயின்ட் மார்ட்டின்ஸ் கல்லூரியில் சேர்கிறார். அங்கே யுவா எதிர்பாராத விதமாக சிறு வயதில் தன்னுடன் சன் பீம் போர்டிங் ஸ்கூலில் படித்த பிரபுவை சந்திக்கிறார். இப்பொழுது அரியர்ஸ{டன் பிஎச்டி படித்துக் கொண்டிருக்கும் சீனியர் பிரபுவிடம் சிறு வயதில் ஏற்பட்ட சம்பவத்தில் மனக்கசப்பு இன்றளவும் யுவாவின் மனதில் ஆழமான பதிந்து பழி வாங்கும் எண்ணத்துடன் இருக்கிறார். கல்லூரியில் காயத்ரி (டி.ஜே. பானு), குரல் என்ற அமைப்பின் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் பிரபுவின் காதலி. ரிஷ்விகா (சஞ்சனா நடராஜன்) யுவாவின் காதலி. இவர்களுடன் படிக்கும் வெண்ணிலா மற்றும் கல்லூரியின் டிரஸ்டியும் அரசியல்வாதியின் மகள் சூர்யா இருவருக்குள்ளும் இருக்கும் ஈர்ப்பும் காதலும் பின்னர் பகையாக மாறுகிறது. அவர்கள் அனைவரும் நண்பர்கள் என்றாலும் தங்களுக்குள் சிக்கலான உறவுகளைக் கொண்டுள்ளனர். வெண்ணிலாவும் சூர்யாவும் பொதுச்செயலாளர் பதவிக்கு கல்லூரி வளாகத்தில் தேர்தலில் நிற்பதால் அரசியல் போட்டி ஏற்படுகிறது. அரசியல் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் சூர்யாவிற்கு இந்த போட்டி கௌரவ பிரச்சனையாக இருக்கிறது. அதனால் வெண்ணிலாவை மிரட்டி கையில் ஆசிட் ஊற்றி பயமுறுத்தி தேர்தலில் நிற்க முடியாமல் செய்கிறார் அரசியல் நண்பர் அதனால் சூர்யா வெற்றி பெறுகிறார். சூர்யா வெண்ணிலாவிற்கு செய்த கொடுமை வெளியுலகத்திற்கு காயத்ரி மூலம் தெரிய வந்து சூர்யாவிற்கு பதவி பறி போவதுடன், அரசியல் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிறது. இதனால் ஆத்திரத்துடன் இருக்கிறார் சூர்யா. இந்நிலையில் யுவாவுக்கும் பிரபுவுக்கும் இருக்கும் உட்பகை கல்லூரி விழாவின் போது பெரும் சண்டை ஏற்பட்டு குழப்பம் ஏற்படுகிறது. யுவா ஏன் பிரபுவை வெறுக்கிறார் காரணம் என்ன? கல்லூரி விழாவில் ஜுனியர் சீனியர் சண்டை என்னானது? சூர்யாவின் பழி வாங்கும் எண்ணம் ஈடேறியதா? வெண்ணிலா, காயத்ரி தாக்குதலில் இருந்து தப்பித்தார்களா? இவர்களின் சண்டைகள் தீர்ந்ததா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
பிரபுவாக அர்ஜுன் தாஸ் எப்பொழுதும் வில்லனாக நடிப்பவர், இந்த படத்தில் எளிமையான கல்லூரி மாணவர் தோற்றத்தில் தீர்க்கமான பார்வையுடன் கணீர் வெண்கல குரலில் சீனியராக அதகளத்துடன் பிரகாசிக்கிறார். அமைதியாக இருக்கும் இவரை வெறுப்பேற்றும் யுவாவை இறுதியில் நடக்கும் சண்டை அசத்தல் ரகம். பிரபு மற்றும் காயத்ரிக்கு இடையேயான காதல் மென்மையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.
காளிதாஸ் ஜெயராம் கோபமான பிரச்சனைக்காரராக யுவா கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளார். பெரும்பாலும், கோபம், துக்கம், காதல், பகை, சண்டை என்று பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் முடிந்த வரை சிறப்பாக செய்ய முயற்சித்திருந்தாலும் சில காட்சிகளில், அழுத்தமில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது. யுவராஜ் மற்றும் ரிஷிகா ஜோடியாக மிகவும் நம்பத்தகுந்ததாக இல்லை என்றாலும் அவர்களின் ஆன்-ஸ்கிரீன் காதல் ஒரு சில ஃபீல்-குட் அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. உண்மையாக யுவா காதலிக்கிறாரா? ஏமாற்றுகிறாரா என்று கேள்வி படம் முழுவதும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இதில் சைலன்ட் காதல் பாமா வேறு அடிக்கடி கிராஸ் செய்து விட்டு போகிறார்.
