3பிஹெச்கே (3​B​HK) சினிமா விமர்சனம்

0
651

3பிஹெச்கே (3​B​HK) சினிமா விமர்சனம் : 3பிஹெச்கே பிள்ளைகள் சாதித்து நிஜமாக்கிய தந்தையின் கனவு கோட்டை | ரேட்டிங்: 3.5/5

சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரித்திருக்கும் 3 பிஹெச்கே படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்ரீ கணேஷ்

இதில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா, ஐஸ்வர்யா, சுப்பு பஞ்சு, ரமேஷ் வைத்யா, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவினர்:-இசை: அம்ரித் ராம்நாத், ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன் பி – ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ், எடிட்டர்: கணேஷ் சிவா, கலை இயக்குனர்: வினோத் ராஜ்குமார் என், ஆடை வடிவமைப்பாளர்: அசோக் குமார் எஸ் – கிருத்திகா எஸ், பாடல் வரிகள்: விவேக், கார்த்திக் நேத்தா, பால் டப்பா, ஸ்ரீ கணேஷ், ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி – அழகியகூதன், ஒலி கலவை: சுரேன் ஜி, ஒப்பனை: சிவா மல்லேஸ்வரராவ், வினோத் சுகுமாரன், ஆடை வாடிக்கையாளர்: ஆர்.கே.தன்ராஜ், வண்ணம்: பிரசாத் சோமசேகர், டிஐ: நாக் ஸ்டுடியோஸ்,மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-அப்துல் நாசர்சென்னையில் தனியார் கம்பெனியில் கணக்கராக வேலை செய்கிறார் நடுத்தர குடும்பத் தலைவர் வாசுதேவன்​ (சரத் குமார்). அவர் தனது மனைவி சாந்தி (தேவயானி), மகன் பிரபு (சித்தார்த்) மற்றும் மகள் ஆர்த்தி (மீதா ரகுநாத்) ஆகியோருடன் வசிக்கிறார். இவர்கள் பல வருடங்களாக வாடகை வீட்டை மாற்றி கொண்டு வாழ்ந்து வருவது வாசுதேவனுக்கு பெரும் சோர்வை ஏற்படுத்தி விடுகிறது. தன் வாழ்நாள் கனவாக 3 பிஎஹெச்கே வீட்டை வாங்க வேண்டும் என்ற கனவோடு பணத்தை சிறுக சிறுக சேமித்து வருகிறார். மகனை தனியார் பள்ளியிலும், மகளை அரசு பள்ளியிலும் படிக்க வைக்கிறார். மனைவி சாந்தி தன்னால் முடிந்த அளவு வீட்டிலிருந்தே பலகாரங்கள் செய்து விற்று குடும்பத்திற்காக உதவி செய்கிறார். இவர்கள் திட்டமிட்டு பணத்தை சேமிக்கும் போது ஒவ்வொரு முறையும் வீடு வாங்க முற்படும் போதும் ஏதாவது செலவுகள் வந்து அந்த கனவு நினைவாகாமல் போகிறது. பின்னர் கல்லூரி செலவு, மருத்துவ செலவு, மகள் திருமண செலவு என்று சேமிப்பது எல்லாம் கறைந்து போகிறது. மகன் பிரபு கல்லூரி படிப்பை முடித்து விட்டாலும் சரியான வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார். தன் நண்பனின் உதவியால் ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தாலும், மனேஜரால் அவமானப்படுத்தப்பட்டு வேலையை விட்டு விடுகிறார். வாசுதேவன் பார்த்த பணக்கார பெண்ணை நிராகரித்துவிட்டு, தன் பள்ளித் தோழியை திருமணம் செய்து கொள்கிறார். இதில் மனவருத்தமடையும் வாசுதேவன் மகனிடம் பேசாமல் வாழ்ந்து வருகிறார். பிரபு தான் விரும்பிய படிப்பை பட்டறையில் வேலை செய்து சம்பாதித்து படித்து முடிக்கிறார். அதே சமயம் மகள் ஆர்த்தி கணவனை விட்டு பிரிந்து கைக்குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கே வந்து விடுகிறார். தன்னால் வாங்க முடியாத வீட்டை தன் பிள்ளைகள் வாங்குவார்கள் என்ற வாசுதேவனின் எதிர்பார்ப்பை கனவை நிவர்த்தி செய்தார்களா? பிள்ளைகளால் சாதிக்க முடிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.வாசுதேவனாக சரத்குமார்  நடுத்தர குடும்ப தலைவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாக கஷ்டப்பட்டு படிக்க வைப்பதும், வீடு வாங்க வேண்டும் என்ற கனவு லட்சியத்தை அடைய முடியாமல் துவண்டு போகும் போது  அமைதியாக இருந்து, அடுத்த கட்டத்திற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டு, மகன், மகள் இருவருக்கும் தன்னால் முடிந்த வரை அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற போராடும் தந்தையாக வாழ்ந்துள்ளார்.

