மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரைவிமர்சனம்:  மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விறுவிறுப்புடன், சஸ்பென்ஸ் நிறைந்த புலனாய்வு த்ரில்லரை ஆஹா ஒடிடி தளத்தில் காணலாம் ​| ரேட்டிங்: 3/5

0
375

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரைவிமர்சனம்:  மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விறுவிறுப்புடன், சஸ்பென்ஸ் நிறைந்த புலனாய்வு த்ரில்லரை ஆஹா ஒடிடி தளத்தில் காணலாம் ​| ரேட்டிங்: 3/5

டி பிக்சர்ஸ் மற்றும் தயாள் பத்மநாபன் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன். இத்திரைப்படம் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர்கள்: வரலக்ஷ்மி சரத்குமார், ஆரவ், சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, யாசர், விவேக் ராஜகோபால், அமித் பார்கவ், சுப்ரமணியம் சிவா, யாஷ் ஷெட்டி, ரவி வெங்கட்ராமன், ஸ்ருதி நாயக், ஜோ சைமன், பாலாஜி மற்றும் சந்திராசட்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை: மணிகாந்த் கத்ரி, எடிட்டிங் : ப்ரீத்தி பாபு, ஸ்டண்ட் :  சேத்தன் டிசோசா, பாடல்கள் : தயால் பத்மநாபன், ஸ்ட்ரீமிங் தளம்: ஆஹா தமிழ், பிஆர்ஒ-டிஒன், சுரேஷ்சந்திரா.

பசவண்ணர் அனாதை ஆசிரமத்தில் ஒன்றாக வளர்ந்தவர்கள் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, யாசர், விவேக் ராஜகோபால்.போலீஸ் அதிகாரியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமாரும் மஹத்தும் காதலர்கள். ஒரு நாள் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதியில் மஹத் காணாமல் போகிறார். அதன் பின் மஹத் கொலைசெய்யப்பட்டு இறந்ததை அறிந்து வரலட்சுமி மற்றும் நண்பர்கள் அதிர்கின்றனர். கொலைக்கான காரணம், யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வரலட்சுமி மாருதி நகர்  போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றலாகி வருகிறார். இந்த கொலைக்கான காரணம் பிரபல ரௌடி சுப்பிரமணியம் சிவா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமித் பார்கவ் என்பதை கண்டுபிடிக்கிறார். இவர்களை தீர்த்துக்கட்ட வரலட்சுமி மற்றும் அவரது நண்பர்கள் திட்டம் தீட்டுகின்றனர். இவர்களின் திட்டப்படி போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே இருவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடக்க இதில் சுப்பிரமணியம் சிவா கொல்லப்பட்டு அமித் பார்கவ் காயத்துடன் உயிருக்கு போராட மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஆனால் திட்டம் போட்ட வரலட்சுமி மற்றும் நண்பர்களால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை அதற்கு பதிலாக மர்ம நபரால் நடத்தப்பட்டது என்பதை அறிந்து வரலட்சுமி அதிர்ச்சியாகிறார். இந்த துப்பாக்கிக்சூட்டை விசாரிக்க உதவி கமிஷனர் ஆரவ் நியமிக்கப்படுகிறார். இவரின் விசாரணையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தாரா? வரலட்சுமி மற்றும் நண்பர்கள் மாட்டிக்கொண்டார்களா? இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்த காரணம் என்ன? மகத்திற்கு ஆதரவாக களமிறங்கிய நபர் யார்? என்பதே படத்தின் விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்.

வரலட்சுமி சரத்குமார், ஆரவ், சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, யாசர், விவேக் ராஜகோபால், அமித் பார்கவ், சுப்ரமணியம் சிவா, யாஷ் ஷெட்டி, ரவி வெங்கட்ராமன், ஸ்ருதி நாயக், ஜோ சைமன், பாலாஜி மற்றும் சந்திராசட் அனைவருமே தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி கொலைக்கான மர்மத்தை தக்க வைக்கும் முயற்சியில் சிறப்பாக செய்துள்ளனர்.

சேகர் சந்துருவின் ஒளிப்பதிவு, மணிகாந்த் கத்ரியின் பின்னணி இசை மற்றும் ப்ரீத்தி பாபுவின் படத்தொகுப்பு  படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து விறுவிறுப்பை தக்க வைத்துள்ளது.

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக வைத்து தயாள் பத்மநாபன் கதை எழுதி இயக்கியிருக்கிறார். அனாதை இளைஞனின் கொலைக்கு பழி வாங்க புறப்படும் நான்கு நண்பர்கள் அதை வெற்றிகரமாக செய்து முடித்தார்களா? என்பதை பலவித திருப்பங்களுடன் சுவாரஸ்யம் குறையாமல் நிறைவாக த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் வண்ணம் இயக்கியுள்ளார் தயாரிப்பாளர் தயாள் பத்மநாபன்.

மொத்தத்தில் டி பிக்சர்ஸ் மற்றும் தயாள் பத்மநாபன் தயாரித்துள்ள மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விறுவிறுப்புடன், சஸ்பென்ஸ் நிறைந்த புலனாய்வு த்ரில்லரை ஆஹா ஒடிடி தளத்தில் காணலாம்.