இவர்களுடன் காயத்ரியாக டி.ஜே.பானு ஒடுக்கப்பட்டவர்களின் ஒங்கி ஒலிக்கும் அனைவரின் உரிமைக்குரலாக சிறப்பாக செய்துள்ளார், ரிஷிகா மாடர்ன் மங்கை எதற்கும் துணிந்த சஞ்சனா நடராஜன், அரசியலில் சாதிக்கும் லட்சியத்துடன் இருக்கும் சூர்;யாவாக அம்ருதா சீனிவாசன், மெர்வின் ரோஜாரியோ ஆகியோர் படத்திற்கு பலம்.
சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி இசையும், ஸ்கோர் மார்டன் டேப் ஸ்கோர்கள் (ஹரிஷ் வெங்கட் மற்றும் சச்சிதானந்த் சங்கரநாராயணன்), கௌரவ் கோட்கிண்டி பின்னணி இசையும், ஜிம்ஷி காலித் மற்றும் பிரெஸ்லி ஆஸ்கார் டிசோசா ஒளிப்பதிவும் என்று ஒவ்வொரு துறையிலும் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் தங்களுடைய உழைப்பை கொடுத்து மெருகேற்றியுள்ளனர்.
பிரியங்க் பிரேம் குமார் எடிட்டர், ரியாஸ் மற்றும் ஹபீப் சண்டை, மற்றும் கலை இயக்குனர் மணிமொழியன் ராமதுரை இவர்களின் திறமையான பங்களிப்பு படத்தின் விறுவிறுப்பை எகிற செய்துள்ளது.
அறிமுகம், கலம், பகை, மய்யல், முரசொலி, விழா, மற்றும் இறுதியில் போர் என்று ஏழு அத்தியாயங்களாக பிரித்து சீனியர், ஜுனியர் என்ற இரண்டு கல்லூரி மாணவர்களைச் சுற்றியும் அவர்களின் நண்பர்களைச் சுற்றியும் நடக்கும் பழி வாங்கும் கல்லூரி வளாகக் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் பிஜாய் நம்பியார். போர் அவர்களின் போட்டியை மட்டும் காட்டவில்லை, ஆனால் கதைக்கு இணையாக இயங்கும் பல கருப்பொருள்களை உள்ளடக்கி; சாதிப் பாகுபாடு, ஒரே பாலின உறவு டுபுடீவுஞஐஇ குழந்தை பாலியல் வன்கொடுமை பிரச்சினை, அரசியல் குறிக்கீடு, கல்லூரி ராகிங், கல்லூரி விழா ஏற்பாட்டில் பாகுபாடு, நட்பு, கலாட்டா, காதல், பகை என்று கலந்து பல சமூகப் பிரச்சினைகளை இணைக்கும் முயற்சியில் இயக்குனர் பிஜாய் நம்பியார் போராடியிருக்கிறார். கதையில் பல கதாபாத்திரங்கள் இருப்பதால் படத்தின் சாராம்சத்தை நீர்த்துப்போகச் செய்கிறது. படம் காட்டும் அனைத்து கருப்பொருள்களிலும் ஒரு போர் தேவை என்றாலும், ஒரு சண்டை கூட அவர்கள் ஒரு பிரச்சினையில் வெற்றி பெறுவதைக் காட்டவில்லை.போர் என்பது இளமைக் கதையுடன் ரசிகர்களை வெல்வதற்காக போராடும் படம். கல்லூரி விழாவிற்கு பிறகு வரும் 20 நிமிட இறுதி க்ளைமேக்ஸ் காட்சி ஒரு நீண்ட தொடர்ச்சியான ஷாட் மற்றும் கேமரா கோணங்கள் ஒவ்வொரு நிமிடமும் அசர வைக்கும் விறுவிறு சினிமா ரோலர்கோஸ்டர் சவாரி.
மொத்தத்தில் டி-சீரிஸ், கெட்அவே பிக்சர்ஸ், ரூக்ஸ் மீடியா தயாரித்திருக்கும் போர் இளமை கல்லூரி கலாட்டா மோதலுடன் ஆக்ஷன் கலந்து சுழலும் போர்வாள்.