பன்னிகுட்டி விமர்சனம்: பன்னிகுட்டி சிரிப்புக்கு பஞ்சம் |மதிப்பீடு: 2.5/5

0
355

பன்னிகுட்டி விமர்சனம்: பன்னிகுட்டி சிரிப்புக்கு பஞ்சம் | மதிப்பீடு: 2/5

சூப்பர் டாக்கீஸ் சமீர் பரத்ராம் தயாரித்து லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் பன்னிகுட்டி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அனுசரண்.
இதில் யோகிபாபு. லியோனி, கருணாகரன், லட்சுமிபிரியா, தங்கதுரை, சிங்கம்புலி, ராமர், சாஸ்திகா, டிபிஜே ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-சதீஷ் முருகன், இசை-கே, கலை-என்.ஆர்.சுகுமாரன், எடிட்டிங்-அனுசரண். கதை-ரவி முருகைய்யா, திரைக்கதை- அனுசரண்,ரவி முருகைய்யா, பாடல்கள்-ஞானகரவேல், மணி அமுதவன், சண்டை-பயர் கார்த்திக், பிஆர்ஒ-நிகில்முருகன்.

கருணாகரன் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முற்படும் போது காப்பாற்றப்படுகிறார். இதனால் தன் நண்பனின் அறிவுரைப்படி சாமியார் லியோனியை சந்தித்து பரிகாரம் கேட்க, கருணாகரனை பைக்கை திருடி வருமாறு சொல்கிறார். கருணாகரனும் அப்படியே செய்ய தன் குடும்ப பிரச்னை தீர்வு ஏற்படுவதை அறிந்து மகிழ்கிறார். இந்த மகிழ்ச்சியோடு வண்டியில் வரும் போது வழியில் வெள்ளை பன்னிகுட்டி மேல் மோதி வீடுகிறார். இதை சாமியாரிடம் தெரிவிக்க அவரோ அந்த பன்னிகுட்டியை தேடி கண்டுபிடித்து அதன் மேல் மீண்டும் மோதுமாறு கூறுகிறார். பன்னிகுட்டியை கருணாகரன், சிங்கம்புலி, ராமர், தங்கதுரை ஆகியோர் சேர்ந்து தேடுகின்றனர். இதனிடையே அந்த  பன்னிகுட்டி யோகிபாபுவிற்கு சீதனமாக வந்த காரணத்தால், காணாமல் போன அந்த பன்னிகுட்டியை யோகிபாபுவும் இன்னொருபுரம் தேடுகிறார். இந்த பன்னிகுட்டி யாரு கைக்கு கிடைத்தது? இந்த பன்னிகுட்டியால் நடந்த சம்பவங்கள் என்ன? சாமியார் சொன்னபடி கருணாகரன் செய்தாரா? குடும்ப பிரச்னை தீர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

யோகிபாபு. லியோனி, கருணாகரன், லட்சுமிபிரியா, தங்கதுரை, சிங்கம்புலி, ராமர், சாஸ்திகா, டிபிஜே அனைவருமே கச்சிதமாக செய்தாலும் நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் படத்தில் சிரிப்பு என்பதை தேடி கண்டுபிடிக்க தான் வேண்டும். படத்தில் பன்னிகுட்டி ராணி தான் அழகாக உள்ளது.

சதீஷ் முருகன் ஒளிப்பதிவு படத்தில் சுமார் தான்.

கே இசை ரசிக்கும்படி உள்ளது.

எடிட்டிங், திரைக்கதை எழுதி இயக்கியிருப்பது அனுசரண். பன்னிகுட்டியால் இளைஞனின் வாழ்க்கையில் இழப்புகளும், மாற்றங்களும் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை காமெடி, காதல் கலந்து சொல்ல நினைத்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்து விடுகிறார் இயக்குனர் அனுசரண். பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்த நகைச்சுவை பேச்சு ரசித்ததை கூட இந்த படத்தில் காமெடி என்பது மருந்துக்கும் இல்லை.

மொத்தத்தில் சூப்பர் டாக்கீஸ் பரத்ராம் தயாரித்து லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் பன்னிகுட்டி சிரிப்புக்கு பஞ்சம்.