பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்: இன்றைய தலைமுறையினருக்கு நெத்தியடியாக எச்சரிக்கை மணி அடித்து திருந்த சொல்லும் ஒரு தரமான படம் | RATING – 3 STAR

0
145

பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்: இன்றைய தலைமுறையினருக்கு நெத்தியடியாக எச்சரிக்கை மணி அடித்து திருந்த சொல்லும் ஒரு தரமான படம் | RATING – 3 STAR

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் பயணிகள் கவனிக்கவும் படத்தை இயக்கியிருக்கிறார் எஸ்.பி.சக்திவேல்.இப்படம், தமிழில் ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ளது.
இதில் விதார்த், கருணாகரன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன், பிரேம் குமார் ,ஆர்.எஸ்.சிவாஜி, கவிதாலயா கிருஷ்ணன், மூணார் ரமேஷ் , ராமச்சந்திரன் , ஸ்டெல்லா ராஜ் , ரேகா நாயர், நிகிலாஷங்கர், சௌமியா, செல்வம், கார்த்திக் ராஜா,அனிஷா  ஆகியோர் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஷமந்த் நாக், ஒளிப்பதிவு-பாண்டிக் குமார், படத்தொகுப்பு சதிஷ்குமார், கலை ராகுல், உடை வடிவமைப்பு வினயா தேவ், ஒலி கலவை & ஒலி வடிவமைப்பு – ஷமந்த் நாக், பிரவீன் குமார், பாடல் – கவின், ராகவ் கிருஷ்ணா, பிஆர்ஒ-யுவராஜ்.

இரண்டு குடும்பங்களின் கதையாக படம் தொடங்குகிறது. முதலில் செவி மற்றும் பேசும் திறன் அற்ற மாற்றுத்திறனாளி தம்பதியர் விதார்த்-லட்சுமிபிரியா. இவர்களுக்கு பள்ளியில் படிக்கும் மகன் மற்றும் மகள் உண்டு. பள்ளியில் நூலகராக விதார்த் வேலைசெய்ய லட்சுமிபிரியா தனியார் கம்பெனியில் வேலை செய்ய இருவரும் பிள்ளைகளை பாசத்தோடு வளர்க்கின்றனர். நடுத்தர குடும்பம் என்பதால் பணப்பற்றாக்குறை என்றாலும் மகனின் ஆசையான கால்பந்து விளையாட்டில் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்கிறார்.
இரண்டாவது குடும்பம் துபாயில் வேலை செய்யும் கருணாகரன் விடுமுறைக்காக சென்னைக்கு வர, தாயின் வற்புறுத்தலில் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். தன் நெருங்கிய பள்ளி தோழியையே கண்டுபிடித்து காதலை சொல்லி திருமணத்திற்கும் ஏற்பாடு செய்கிறார். ஒருபுறம் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. கருணாகரனுக்கு எப்பொழுதுமே சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாகவும், ஆர்வமாகவும் செய்து சந்தோஷத்தில் திளைப்பவர். விளையாட்டாக பல பதிவுகளை செய்து கொண்டிருக்கிறார்.
இதனிடையே திடீரென்று விதார்த்தின் மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட மருத்துவமனையில் இரண்டு நாள் கண்விழித்து மகளை பார்த்துக் கொள்கிறார். அதனால் வேலைக்கு செல்ல மெட்ரோ ரயிலில் ஏறும் விதார்த் இருக்கையில் அசதியில் படுத்து தூங்கி விடுகிறார். இதனை அந்த மெட்ரோ ரயிலில் பயணிக்கும் கருணாகரன் தன் போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் விதார்த் குடித்திவிட்டு தூங்குவதாக பதிவிட்டு மீம்ஸ் போடுகிறார். இது வைரலாகி வி;ட, விதார்த் செல்லும் இடமெல்லாம் கேலிப்பொருளாக பார்க்கப்படுகிறார். இதனால் விதார்த்தின் மகனும் நண்பர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகிறார். வீட்டிலும் பிரச்னை ஏற்பட, விதார்த் மனஉளைச்சலுக்கு உள்ளாகி போலீசில் புகார் கொடுக்கிறார். இது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்து மாற்றுத் திறனாளியை தவறாக சித்தரித்து வலைதளங்களில் பதிவிட்ட கருணாகரனை தேடுகின்றனர். இதனிடையே கருணாகரன் திருமணமும் நடந்து முடிந்து விட, கைதாகி விடுவோமோ என்ற பயத்தில் கருணாகரன் துபாய்க்கு செல்ல திட்டமிடுகிறார். இறுதியில் கருணாகரனை போhலீஸ் கைது செய்ததா? விதார்த் தன்னை தவறாக சித்தரித்த கருணாகரனுக்கு என்ன தண்டனை கொடுத்தார் என்பதே க்ளைமேக்ஸ்.

