க்ளாஸ் மேட்ஸ் சினிமா விமர்சனம் : க்ளாஸ்மேட்ஸ் கண்ணீரில் மிதந்து போதையால் தள்ளாடும் சுமையாகும் வாழ்க்கை போதை | ரேட்டிங்: 2.25/5
முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஜே.அங்கையற்கண்ணன் தயாரித்து க்ளாஸ்மேட்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் குட்டிப்புலி ஷரவண சக்தி
இதில் அங்கையற்கண்ணன், பிராணா, குட்டிப்புலி ஷரவண சக்தி, மயில்சாமி, டிஎம் கார்த்திக், சாம்ஸ், எம்பி முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ், மீனாள், எஸ்ஆர் ஜாங்கிட் ஐபிஎஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :இணை இயக்குனர் : ஜே.அங்கையற்கண்ணன், ரத்னகுமார்,இணை தயாரிப்பாளர் : கலைவாணி கண்ணன், நிர்வாக தயாரிப்பாளர் : ஹர்னிஷ்.ஏ.கே., பேனர்: டிஓபி: அருண்குமார் செல்வராஜ், படத்தொகுப்பு: எம்.எஸ்.செல்வம், கூடுதல் எடிட்டர் : ஆர்.ராஜவர்மன், கலை இயக்குனர் : ஜெய், இசையமைப்பாளர் : பிரிதிவி, பாடல் வரிகள் : சீர்காலி சிற்பி , நடன இயக்குனர் : சந்தோஷ், ஆடை வடிவமைப்பாளர் : ஏ.முத்து, ஸ்டண்ட் : ராம்குமார், ஸ்டில்ஸ்: சிவா, ஒப்பனை: ஜி.ராகவன் ராகுல்,ஒலி வடிவமைப்பு: சி.ஏ.மைதீன் (மைட்டி ஸ்டுடியோ), மக்கள் தொடர்பு : ஏய்ம் சதீஷ்.
கால் டாக்சி டிரைவரான புது மாப்பிள்ளை அங்கையற்கண்ணன் தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் தனது மாமா ஷரவணசக்தியுடன் சேர்ந்து மது குடிக்க செலவிடுகிறார். இருவரும் மதுக்கு அடிமையாகி தங்கள் மனைவிகளை சந்தேகப்பட குடும்பத்தில் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டு இரு குடும்பமும் பாதிக்கப்படுகிறது. இதனிடையே மதுபிரியராக இருந்து மது பழக்கத்தை விட்டு நல்ல மனிதராக குடும்பத்தோடு சந்தோஷமாக வாழும் மயில்சாமியை அங்கையர்கண்ணனும், ஷரவணசக்தியும் சேர்ந்து மயில்சாமியை மீண்டும் குடிக்க வைத்துவிடுகிறார்கள். இதனால் இந்த மூன்று பேர் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு அதிர்ச்சிகரமான சம்பவம் நடக்கிறது? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? தவறை உணர்ந்து மதுப்பழக்கத்தை கைவிட்டார்களா? என்பதே மீதிக்கதை.
தயாரிப்பாளர் மற்றும் கதையின் நாயகன் அங்கயற்கண்ணன் கால் டாக்சி டிரைவராக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து விடும் கதாபாத்திரத்தில் குடிமகனாக அச்சு அசலாக நடித்து அசத்தியுள்ளார்.
இயக்குனர் குட்டிப்புலி சரவணன் சக்தியும் மொடா குடிகாரராக அளப்பறை பாத்திரத்தை சிறப்பாகச் செய்து தேவையான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.
பிரானா அன்பான மனைவி வேடத்தில் எதிர்பார்த்த நடிப்பை வழங்கியுள்ளார்.மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை எளிமையாக செய்திருக்கிறார்கள்.டி எம் கார்த்திக் மற்றும் அபி நக்ஷத்ரா அந்தந்த கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
அருண்குமார் செல்வராஜின் ஒளிப்பதிவு பிருத்வியின் இசை நன்றாக உள்ளது. மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் சராசரியாக உள்ளது.
ஒரு மனிதனின் வாழ்க்கை மற்றும் அவனது குடும்பத்தில் மது துஷ்பிரயோகத்தின் தாக்கத்தை மையமாகக் கொண்டு திரைக்கதையை குட்டிப்புலி சரவணன் சக்தி எழுதி இயக்கியிருக்கிறார். குடும்பத்தில் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சிரமங்களை ஏற்படுத்தும் மது பழக்கம் அவன் எதிர்கொள்ளும் சறுக்கல்களையும், சவால்களையும் இத்திரைப்படத்தின் மையக் கதையாக முன் வைக்கிறது. திரைக்கதை நன்றாக உள்ளது, கிளைமாக்ஸ் முடிவடையும் விதமும் பாராட்டத்தக்கது. காதல் வாக்குறுதிகள், குழந்தைகளின் எதிர்கால கனவுகள், குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை ஒரு நொடியில் மறக்கச் செய்யும் மது எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாக சொல்லி விழிப்புணர்வுடன் கொடுத்திருக்க முயற்சித்திருந்தாலும் க்ளாஸ் வாசனை படம் நெடுக இருப்பதை குறைத்திருக்கலாம் இயக்குனர் குட்டிப்புலி சரவணன் சக்தி.
மொத்தத்தில் முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஜே.அங்கையற்கண்ணன் தயாரித்திருக்கும் க்ளாஸ்மேட்ஸ் கண்ணீரில் மிதந்து போதையால் தள்ளாடும் சுமையாகும் வாழ்க்கை.