சிவி 2 விமர்சனம்: சிவி 2 மர்மங்கள் நிறைந்த மருத்துவமனையின் திகில் பக்கங்களை கொஞ்சம் மிரட்டலுடன் சொல்லும் படம் |மதிப்பீடு: 3/5

0
421

சிவி 2 விமர்சனம்: சிவி 2 மர்மங்கள் நிறைந்த மருத்துவமனையின் திகில் பக்கங்களை கொஞ்சம் மிரட்டலுடன் சொல்லும் படம் |மதிப்பீடு: 3/5

துளசி சினி ஆர்ட்ஸ் சார்பில் லலிதா கஸ்தூரி கண்ணன் தயாரிப்பில் சிவி 2 படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஆர்.செந்தில்நாதன்.
இதில் யோகி, தேஜ், ஸ்வாதி, சாம்ஸ், தாடி பாலாஜி, கோதண்டம், சந்தோஷ், குமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-பி.எல்.சஞ்சய், எடிட்டர்-எஸ்.பி.அஹமத், இசை-எஃப்ஃஎஸ்.பைசல், பாடல்கள்-அரவிந்த், பாடியவர்- சிமையோ, நடனம்-டயனா, சண்டை-பில்லா ஜெகன், கலை-சுயா, பிஆர்ஒ-குமரசேன்.

நெமிலிச்சேரி போலீஸ் நிலையத்தில் விஷ_வல் கம்யூனிகேசன்ஸ் படிக்கும் மாணவ-மாணவிகள் ஒன்பது பேர் காணாமல் போனதாக பெற்றோர்கள் சார்பாக புகார் கொடுக்கப்பட அவர்களின் தொலைபேசி எண்கள் மூலம் கடைசியாக ஒரு பாழடைந்த கிரிஸ்ட் மருத்துவமனைக்கு போலீசார் விரைகின்றனர்.அங்கே புதரில் சிதறிக் கிடந்த தொலைபேசி, கேமிரா மற்றும் சில பொருட்களை எடுத்து வந்து அண்டர் கவர் ஆபரேஷன்ஸ் நிபுணர் சாம்ஸ்சிடம் போலீசார் கொடுக்கின்றனர். இந்த தொலைபேசிகளை ஆராய தொடங்கும் சாம்ஸ்சிற்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. தெலைந்து போன அந்த ஒன்பது பேரும் சமூக வலைதளங்களில் ஆமானுஷ்ய சக்தி பற்றி போலி விடியோ வெளியிட்டு பார்வையாளர்களை அதிகரிக்க செய்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு தலைவன் தேஜ் சொல்கிறபடி அந்த பாழடைந்த மருத்துவமனைக்கு செல்கின்றனர். எல்லாம் இவர்கள் திட்டமிட்டபடி கச்சிதமாக நடந்தேறி ஒரு லட்சம் பார்வையாளர்கள் மேல் வலைதளத்தை பார்க்கும் சுவாரஸ்த்தை கூட்டுகின்றனர். அதன்பின் அங்கே உண்மையான ஆமானுஷ்ய சக்தி இருப்பதாக உணர்கின்றனர். இறுதியில் இவர்கள் அனைவரையே அந்த ஆமானுஷ்ய சக்தி என்ன செய்தது? அனைவரும் உயிர் பிழைத்தார்களா? இந்த உண்மையை சொல்ல வரும் சாம்ஸ்சிற்கு என்ன நடந்தது? என்பதே க்ளைமேக்ஸ்.

யோகி, தேஜ், ஸ்வாதி, சாம்ஸ், தாடி பாலாஜி, கோதண்டம், சந்தோஷ், குமரன் அனைவருமே படத்திற்கான பங்களிப்பை முடிந்தவரை சிறப்பாக கொடுத்துள்ளனர்.
பொம்மை, பாழடைந்த மருத்துவனையின் திகில் சம்பவங்களை சுவரிலும், பொருட்களிலும் மிரட்டலாக கொடுத்து பயத்தினை கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் பி.எல்.சஞ்சய்.

பைசலின் இசையும், பின்னணி இசையும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
எஸ்.பி.அஹமத் படத்தொகுப்பை படத்தில் சில இடங்களில் தடுமாற்றத்துடன் கொடுத்துள்ளார்.

2007ல் வெளிவந்த சிவி படத்தின் தொடர்ச்சியாக 2022ல் சிவி 2 வெளிவந்துள்ளது.முதல் படத்தில் நந்தினி தன்னை கொன்றவர்களை பழி வாங்க இந்த படத்தில் தன்னை தேடி வந்தவர்களை பழி தீர்க்கும் கதையாக எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஆர்.செந்தில்நாதன். திரைக்கதையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து இயக்கியிருந்தால் திகில் கலந்த படம் சிறப்புடன் பேசப்பட்டிருக்கும். சமூக வலைதளங்கள் எவ்வாறு மக்களை ஏமாற்றுகிறது? பயத்தை காட்சி பணம் சம்பாதிக்கும் வித்தையை தோலுரிந்து காட்டியுள்ளதற்காக பாராட்டலாம்.

மொத்தத்தில் துளசி சினி ஆர்ட்ஸ் சார்பில் லலிதா கஸ்தூரி கண்ணன் தயாரிப்பில் சிவி 2 மர்மங்கள் நிறைந்த மருத்துவமனையின் திகில் பக்கங்களை கொஞ்சம் மிரட்டலுடன் சொல்லும் படம்.