777 சார்லி விமர்சனம் : கல் நெஞ்சையும் கரைக்கும், அபரிதமான பாசப் பிணைப்பு கொண்ட இளைஞனுக்கும் நாய்க்கும் நடக்கும் பாசப்போராட்ட பயணத்தை சொல்லும் காவியம் 777 சார்லி | ரேட்டிங் – 3/5

0
40

777 சார்லி விமர்சனம் : கல் நெஞ்சையும் கரைக்கும், அபரிதமான பாசப் பிணைப்பு கொண்ட இளைஞனுக்கும் நாய்க்கும் நடக்கும் பாசப்போராட்ட பயணத்தை சொல்லும் காவியம் 777 சார்லி | ரேட்டிங் – 3/5

பரம்வா ஸ்டூடியோஸ் ஜி.எஸ்.குப்தா மற்றும் ரக்ஷித் ஷெட்டி, ஸ்டோன்பெஞ்ச் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 777 சார்லி. படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிரண்ராஜ்.கே.
இதில் ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி,  ராஜ் பி.ஷெட்டி, பாபி சிம்ஹா, தன்ராஜ்.எஸ்., ஷர்வரி, கோபாலகிருஷண தேஷ்பாண்டே, சல்மான் அகமது, டேனிஷ் சையத், அபிஜித் மகேஷ்  ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை மற்றும் பின்னணி இசை-நோபின் பால், ஒளிப்பதிவு-அரவிந்த் எஸ். காஷ்யப், எடிட்டர்-பிரதீக் ஷெட்டி, பயிற்சியாளர் பிமோத் பி.சி, வசனங்கள்-கே.என்.விஜயகுமார், பாடல் வரிகள்-மோகன்ராஜா, மதுர கவி, முத்தமிழ், சாயீஷ் பொய் பனாண்டிகர், அகெ;சிஸ் டிசிசோசா, இணை தயாரிப்பு-கல் ராமன், எஸ்.சோமசேகர், கல்யாண் சுப்மணியன், இணைத் தயாரிப்பாளர்-பவன் நரேந்திரன், பிஆர்ஒ- நிகில்.
ரக்ஷித் ஷெட்டி தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டு பெரிய காலனியில் குடியிருக்கிறார். இளமையிலேயே பெற்றோரையும், சகோதரியையும் இழந்த நிலையில் மன உளைச்சலால் யாரிடமும் சகஜமாக பழக முடியாமல் இறுக்கமான மனநிலையுடன் தனிமையில் மாலை வேளையில் சிகரெட், மது,உணவு(இட்லி) என்று தன்னிலை மறந்து வாழ்கிறார். இவரிடம் அக்கம்பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் பழக நினைத்தாலும் நெருங்க முடியாத அளவிற்கு மூர்க்கத்தனத்துடன் இருப்பதால் யாரும் இவரை கண்டு கொள்வதில்லை.இதனிடையே லாப்ரடார் வகையைச் சேர்ந்த பெண் நாய் குட்டி ஒன்று இவர் வீட்டருகே ஒதுங்குகிறது. தினமும் ரக்ஷித் ஷெட்டி குப்பைத் தொட்டியில் போடும் ஒரு இட்லிதான் இதற்கு உணவு. கொஞ்ச நாளில் அங்கேயே சுற்றி திரிந்து கொண்டிக்கும் வேளையில் மோட்டார் சைக்கிளில் அடிபட அதை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ரக்ஷித்திற்கு நாய்க்குட்டியை பார்த்துக் கொள்ளும்படி டாக்டர் கூறுகிறார். நாய் வளர்க்க அணுகுபவர்கள் கிடைத்தவுடன் வாங்கிக் கொள்கிறேன் என்று டாக்டர் சொல்ல, வேறு வழியின்றி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.அந்த நாய்க்கு சார்லி என்ற பெயர் வைத்து அழைக்க, அது பண்ணும் சேட்டைகள் முதலில் வெறுப்பாக இருந்தாலும், நாளடைவில் சார்லியுடன் இணை பிரியா நட்பு ரக்ஷித்திற்கு ஏற்படுகிறது. சார்லிக்கு உடம்பு சரியில்லாமல் போக அதை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் செல்ல, அவர் சார்லிக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவும் விரைவில் இறந்து விடும் என்றும் அதற்கு பிடித்தமானவற்றை செய்து சந்தோஷமாக வைத்துக்கொள்ளும்படி சொல்கிறார். பேரதிர்ச்சியாகும் ரக்ஷித் சார்லிக்கு பிடித்தமானவற்றை தேடி தேடி கண்டுபிடிக்கிறார். டிவியில் பனியை காட்டினால் துள்ளிக் குதிக்கும் சார்லியை பனி பிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார். தன்னுடைய சேமிப்பு பணத்தை எடுத்துக் கொண்டு புல்லட் வண்டியை சார்லிக்கு ஏற்றவாறு தயார் செய்து கொண்டு இருவரும் பயணிக்கிறார்கள். வழியில் விலங்குகள் நல ஆர்வலர் சங்கீதாவின் நண்பர் பாபி சிம்ஹாவின் வீட்டில் தங்குகிறார். அங்கே அவரின் செல்ல நாயுடன் சார்லி சந்தோஷமாக இருக்கிறது. அதன் பின் சார்லியை அழைத்துக் கொண்டு செல்லும் ரக்ஷித் பனி பிரதேசத்திற்கு சென்றாரா? சார்லியின் கடைசி ஆசை நிறைவேறியதா? கடினமாக பயணத்தை சார்லி தாக்கு பிடித்ததா? என்பதே நெஞ்சை தொடும் மீதிக்கதை.
