பபூன் விமர்சனம் : ஒரு சாதாரண மனிதன் தன் உயிரைக் காப்பாற்ற எவ்வளவு தூரம் செல்வான் என்பதை ஆராய்ந்து கவனத்தை ஈர்க்கக்கூடிய த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

0
381

பபூன் விமர்சனம் : ஒரு சாதாரண மனிதன் தன் உயிரைக் காப்பாற்ற எவ்வளவு தூரம் செல்வான் என்பதை ஆராய்ந்து கவனத்தை ஈர்க்கக்கூடிய த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

ஸ்டோன்   பெஞ்ச்   பிலிம்ஸ்   மற்றும்   பேஷன்   ஸ்டுடியோஸ்   சார்பில் கார்த்திகேயன்   சந்தானம்,   சுதன் சுந்தரம்,   ஜெயராமன்   மற்றும்   கார்த்திக் சுப்பராஜ்   தயாரிப்பில்   பபூன்   படத்தை   இயக்கியிருக்கிறார்   அசோக்   வீரப்பன்.

தென் மாவட்ட கடலோர பகுதி அரசியல்வாதியும் செல்வாக்கு நிறைந்த ரங்கராஜன் தன் கட்சியின் முதல்வரிடம் விரிசல் ஏற்பட்டு வேறு கட்சிக்கு செல்ல திட்டமிடுகிறார்.  இதனை கண்டிக்கும் ஜெயபாலன், ரங்கராஜனுக்கு எதிராக அதிகாரத்தை வைத்து அவருக்கு வலது கரமாக இருக்கும் தாதா தனபாலை பகடைக் காயாக வைக்க திட்டமிடுகிறார். இதனிடையே, காரைக்குடியில், நாடகக் கம்பெனியில் நடித்துக் கொண்டிருக்கும் வைபவ் மற்றும் ஆத்தங்குடி இளையராஜா இருவரும் நாடக தொழில் நலிவடையும் காரணத்தால் வெளிநாடு, செல்ல நினைக்கின்றனர். ஆனால், அதற்கு போதிய பணம் இல்லாததால், வைபவ் மற்றும் ஆத்தங்குடி இளையராஜா இருவரும் தற்காலிகமாக தனபாளின் அடியாள் அன்சாரி  சிபாரிசு செய்ய லாரி டிரைவராக  சேர்கிறார்கள். முதல் நாளே இவர்கள் ஒட்டி சென்ற லாரியில் போதைப் பொருட்கள் இருக்க காவல்துறையிடம் மாட்டிக் கொள்கின்றனர்.  அந்த போதைப் பொருள் லாரியில் எப்படி வந்தது? இறுதியில், இருவரும் நிரபராதி என்று, நிரூபித்தார்களா?  வைபவ்  தன் பழைய  வாழக்கைக்கு  திரும்பினாரா? காவல்துறையினர்  கடத்தல் மன்னனை கண்டுபிடித்தார்களா? என்பது தான்  மீதிக்கதை.

காரைக்குடி வாழ் இளைஞனாக வைபவ், தனது அனுபவ நடிப்பை வசனத்துடன், ஆட்டம், பாட்டத்துடன், கலகலப்பாக, கொடுத்திருக்கிறார். காவல்துறையிடம் சிக்கிக் கொள்ளும் காட்சிகளில் பயத்தையும், பதற்றத்தையும், பிசிறில்லாமல் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக  செல்வதற்கு கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்.

நண்பராக   ஆத்தங்குடி  இளையராஜா தனக்கான கதாபாத்திரத்தை, தெளிவாக ஏற்று நடித்து படத்தில் காமெடி குறையை, சில இடங்களில் தீர்த்து வைத்து, படத்திற்கு பலமாக இருந்து முதல் படத்திலேயே தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.

கதாநாயகி  அனகா  சிறிது நேரம்  திரையில்  தோன்றினாலும்  முக்கியத்துவம் வாய்ந்த  இலங்கை தமிழ்  பெண்ணாக  கச்சிதமாக  பொருந்தியுள்ளார்.

