அமிகோ கேரேஜ் சினிமா விமர்சனம் : அமிகோ கேரேஜ் கூடா நட்பு கேடாக விளையும் என்பதை உணர்த்தும் கதை | ரேட்டிங்: 2.5/5
முரளி ஸ்ரீனிவாசன் (பீப்பிள் புரொடக்ஷன் ஹவுஸ்) ஸ்ரீ ராமச்சந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஸ்வின் குமார் விஜி இணைந்து தயாரித்துள்ள அமிகோ கேரேஜ் படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் வெளியிட எழுதி இயக்கியிருக்கிறார் பிரசாந்த் நாகராஜன்.
இதில் ‘மாஸ்டர்’ மகேந்திரன், ஜி.எம்.சுந்தர்,ஆதிரா, தீபா பாலு, தசரதி, முரளிதரன் சந்திரன், சிரிக்கோ உதயா, மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-எடிட்டர்: ரூபன் – சிஎஸ் பிரேம்குமார்,ஒளிப்பதிவு: விஜயகுமார் சோலைமுத்து, இசை: பாலமுரளி பாலு, கலை: ஸ்ரீPமான் பாலாஜி, ஸ்டண்ட்: டான் அசோக், பாடல் வரிகள்: கு. கார்த்திக், தயாரிப்பு நிர்வாகி: எஸ்.ஆர்.லோகநாதன், விளம்பர வடிவமைப்பு: சபா வடிவமைப்புகள், மக்கள் தொடர்பு : சதீஷ் (எய்ம்)பள்ளியில் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவர் மகேந்திரன் எப்பொழுதும் அரட்டை, கலாட்டா ஜாலி என்று பொழுதை கழிக்கிறார். சிறுவயதிலிருந்தே அவரது ஏரியாவில் இருக்கும் அமிகோ கேரேஜ் என்ற கார் செட்டில் எப்படியாவது உள்ளே சென்று பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார் மகேந்திரன். ஒரு நாள் பள்ளி ஆசிரியர் ஒருவர் மகேந்திரனை அடித்து விட, அமிகோ கேரஜ் நடத்தும் ஜி.எம்.சுந்தரிடம் முறையிட்டு ஆசிரியருக்கு தர்ம அடி கொடுக்க வைக்கிறார். அது முதல் அமிகோ கேரேஜ்க்குள் செல்ல மஹேந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்து அதற்கு ஓனராக இருக்கும் ஜிஎம் சுந்தருடன் நல்ல உறவும் ஏற்படுகிறது. ஸ்கூலில் தொடங்கி கல்லூரி முடியும் வரை தினசரி அங்கு சென்று பேசி அரட்டை அடித்து அங்கு நடக்கும் அனைத்தையும் கற்றுக் கொள்கிறார் மகேந்திரன். ஒரு கட்டத்தில் அந்தப் பகுதியில் பெரிய ரவுடியாக வலம் வருபவரின் அடியாளுக்கும் மகேந்திரனுக்கும் பாரில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை மகேந்திரனின் வாழ்க்கையை எப்படி திசை திருப்பி எதிர்பாராத மாற்றத்தை ஏற்படுத்துகிறது? என்பதே அமிகோ கேரேஜ் படத்தின் கதை.
ருத்ராவாக ‘மாஸ்டர்’ மகேந்திரன் தாதா ரேஞ்சுக்கு சண்டை, காதல், சென்டிமெண்ட் கலந்த கதாபாத்திரத்தை தன் தோளில் சுமந்து தேர்ந்த நடிப்பில் மிளிர்கிறார்.
இவருடன் ஆனந்தாக ஜி.எம்.சுந்தர் அனுபவ நடிப்பால் கவர்கிறார். ஆதிரா, தீபா பாலு, தசரதி, முரளிதரன் சந்திரன், சிரிக்கோ உதயா, மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் அனைவரின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது.
ரூபன் – சி.எஸ் பிரேம்குமார் படத்தொகுப்பு, விஜயகுமார் சோலைமுத்து ஒளிப்பதிவு, பாலமுரளி பாலு இசை, கலை இயக்குனர் ஸ்ரீமான் பாலாஜி, ஸ்டண்ட் டான் அசோக் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் அபரிதமான உழைப்பின் பலன் படத்தின் காட்சிகளுக்கு உதவி செய்துள்ளது.
போதைப்பொருள் பழக்கம் மற்றும் மோசமான சகவாசம் எவ்வாறு அப்பாவி இளைஞர்களை பாதிக்கிறது என்பதையும் ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கை எப்படி கேங்ஸ்டராக உருமாறுகிறது என்பதையும் படம் வெட்ட வெளிச்சாமாக காட்டி இயக்கியிருக்கிறார் பிரசாந்த் நாகராஜன்.அமிகோ கேரேஜ், க்ளைமாக்ஸில் வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் சரியான முடிவுகளை எடுத்து தடம் மாறாமல் இருக்கவேண்டும் என்ற சமூக செய்தியை தெரிவிக்கிறது.
மொத்தத்தில் முரளி ஸ்ரீனிவாசன் (பீப்பிள் புரொடக்ஷன் ஹவுஸ்) ஸ்ரீராமச்சந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஸ்வின் குமார் விஜி இணைந்து தயாரித்து ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் வெளியிட்டுள்ள அமிகோ கேரேஜ் கூடா நட்பு கேடாக விளையும் என்பதை உணர்த்தும் கதை.