யாத்திசை விமர்சனம் : யாத்திசை வியத்தகு வரலாற்று கதையில் ஒரு மணிமகுடம் ரேட்டிங்: 3.5/5

0
442

யாத்திசை விமர்சனம் : யாத்திசை வியத்தகு வரலாற்று கதையில் ஒரு மணிமகுடம் ரேட்டிங்: 3.5/5

வீனஸ் இன்போடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் சிக்ஸ்ஸ்டார் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் யாத்திசை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தரணி ராசேந்திரன்.

இந்தப் படத்தில் ராஜலட்சுமி, செம்மலர் அன்னம், சேயோன், விஜய் சேயோன், எம்.சந்திரகுமார், குரு சோமசுந்தரம், சக்தி மித்ரன், சுபத்ரா ராபர்ட், ரூபி அழகு மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-சக்கரவர்த்தி, ஒளிப்பதிவு-அகிலேஷ் காத்தமுத்து, படத்தொகுப்பு-மகேந்திரன் கணேசன், ஒலி வடிவமைப்பு-சரவணன் தர்மா, வசனம்-திருமுருகன் காளிலிங்கம், ஆடை- சுரேஷ்குமார், கலை-ரஞ்சித்குமார், சண்டை-ஒம் சிவசங்கர், சி.ஜி.வொர்க்ஸ்-ரவி, செயல் தயாரிப்பு-தேவி, ஒப்பனை-ராகேஷ், ராம், பிஆர்ஒ-நிகில்.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரணதீரன் பாண்டியனுக்கு எதிராக எயினர்கள் பழங்குடி கூட்டத்திற்கும் நடக்கும் அதிகாரம் மற்றும் இழந்த உரிமையை மீட்டெடுக்கும் போராட்டமே கதைக்களம். பாண்டிய அரசன் அரிகேசரியின் மகன் ரணதீரன் (ஷக்தி மித்ரன்). இவர்களுக்கு எதிராக சேரர்கள் போரிட, உறுதுணையாக சோழர்கள் மற்றும் எயினர்கள் உள்ளிட்ட சிறுபழங்குடிகளும் இணைந்து உதவி புரிய, போரை வழிநடத்தும் ரணதீரன் தலைமையிலான பாண்டிய படை வெற்றி பெறுகிறது. இதன் எதிரொலியாக சேரர்கள் நாடு கடத்தப்பட, உதவியாக வந்த சோழர்கள் காட்டுக்குள் தலைமறைவாக போரால் பாதிக்கப்படும் எயினர்கள் பாலை நிலத்திற்கு பாண்டியர்களால் விரட்டப்படுகின்றனர். எயினர் குழுவைச் சேர்ந்த வீரன் கொதி (சேயோன்) தனது குழுவைத் திரட்டி, சோழர்கள் உதவியுடன் ரணதீரனை வெல்ல முடிவு செய்கிறான். இறுதியில் ரணதீர பாண்டியனை எயினர் வீரன் கொதி வென்று வெற்றி வாகை சூடினானா? பாண்டிய பேரரசு வீழ்ந்ததா?  இவர்களின் அதிகார வெறி, ஆடம்பர மோகம் எவ்வாறு குணாதியங்களை மாற்றுகிறது என்பதை வரலாற்று நிகழ்வுடன் நம் கண் முன் நிறுத்தும் கதைக்களம்.

சக்தி மித்ரன் ரணதீர பாண்டியன், சேயோன் எயினர் கூட்ட தலைவன் என்று இருவரின் பாத்திர படைப்பு வீரமும், ஆக்ரோஷமும் நிறைந்தும் போர்கள காட்சிகளில் சண்டையில் தனித்தும் தெரிகின்றனர். புதுமுகம் என்பதை மறக்கும் அளவிற்கு நேர்த்தியான நடிப்பை வழங்கி மனதில் இடம் பிடித்து விட்டனர்.

ராஜலட்சுமி, வைதேகி தேவரடியர்களாகவும், சமர் எயினர் படை போர்வீரனாகவும், குருசோமசுந்திரம் பூசாரியாகவும்,  சுபத்ராஇ சமர் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு இணை கதாபாத்திரங்கள் முக்கியத்துவத்துடன் அமைந்து கதைக்களத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.

ஓவ்வொரு காட்சியிலும் இசையின் சேர்ப்பும், சிறப்பு சப்தங்களும் படத்திற்கு கூடுதல் மெருகை கொடுத்து சங்க கால கட்டத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் சக்கரவர்த்தி.

பாண்டியன், சேரன், சோழன், எயினர், தேவரடியார் போன்றவர்களின் வாழ்க்கை முறை, போர்க்களம், அரண்மனை, சண்டைக்காட்சிகள் என்று படத்திற்கேற்ற தனித்துவமான பிரைமரி நிறக் காட்சிகளை தத்ரூபமாக கொடுத்து தன் காட்சிக் கோணங்களால் அசர வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் அகிலேஷ் காத்தமுத்து.

படத்தொகுப்பு-மகேந்திரன் கணேசன், ஒலி வடிவமைப்பு-சரவணன் தர்மா, வசனம்-திருமுருகன் காளிலிங்கம், ஆடை- சுரேஷ்குமார், கலை-ரஞ்சித்குமார், சண்டை-ஒம் சிவசங்கர், சி.ஜி.வொர்க்ஸ்-ரவி ஆகியோரின் கடின உழைப்பில் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் ஒன்று கூடி ஒரு பிரம்மாண்ட வரலாற்று பின்னணி கொண்ட கதைக்களத்தை வியத்தகு வகையில் படைத்துள்ளனர்.

ஏழாம்; நூற்;றாண்டின் வரலாற்று சரித்தரம், அதிகார மோகம், கூட்டு அரசர்களின் சதி, அவர்களின் நிலை, வெற்றியால் மாறும் அவர்களின் நிலை, சேர, சோழ, பாண்டிய, பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, பேராசை, நவகண்டம் முறை, கொற்றவை பலி தேவரடியார் வாழ்க்கை, சங்க கால வார்த்தைகள், வசனங்கள், அரசர்கள் முதல் பழங்குடி வரை தொடரும் ஆணாதிக்கம், போர்க்களக் காட்சிகள், சங்க காலத்து உடையலங்காரம் நகைகளால் அலங்கரிங்கப்பட்ட விதம் என்று திரைக்கதையை சுவாரஸ்யமாகவும், பட்ஜெட்டிற்குகேற்ற பிரம்மாண்டம் தெரியாதவாறு அசத்தலாக கொடுத்திருக்கும் விதம், புதுமையாகவும், அனைவரும் ரசிக்கும் வண்ணம் தன்னுடைய விடாமுயற்சியால் சிறந்த படத்தை கொடுத்த இயக்குனர் தரணி ராசேத்திரனுக்கு மனம் திறந்த பாராட்டுக்கள். இந்தப் படம் நிச்சயம் பேசப்படும், போற்றப்படும்.

வீனஸ் இன்போடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் சிக்ஸ்ஸ்டார் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் யாத்திசை வியத்தகு வரலாற்று கதையில் ஒரு மணிமகுடம்.