குடும்ப தலைவி சாந்தியாக தேவயானி, கணவன், பிள்ளைகளை அனுசரித்து போகும் சாதாரண பெண்மணியாக அதிர்ந்து பேசாமல் அமைதியாக வந்து போகிறார்.

பிpரபுவாக சித்தார்த்  மாணவர், இளைஞர், குடும்ப தலைவர் என்று தனது நடை, உடை, பாவனைகளை மாற்றி அதற்கேற்றாற்போல் தத்ரூபமான நடிப்பை வழங்கி அசத்தியுள்ளார்.தந்தையின் கனவை நிறைவேற்ற முடியாமல் ஒவ்வொரு தருணத்திலும் உடைந்து அழுது புலம்புவது ஆகட்டும், பின்னர் தைரியமாக தனக்கு பிடித்ததை செய்து வாழ்க்கையில் வெற்றியை ஈட்டி கனவை நிறைவேற்றும் இடத்தில் மனதை தொடுகிறார்.

மகள் ஆர்த்தியாக மீதா ரகுநாத் குடும்பத்தின் தூணாக நின்று, கஷ்டத்தின் போது தைரியம் கொடுத்து முன்னேற வைக்கும் துடிப்பான பெண்ணாக சிறப்பாக செய்துள்ளார்.

கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார், ஐஸ்வர்யா, ஒரு ரியல் எஸ்டேட் முகவராக யோகி பாபு, சுப்பு பஞ்சு, ரமேஷ் வைத்யா மற்றும் விவேக் பிரசன்னா மற்றும் பலர் படத்திற்கு கூடுதல் பலம்.

அம்ரித் ராம்நாத்தின் இசை, கணேஷ் சிவாவின் எடிட்டிங், தினேஷ் பி கிருஷ்ணன் மற்றும் ஜிதின் ஸ்டானிஸ்லாஸின் ஒளிப்பதிவு ஆகிய தொழில்நுட்ப கலைஞர்;களின் உழைப்பு நடுத்தர மக்களின் கனவிற்கு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி மேலும் மெருகேற்றியுள்ளது.

ஒவ்வொரு நடுத்தர குடும்பத்திற்கான கனவு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதே. அதற்காக நான்கு பேர் கொண்ட குடும்பம் எத்தகைய பிரச்சனைகள், இடர்பாடுகள், தடங்கல்களை சந்தித்து தியாகங்கள் செய்து அவர்களின் லட்சியத்தை இரண்டு தலைமுறைகளை கடந்து பிறகு அர்ப்பணிப்புடன் சாதித்து காட்டுகின்றனர் என்பதை பொழுதுபோக்கு அம்சங்களுடன், பாடல்கள், சண்டைகள் இல்லாமல் மனதிற்கு இதமாக சென்டிமெண்ட் கலந்து அனைவருக்கும் பிடிக்கும் விதமாக இயக்கியுள்ளார் ஸ்ரீகணேஷ்.

மொத்தத்தில் சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ள 3பிஹெச்கே பிள்ளைகள் சாதித்து நிஜமாக்கிய தந்தையின் கனவு கோட்டை.