சிக்லெட்ஸ் சினிமா விமர்சனம் : சிக்லெட்ஸ் 2 கே கிட்ஸ் அனுபவிக்க துடிக்கும் அபிலாஷைகளையும், வரம்புகளை மீறி தடம் மாறுவதை பரவலாகவும், ஆழமாகவும் சொல்லும் படம் | ரேட்டிங்: 3/5

0
228

சிக்லெட்ஸ் சினிமா விமர்சனம் : சிக்லெட்ஸ் 2 கே கிட்ஸ் அனுபவிக்க துடிக்கும் அபிலாஷைகளையும், வரம்புகளை மீறி தடம் மாறுவதை பரவலாகவும், ஆழமாகவும் சொல்லும் படம் | ரேட்டிங்: 3/5

எஸ்எஸ்பி பிலிம்ஸ் சார்பில் எஸ் ஸ்ரீனிவாசன் குரு தயாரித்துள்ள சிக்லெட்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் முத்து.

இந்த படத்தில் சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீPமன், மனோபாலா, ஜாக் ராபின்சன், அம்ரிதா, மஞ்சிரா, ராஜ கோபால், ரசீம் உட்பட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :ஒளிப்பதிவு: கொளஞ்சி குமார், இசை: பால முரளி பாலு, படத்தொகுப்பு: விஜய் வேலு குட்டி , மக்கள் தொடர்பு : யுவராஜ்

போரில் இறந்த மேஜரின் மனைவி கீர்த்தி (சுரேகா வாணி) தன் மகள் ரியாவை (நயன் கரிஷ்மா) நன்றாக படிக்க வைத்து டாக்டராக்க வேண்டும் என்று லட்சியத்துடன் இருக்கிறார். அரசாங்க வேலை செய்யும் வெங்கட்ராமன் (ராஜகோபால்) தன் மகள் அபிராமியை (மஞ்சீரா) அரசு வேலையில் தான் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார். நகைக்கடை வைத்திருக்கும் சந்தோஷ் (ஸ்ரீPமன்) தன் மகள் அனுஷா (அம்ரிதா ஹல்டர்) மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர் தன் மகள் எது செய்தாலும் பெருமைதான் என்று நினைக்கக்கூடியவர். இந்த ரியா, அபிராமி, அனுஷா மூன்று  பேரும் பள்ளி பருவத்து இணை பிரியா தோழிகள். பள்ளிப்படிப்பை கஷ்டப்பட்டு படித்து முடித்தவுடன் கல்லூரிக்கு செல்லும் வயதில் இருப்பவர்கள். மூன்று பேருக்கும் காதல் மீது ஈர்ப்பு வருகிறது, அதனை ஜாலியாக அனுபவித்து பார்க்க வேண்டும் என்று ஆவல் ஏற்படுகிறது. தன் பள்ளித்தோழியின் அக்கா திருமணத்திற்கு செல்வதாக தங்கள் பெற்றோர்களிடம் பொய் சொல்லிவிட்டு தன் ஆண் நண்பர்களுடன் குதூகலமாக இருக்க பார்ட்டிக்கு செல்ல ஏற்பாடு செய்கின்றனர். தங்களது ஆண் நண்பர்கள் வருண் (சாத்விக் வர்மா), சிக்கு (ஜேக் ராபின்சன்), ஆரோன் (ரசீம்) ஆகிய நண்பர்களுடன் காரில் புறப்பட்டு செல்கின்றனர். இவர்கள் சென்றவுடன் தான் பெற்றோர்களுக்கு அபிராமியின் தொலைந்த போனின் மூலம் மகள்களின் போக்கும், தடம் மாறும் எண்ணத்தையும் கண்டு அதிர்கின்றனர். கீர்த்தி, வெங்கட்ராமன், சந்தோஷ் மூவரும் சேர்ந்து தங்கள் மகள்;களை தேடி செல்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் மகள்களை கண்டுபிடித்தார்களா? விபரீதம் ஏற்படுவதற்குள் தடுத்து நிறுத்தினார்களா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகிய இளவயது பெண்களாக கவர்ச்சி குவியலுடன் ஆட்டம் பாட்டத்துடன் இரட்டை அர்த்த வசனங்களை பேசி வாழ்க்கையை அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற ஆவலில் காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் வயதில் நடக்கும் தவறான நடத்தையை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்கள். இதில் அம்ரிதா ஹல்டர் ஒரின சேர்க்கையாளராக நடித்துள்ளார்.

வருணாக நடித்திருக்கும் சாத்விக் வர்மா, சிக்குவாக நடித்திருக்கும் ஜாக் ராபின்சன் மற்றும் ஆரோனாக நடித்திருக்கும் ரசீம் ஆகியோர் தங்கள் காதலிகளை அனுபவிக்க துடிக்கும் இக்காலத்து இளைஞர்களாக பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

மூன்று பெண்களின் பெற்றோர்களாக வரும் சுரேகா வாணி, ஸ்ரீPமன், ராஜகோபால் மற்றும் பாட்டியாக வருபவரும் தங்கள் மகள்களின் எதிர்காலத்தை நினைத்து காப்பாற்ற பதறுவதும், இறுதியில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் இடத்தில் பொறுப்புடன் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு: கொளஞ்சி குமார், இசை: பால முரளி பாலு, படத்தொகுப்பு: விஜய் வேலு குட்டி ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் 2கே கிட்ஸின் செயல்களை இளைஞர்கள் மகிழ்விக்கும் வண்ணம் கவர்ச்சி கலந்து எல்லை மீறலுடன் பாடல்களை இளமை துள்ளலுடன் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இளமைப் பருவத்திலிருந்து டீன் ஏஜ் வயதிற்கு மாறுவதை பெண்களை மையப்படுத்தி கதைக்களத்தை அமைத்து கவர்ச்சி களத்துடன், இரட்டை அர்த்த வசனங்களுடன் கலந்து அதில் காதல் காமம் இரண்டையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று மெசேஜையும் இறுதிக் காட்சியில் வைத்து இயக்கியுள்ளார் முத்து. கெட்டதை சிக்லெட் போல் மென்று துப்பி விட வேண்டும் அதையே வாழ்க்கையாக வாழக் கூடாது என்பதை டைட்டிலாக வைத்து பின்னர் சம்பந்தப்பட்ட 2மு குழந்தைகள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்கள் மற்றும் வீட்டில் உள்ள மற்ற பெரியவர்களும் எச்சரிக்கை பாடங்களைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதையும் ஒரினச் சேர்க்கை எண்ணம் கொண்டவர்களை ஏற்றுக் கொண்டு மதிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர் முத்து.

மொத்தத்தில் எஸ்எஸ்பி பிலிம்ஸ் சார்பில் எஸ் ஸ்ரீனிவாசன் குரு தயாரித்துள்ள சிக்லெட்ஸ் 2 கே கிட்ஸ் அனுபவிக்க துடிக்கும் அபிலாஷைகளையும், வரம்புகளை மீறி தடம் மாறுவதை பரவலாகவும், ஆழமாகவும் சொல்லும் படம்.