முடக்கறுத்தான் விமர்சனம் : முடக்கறுத்தான் சமூக அக்கறை கலந்த மூலிகை பாடம் | ரேட்டிங்: 2/5

0
215

முடக்கறுத்தான் விமர்சனம் : முடக்கறுத்தான் சமூக அக்கறை கலந்த மூலிகை பாடம் | ரேட்டிங்: 2/5

வயல் மூவிஸ் சார்பில் டாக்டர்.கே.வீரபாபு தயாரித்து எழுதி இயக்கி, பின்னணி இசையமைத்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘முடக்கறுத்தான்’.

இவருடன் இப்படத்தில் மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன், மயில்சாமி, பாவா லட்சுமணன், முத்துக்காளை, வைஷ்ணவி, குழந்தை ஷாலினி ரமேஷ், தயாளன், சாம்ஸ், காதல் சுகுமார், ரமேஷ், இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-சிற்பி, பாடல் வரிகள்-பழநி பாரதி, ஒளிப்பதிவு-அருள்செல்வன், படத்தொகுப்பு-ஆகாஷ்,ஒலிப்பதிவு-ஆண்டனி மைதீன், சண்டை- சூப்பர் சுப்பராயன், நடனம்- நோபல் பால், கலை-பிரபஞ்சன், இணை இயக்கம்-மகேஷ் பெரியசாமி, மக்கள் தொடர்பு-ரியாஸ் கே.அஹமத்.

ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வாழ்வளிக்கும் உன்னதமாக சேவையை செய்கிறார் கிராமத்தில் மூலிகை வியாபாரம் செய்யும் டாக்டர் வீரபாபு. வீரபாபு திருமணம் செய்ய நிச்சயித்த பெண் மஹானாவுடன் துணிமணிகள் எடுக்க சென்னை செல்கிறார். அங்கே மஹானாவின் அக்கா குழந்தை காணாமல் போக, வீரபாபு அக்குழந்தையை தேடிச்செல்லும் போது பல திடுக்கிடும் உண்மைகளை கண்டுபிடிக்கிறார். குழந்தை கடத்தல் கும்பல் பெரிய பின்பலத்துடன் செயல்படுவதும், அந்த கும்பலின் தலைவன் ஆந்திராவில் இருப்பதையும் அறிந்து கொள்கிறார். அவர்களை தேடி ஆந்திரா செல்லும் வீரபாபு சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? கடத்தல் தலைவனை கண்டுபிடித்தாரா? குழந்தைகளை கடத்தும் நோக்கம் என்ன? பத்திரமாக குழந்தைகளை மீட்டாரா? என்பதே படத்தின் கதை.

சித்த மருத்துவர் டாக்டர்.கே.வீரபாபு தனக்கு தெரிந்த மூளிகை வைத்தியத்தை வைத்தே தன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பதால் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் நடித்துள்ளார். சமூக அக்கறை கொண்ட மனிதராகவும், குழந்தை கடத்தலை தடுத்து அவர்களை மீட்டு காக்கும் கரங்களாக வலம் வருகிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் இவரின் உழைப்பு பளிச்சிடுகிறது.

மற்றும் நாயகியாக மஹானா, போலீஸ் உயர் அதிகாரியாக சமுத்திரக்கனி, வில்லனாக சூப்பர் சுப்பராயன், மயில்சாமி, பாவா லட்சுமணன், முத்துக்காளை, வைஷ்ணவி, குழந்தை ஷாலினி ரமேஷ், தயாளன், சாம்ஸ், காதல் சுகுமார், ரமேஷ், இந்திரஜித் ஆகியோர் படத்தில் பங்களிப்பு பேசும்படி உள்ளது.

பழனிபாரதியில் பாடல் வரிகளில் சிற்பியின் இசை கேட்கும் ரகம். ஒளிப்பதிவு-அருள்செல்வன், படத்தொகுப்பு-ஆகாஷ்,ஒலிப்பதிவு-ஆண்டனி மைதீன், சண்டை- சூப்பர் சுப்பராயன், நடனம்- நோபல் பால், கலை-பிரபஞ்சன் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்;களின் பணி கவனிக்கும் வகையில் கொடுத்துள்ளனர்.

பெண்கள், குழந்தைகள் கடத்தல் எதற்காக?அதன் பின்னணி என்ன? என்பதை திரைக்கதையாக வைத்து பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும், குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் என்பதை வலியுறுத்தி தமிழ் வைத்தியத்தின் மகத்துவத்தை மையப்படுத்தி முடக்கறுத்தான் என்ற டைட்டிலை வைத்து சித்த வைத்தியர் டாக்டர் கே.வீரபாபு இயக்கியிருக்கும் அறிமுக படத்தின் திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் கலந்து அழுத்தத்துடன் இயக்கியிருந்தால் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் வயல் மூவிஸ் சார்பில் டாக்டர்.கே.வீரபாபு தயாரித்திருக்கும் முடக்கறுத்தான் சமூக அக்கறை கலந்த மூலிகை பாடம்.