விதார்த் மாற்றுத் திறனாளி கதாபத்திரத்தில் சைகையிலும், கீச்சுக்குரலில் தான் சொல்ல வரும் கருத்தை தெளிவாக புரியுமாறு யதார்த்தமாக படத்தில் தேர்ந்த நடிப்பை மென்மேலும் கொடுத்து முக அசைவு, உடல்மொழி, மகிழ்ச்சி, துயரம், சோகம் என்று வெள்ளேந்தி குணத்துடன் அசத்தி மனதை நெகிழ செய்து விடுகிறார். இவரின் கடின உழைப்புக்கான வெற்றி விருதுகள் மூலம் நிச்சயம் கிடைக்கும்.

கருணாகரன் நையாண்டி, கிண்டல் என்று விளையாட்டாக செய்தது வினையாக முடியும் போது அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் தவிப்பில் சிறப்பாக நடித்துள்ளார். பேர் சொல்லும் படமாக கருணாகரனுக்கு இந்த படம் அமைந்துள்ளது.

விதார்த்தின் மனைவியாக லட்சுமி பிரியா சந்திரமௌலி இயல்பாக நடித்துள்ளது பாராட்டுக்குரியது. கருணாகரனின் காதல் மனைவியாக மாசூம் சங்கர் தன் மனதில் உள்ளதை தயங்கி தயங்கி கடைசியில் புரிய வைத்து அழும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.

மற்றும் சரித்திரன்;, இன்ஸ்பெக்டர்  பிரேம்குமார்,ஆர்.எஸ்.சிவாஜி , கவிதாலயா கிருஷ்ணன், மூணார் ரமேஷ் , ராமச்சந்திரன் , ஸ்டெல்லா ராஜ் , ரேகா நாயர், நிகிலாஷங்கர், சௌமியா,செல்வம்,கார்த்திக் ராஜா ,அனிஷா என்று அனைவருக்குமே முக்கியத்துவமான கதாபாத்திரம் என்பதால் உணர்ந்து படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர்.

பாண்டிக் குமாரின் ஒளிப்பதிவு சென்னையையும், இரண்டு வீடுகளில் நடக்கும் சம்பவங்களையும் சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்திருப்பதும் மெட்ரோ ரயிலையும் இணைத்து காட்சிக்கோணங்களில் வலிமை சேர்த்துள்ளார்.

கவின், ராகவ் கிருஷ்ணா  ஆகியோரின் பாடல்வரி;களும், ஷமந்த் நாக்கின் இசையும், பின்னணி இசையும் காட்சியின் உண்மை  தன்மையை புலப்பட வைத்து புரிதலுக்கு உதவுகிறது.

படத்தொகுப்பு சதிஷ்குமார், கலை ராகுல், உடை வடிவமைப்பு வினயா தேவ் ஆகியோரின் பங்களிப்பு கச்சிதம்.

கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து   நல்ல வரவேற்பை பெற்ற மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளியான விக்ருதி படத்தின் ரீமேக் தான் விதார்த் நடித்துள்ள பயணிகள் கவனிக்கவும் படம். மறுஉருவாக்கத்தை மண்ணின் தன்மை மாறாமல் யதார்த்தமாகவும், சுவாரஸ்யத்தோடும் கொடுப்பது தான் படத்தின் வெற்றி என்பதை இயக்குனர்  எஸ்.பி.சக்திவேல் உணர்ந்து அதனை செவ்வென செய்துள்ளார். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் சமூக வளைதளங்களில் இளைய தலைமுறையினர் விளையாட்டாக பதிவிடுவது அதில் சம்பந்தப்படும் இன்னொருவர் வாழ்க்கையில் வினையாக முடிவதை உணர்ந்து திருந்த வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லி  அதற்கான தண்டனையும் உண்டு என்பதையும் சொல்லி புரிய வைத்திருப்பதில் வெற்றி பெறுகிறார் இயக்குனர் எஸ்.பி.சக்திவேல். இந்தப் படத்தில் கதாபாத்திரத்தின் தேர்வும், அதில் நடித்துள்ளவர்களின் பங்களிப்பும் படத்திற்கு பலம் என்றால் படத்தின் டைட்டிலும் படத்திற்கு பொருந்தியுள்ளது கூடுதல் சிறப்பு. ஒவ்வொரு மௌனத்திற்கு பிறகும் ஒரு சோகமான கதை உண்டு என்பதை டேக்லைனாக வைத்துள்ளது சூப்பர்.வெல்டன்.

மொத்தத்தில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் பயணிகள் கவனிக்கவும் கண்ணால் காண்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு நெத்தியடியாக எச்சரிக்கை மணி அடித்து திருந்த சொல்லும் ஒரு தரமான படம்.