ரக்ஷித் ஷெட்டி தர்மாவாக அச்சு அசலாக விரக்தியான வாழ்க்கை வாழும் இளைஞராக வாழ்;;ந்திருக்கிறார். சார்லியின் அன்பை உணர்ந்தவுடன் புகைப்பிடிப்பதை விடும் ரக்ஷித், அதற்காக வாழ தொடங்கும் தருணங்கள், அதன் பின் எதிர்பாராத அதிர்ச்சி சார்லிக்காக இமயமலைக்கு பயணம் மேற்கொள்வது என்று இயல்பான நடிப்பால் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.
சார்லியாக நடித்திக்கும் நாய் அசத்தலான நடிப்பு, அது பிரதிபலிக்கும் அன்பை நாம் புரிந்து கொள்ளும்படி செய்திருப்பது தான் படத்தின் வெற்றிக்கு வழி செய்கிறது. விலங்குகள் சம்பந்தபட்ட படங்கள் பல வந்திருந்தாலும், ஊகிக்கக்சுகூடிய கதைக்களத்துடன் தான் இருக்கும், ஆனால் இந்தப் படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை பார்த்திராத காட்சிகள், நாயின் பாசத்தை உணர்வுபூர்வமாக உணரும் காட்சிகள்  கள்மனதையும் கரைக்கும் குணம் மெய் சிலிர்க்க வைத்து இறுதிக்காட்சியில் கண்களை குளமாக்கி விடுகிறது. இயக்குனர் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னபடி சிறந்த நடிகைக்கான விருதை விலங்குக்கு கொடுத்தால் நிச்சயம் சார்லி நூறு சதவீதம் விருதை தட்டித் செல்லும் என்பது நிஜம். இத்தருணத்தில் இதன் பயிற்சியாளர் பிரமோத்தின் மிகச் சிறந்த பயிற்சி தான் இதற்கு காரணம் அவருக்கும் பாராட்டுக்கள். சேட்டைகள், குறும்புகள், சந்தோஷங்கள், சுட்டித்தனங்கள் அனைத்தும் நிறைந்த சார்லிக்கு விருதுகள் குவியும்.
துணை கதாபாத்திங்களாக சங்கீதா சிருங்கேரி,  ராஜ் பி.ஷெட்டி, பாபி சிம்ஹா, தன்ராஜ்.எஸ்., ஷர்வரி, கோபாலகிருஷண தேஷ்பாண்டே, சல்மான் அகமது, டேனிஷ் சையத், அபிஜித் மகேஷ் ஆகியோர் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்து தனித்து நிற்கிறார்கள்.
அரவிந்த் எஸ்.காஷ்யப் ஆகியோரின் இசை, பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். புல்லட் பயணம், வீட்டில் நடக்கும் சம்பவங்கள், பனி மலையில் குதூகலமாக துள்ளி விளையாடுவது, மலைகள், காடுகள் என்று காட்சிக்கோணங்களில் அசத்தியுள்ளாhர் ஒளிப்பதிவாளர் நோபின் பால்.
எடிட்டர்-பிரதீக் ஷெட்டி முதல் பாதியில் கொஞ்சம் கவனம் செலுத்தி சில காட்சிகளை எடிட் செய்திருந்தால் இன்றும் ஷார்ப்பாக இருந்திருக்கும்.
எழுத்து,இயக்கம்- கிரண்ராஜ்.கே. எழுத்துக்கும், எண்ணத்திற்கும் உயிர் கொடுத்திருக்கும் இயக்குனரின் அபரிதமான கடின உழைப்பு, பொறுமைக்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது. கன்னட படத்தின் தமிழ் டப்பிங் படத்திற்கு மேலும் ப்ளஸ். நேரடி தமிழ் படத்தை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி படத்தின் விறுவிறுப்பான காட்சிகளுக்கும் உண்மையாகவே கை தட்டலாம். இளைஞருக்கும், நாய்க்கும் நடக்கும் ஆத்மார்த்தமான அன்பின் பாலம் படத்தில் காட்சிகளிலும் சரி, சம்பவங்களிலும் சரி சரியாக பயன்படுத்தி புதிய அனுபவத்தை நெகிழச்சியை உண்டாக்கியிக்கும் இயக்குனர் கிரண்ராஜ்ற்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் பரம்வா ஸ்டூடியோஸ் ஜி.எஸ்.குப்தா மற்றும் ரக்ஷித் ஷெட்டி, ஸ்டோன்பெஞ்ச் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து தயாரித்திருக்கும் படத்தில் கல் நெஞ்சையும் கரைக்கும், அபரிதமான பாசப் பிணைப்பு கொண்ட இளைஞனுக்கும் நாய்க்கும் நடக்கும் பாசப்போராட்ட பயணத்தை சொல்லும் காவியம் 777 சார்லி.