தாதா தனபால் கதாபாத்திரத்தில் ஜோஜோ ஜார்ஜ் சில காட்சிகள் மட்டும் வந்து போனாலும், கதைக்களம் இவரைச் சுற்றியே பின்னப்பட்டு பெரிய பில்டப்புடன் வலம் வந்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.

அரசியல்வாதியாக,  ஆடுகளம் நரேன்,  இன்ஸ்பெக்டராக,  தமிழரன்,  முதல்வராக,  ஆடுகளம் ஜெயபாலன்,  மூணார் ரமேஷ்,  மதுரை விஸ்வநாதன்,  ராஜ்குமார்,  குமார் கணகப்பன்,  கஜராஜ்,  சிந்தார்,  சங்கிலி சக்தி,  சிவபாண்டி,  சௌந்தர்யா,  உமா மகேஷ்வரி,  சரண்யா ரவிச்சந்திரன்,   தங்கம்,   சுபாஷ்,   பழனி,   வேலுசாமி  மற்றும் பலர்   படத்தின்  தூண்களாக  இருந்து  முக்கிய  பங்கு  வகித்துள்ளனர்.

தினேஷ் புருஷோத்தமன்  ஒளிப்பதிவு,  காட்சிக் கோணங்களை நம்பகத்தன்மையோடு படமாக்கி   காரைக்குடி,  ராமநாதபுரம்,  தூத்துக்குடி இடங்களின் கடலழகு கண்களுக்கு விருந்தளிக்கிறது.

சந்தோஷ் நாராயணன்,  கிராமத்து பாடல்கள், கூத்துப் பட்டரை வாத்தியங்கள் என்று இசையில் அதகளம் பண்ணியுள்ளார். பின்னணி இசை அதிக பலம் சேர்த்துள்ளது.

எடிட்டிங் – வெற்றி கிருஷ்ணன்,  விறுவிறுப்பை, படம் முழுவதும், கொடுத்துள்ளார்.

கலை – குமார் கணகப்பன், சண்டை – விக்கி நந்தகோபால், தினேஷ் சுப்பராயன் ஆகியோர்,  படத்திற்கேற்றவாறு  கச்சிதமாக கொடுத்துள்ளனர்.

இரண்டு கூத்துக் கலைஞர்கள் அரசியல் அதிகார விளையாட்டில் கைக்குழந்தைகளாக மாறி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பொய்யாகச் சிக்க வைக்கப்பட போலீஸ் வேட்டையை அவர்கள்  எவ்வளவு காலம் தவிர்க்க முடியும்? என்பதை திரைக்கதையுடன் அசத்தலாக கொடுத்துள்ளார் இயக்குனர் அசோக் வீரப்பன்.  இயக்குனர் அசோக் வீரப்பன் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். பிரச்சனை என்னவென்றால் காட்டப்படாத நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இலங்கை அகதிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நிலை போன்ற பல பிரச்சினைகளைப் பற்றி, அவர் பேச முயன்று அவர் விவாதிக்க முயற்சிக்கும் தலைப்புகள் குறிப்பிடத்தக்கவை.

மொத்தத்தில்,  ஸ்டோன் பெஞ்ச்  பிலிம்ஸ்  மற்றும் பேஷன்  ஸ்டுடியோஸ்  சார்பில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன்,  மற்றும்  கார்த்திக் சுப்பராஜ்  தயாரிப்பில்,  சமகால  பிரச்சனைகள்  மற்றும்  அரசியலை  தீவிரமாக  கையாண்டு,  உறுதியான  க்ளைமாக்ஸ்  உடன்  பஃபூன்  ஒரு  சாதாரண  மனிதன்,  தன்  உயிரைக்  காப்பாற்ற  எவ்வளவு  தூரம்  செல்வான்,  என்பதை  ஆராய்ந்து  கவனத்தை  ஈர்க்கக்கூடிய  த்ரில்லர்.