கேஜிஎஃப் (KGF) அத்தியாயம் 2 விமர்சனம்: பிரம்மாண்ட படைப்பில் கற்பனைக்கு எட்டாத கதைக்களத்தில் அனைவரையும் கவரும் விதத்தில் சகாப்தம் படைத்து இந்தியாவின் ஒன்லி ராக்கிங் ஸ்டார் ஆக கேஜிஎஃப் (KGF) அத்தியாயம் 2 படத்தை ஜொலிக்க வைத்து மீண்டும் நிரூபித்துள்ளனர் | ரேட்டிங் – 3.5/5

0
161

கேஜிஎஃப் (KGF) அத்தியாயம் 2 விமர்சனம்: பிரம்மாண்ட படைப்பில் கற்பனைக்கு எட்டாத கதைக்களத்தில் அனைவரையும் கவரும் விதத்தில் சகாப்தம் படைத்து இந்தியாவின் ஒன்லி ராக்கிங் ஸ்டார் ஆக கேஜிஎஃப் (KGF) அத்தியாயம் 2 படத்தை ஜொலிக்க வைத்து மீண்டும் நிரூபித்துள்ளனர் | ரேட்டிங் – 3.5/5

நடிகர்கள்: யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா தண்டின், பிரகாஷ் ராஜ், அர்ச்சனா, ராமச்சந்திர ராஜு, அச்யுத் குமார், மாளவிகா அவினாஷ், வசிஷ்டா என். சிங், ஈஸ்வரிராவ், ராவ் ரமேஷ், டி. ஆம். நாகாபரணா, ஷரன் சக்தி.
ஒளிப்பதிவு: புவன் கவுடா
இசை: ரவி பஸ்ரூர்
எடிட்டர்: உஜ்வல் குல்கர்னி
தயாரிப்பு: விஜய் கிரகந்தூர்
எழுத்து-இயக்கம்;: பிரஷாந்த் நீல்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

கன்னட நடிகர் ராஜ் குமார் ஒரு காலத்தில் தென்னகம் முழுவதும் அறியப்பட்ட ஒரே ஹீரோ. தற்போதைய சூழ்நிலை மற்றும் பான் இந்தியா திரைப்படங்கள் மீதான மோகத்தால், கன்னட நட்சத்திரங்களும் தெற்கு மற்றும் வடக்கில் உள்ள அனைவரையும் கவர்ந்து வருகின்றனர். அதுபோன்று இளம் ஹீரோ யஷ் ஏற்கனவே கேஜிஎஃப் – ‘அத்தியாயம் 1″ மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

கதையைப் பொறுத்தவரை – கேஜிஎஃப் முதல் பாகத்தில் தங்கச் சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை சித்திரவதை செய்து அவர்களின் வாழ்க்கையை அடமானமாக கருதியவர்களின் முடிவை ஹீரோ ராக்கி காண்கிறார். சுரங்கத்தின் உரிமையாளரான கருடனை பின்னர் கொன்றுவிடுகிறார். இதன் மூலம் தொழிலாளர்கள் ராக்கியை கடவுளாக கருதுகின்றனர். தொழிலாளிகள் மத்தியில் ராக்கியின் புகழ் அதிகரிக்கிறது. அவனது செயல் அவர்களுக்கு தைரியத்தை அளிக்கிறது. தொழிலாளர்களை தன் சொந்த மக்களாகவே நடத்துகிறார். ஒரு நாள் சுரங்கங்களின் ராஜாவாக வேண்டும் என்று கனவு காணும் ராக்கி,  பின்னர் ஒவ்வொரு தங்கச் சுரங்கங்களுக்கும் தனது வழியைக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறார். அவரை அங்கிருந்து வெளியேற்ற எதிரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதே சமயம் ஆதீரா உயிருடன் இருப்பதும் தெரிய வருகிறது. ஆதீரா தனது படைபளத்தை காட்டி ராக்கியை சுட்டு வீழ்த்துகிறார். ஆதீராவை எதிர்கொள்ள இது நேரமில்லை என்பதை உணர்ந்த ராக்கி துபாய்க்குப் புறப்படுகிறார். ராக்கி அங்கிருந்து எப்படி கேஜிஎஃப்க்கு திரும்புகிறார்? ஆதிராவுக்கு என்ன பாடம் சொல்லிக் கொடுக்கிறார்? சிபிஐ அதிகாரியின் ஆலோசனையின் பேரில் கேஜிஎஃப்-ஐ தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வர பிரதமர் எடுக்கும் முயற்சி நிறைவேறியதா? என்பதுதான் மீதிக்கதை.

