நெடுநீர் திரைவிமர்சனம் : நெடுநீர் திருந்த நினைக்கும் ரவுடியின் கானல்நீர் வாழ்க்கை | ரேட்டிங்: 2.5/5

0
286

நெடுநீர் திரைவிமர்சனம் : நெடுநீர் திருந்த நினைக்கும் ரவுடியின் கானல்நீர் வாழ்க்கை | ரேட்டிங்: 2.5/5

வி.எஸ்.பாளையம் சார்பில் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தயாரித்திருக்கும் நெடுநீர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர்: கே கே பத்மநாபன்.
இதில் ராஜ்கிருஷ்ணன், இந்துஜா, மா. சத்யா முருகன், மதுரை மோகன், எஸ்.கே.மின்னல் ராஜா, டி.கல்லேரி கே.கனகராஜ், கவுஷிக், மாணிக் சுப்ரமணியம் உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர்
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை: ஹிதேஷ் முருகவேல்,ஒளிப்பதிவாளர் : லெனின் சந்திரசேகரன்,ஸ்டண்ட் மாஸ்டர்: எஸ்.ஆர்.ஹரிமுருகன், மக்கள் தொடர்பு : வெங்கட்

ஒரே கிராமத்தில் வசிக்கும் ராஜ்கிருஷ்ணன், இந்துஜா குடும்ப சூழ்நிலை காரணமாக கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக இருவரும் பிரிந்து வெவ்வேறு திசையில் பயணித்து விடுகின்றனர்.தன்  நண்பனை சந்திக்க செல்லும் வழியில் மூன்று ரவுடிகள் கலாட்டா செய்ய சண்டையில் ஒருவனை அடித்து கொன்று விடுகிறான் ராஜ்கிருஷ்.இதை அந்த வழியே செல்லும் செல்வாக்குமிக்க பிரபல தாதா அண்ணாச்சி (சத்யா முருகன்) ராஜ்கிருஷ்யை மீட்டு அடைக்கலம் தந்து தன்னுடன் அடியாளாக வைத்துக்கொள்கிறார். அண்ணாச்சியை போட்டு தள்ள அவருடைய மகன் சமயம் பார்த்து காத்து கொண்டிருக்கிறான். இதனிடையே எதிர்பாராத சண்டையில் ராஜ்கிருஷ் அண்ணாச்சி மகனை கொன்று விடுகிறான். இதனால் ஆத்தரமடையும் அண்ணாச்சி என்ன செய்தார்? எட்டு வருடங்களுக்கு பின் ராஜ்கிருஷை இந்துஜா சந்தித்தாரா? இருவரின் காதல் கைகூடியதா? அடிதடியை கைவிட்டாரா? எதிரிகளிடமிருந்து உயிர் தப்பித்தாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

ராஜ்கிருஷ்ணன், இந்துஜா, மா. சத்யா முருகன், மதுரை மோகன், எஸ்.கே.மின்னல் ராஜா, டி.கல்லேரி கே.கனகராஜ், கவுஷிக், மாணிக் சுப்ரமணியம் ஆகியோர் அனைவருமே புதுமுகங்கள் என்றாலும் அண்ணாச்சியாக வரும் தாதா படத்தின் வலிமைமிக்க கதாபாத்திரமாக வந்து முத்திரை பதிக்கிறார். மற்றவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.

இசை: ஹிதேஷ் முருகவேல்,ஒளிப்பதிவாளர் : லெனின் சந்திரசேகரன் கடல் சார்ந்த கதைக்களத்தில் தங்கள் பங்களிப்பை திறம்பட கொடுத்துள்ளனர்.

தாதாவிடம் அடியாளாக சேர்ந்து வேலை செய்யும் இளைஞன் தன் வேலையை விட்டு விட்டு தன் காதலியுடன் இணைய நினைக்கும் போது பழி தீர்க்கும் பழைய பகையால் அவன் வாழ்க்கை என்னானது என்பதை இடையே தாதாவின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தையும்  இணைத்து கொஞ்சம் சுவாரஸ்யத்தோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் கே கே பத்மநாபன். முதலில் காட்சிகள் முன்னுக்கு பின் முரணாக தோன்றினாலும் அதன் பின் நடக்கும் சம்பவங்கள் படத்தின் கதையை எளிதாக புரிய வைத்து விடுகிறார் இயக்குனர்: கே கே பத்மநாபன்.

மொத்தத்தில் வி.எஸ்.பாளையம் சார்பில் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தயாரித்திருக்கும் நெடுநீர் திருந்த நினைக்கும் ரவுடியின் கானல்நீர் வாழ்க்கை.