முதல் பாகத்தைப் போலவே இதிலும் யஷ் ராக்கியாக ஸ்டைலிஷாக, கோட் சூட்டை விதவிதமாக அணிந்து தனக்கே உரித்தான மேனரிசத்தில் டயலாக்குகள் சொல்லி அசத்துகிறார். ராக்கி பாய் கதாபாத்திரத்தை யஷ் தவிர் வேறு யாரும் செட் ஆக மாட்டார்கள் என்பது அவரது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதிரடி நிகழ்வுகளிலும் வீரத்திலும் ஈடு இணையற்ற தனித்துவத்தை வெளிப்படுத்தி, உணர்ச்சிகரமான காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.

ரவீனா டாண்டன் பிரதமராக தனது அற்புதமான நடிப்பிலும் ஈர்க்கிறார்.

சஞ்சய் தத் கதாபாத்திரம் படத்தின் வேகத்திற்கு திருப்புமுனை. பாலிவுட் ஸ்டார் ஹீரோ சஞ்சய் தத் நடிப்பு  ஆதீரா  கேரக்டருக்கு அவர் போட்டிருந்த மேக்கப்பில் இருந்து அந்த கேரக்டரைப் போலவே இருக்கும் விதம் வரை எல்லாமே அருமையாக பொருந்தியுள்ளது.

இந்த இரண்டாம் பாகத்தில் சிபிஐ அதிகாரியாக ராவ் ரமேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்தில் கதை சொல்லும் அனந்த் நாக் கதாபாத்திரத்தில் அவரது மகனாக பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். நாயகி -ஸ்ரீநிதி ஷெட்டி, பி .எஸ். அவினாஷ், தாரக் பொன்னப்பா, வினய் பிடப்பா, லக்கி லக்ஷ்மன், ஐயப்பா பி. அச்சுத் குமார், சர்மா, அர்ச்சனா ஜாய்ஸ், மாளவிகா அவினாஷ், ஈஸ்வரிராவ் போன்றோரும் அருமையாக நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் ராக்கிக்கும் ஆதிராவுக்கும் இடையே நடக்கும் சண்டைக் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. பாராட்டுக்குள் அன்பறிவு மாஸ்டர்.

முதல் பாகத்தைப் போலவே படத்தின் உயிர்நாடியும் ஒளிப்பதிவுதான்.ஒவ்வொரு காட்சியையும் ஒளிப்பதிவாளர் புவன் கவுடா மிக சிறப்பாக திரையில் காட்சிப்படுத்தியுள்ளார். ரவி பாசூர் தனது இசையால் காட்சிகளின் தீவிரத்தை இரட்டிப்பாக்குகிறார். பின்னணி இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளம் மற்றும் படக்குழுவினரைவைத்து எந்த இடத்திலும் சலிப்பில்லாமல் படத்தை அழகாக எடிட் செய்திருக்கிறார் உஜ்வால்.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திரைக்கதை சிறப்பாக அமைத்து, ஆதீரா கேரக்டரையும் ஒரு ரேஞ்சில் காட்டி படத்தை சுவாரஸ்யமாக இயக்கி இருக்கிறார் பிரசாந்த் நீல்.ராக்கி பாய் ஃபாஸ்டாஃபில் வளரும் விதத்தை மிகவும் சுவாரஸ்யமாகக் காட்டினார். இருப்பினும் ஹீரோ எலிவேஷன்களை ஓவர் ரேஞ்சில் காட்டுவது சற்று சங்கடமாகத் தெரிகிறது. குறிப்பாக ப்ரீ க்ளைமாக்ஸில் பாராளுமன்றத்திற்குள் சென்று ஒரு முன்னாள் பிரதமரைக் கொல்வது சினிமாத்தனமாக உணர செய்துள்ளது. முதல் பாகத்தைப் பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறையாமல் பார்த்துக் கொள்கிறார் பிரஷாந்த் நீல். வெல்டன்.

மொத்தத்தில் ஹோம்லே பிலிம்ஸ் தயாரித்து பிரம்மாண்ட படைப்பில் கற்பனைக்கு எட்டாத கதைக்களத்தில் அனைவரையும் கவரும் விதத்தில் பிரசாந்த் நீல் மற்றும் யஷ் இருவரும் சேர்ந்து ஆக்ஷனில் சகாப்தம் படைத்து இந்தியாவின் ஒன்லி ராக்கிங் ஸ்டார் ஆக கேஜிஎஃப் (KGF) அத்தியாயம் 2 படத்தை ஜொலிக்க வைத்து மீண்டும் நிரூபித்துள்ளனர்.