குலசாமி திரைவிமர்சனம்: குலசாமி தீயவர்களை பழி வாங்கும் கொலைசாமி | ரேட்டிங்: 2/5

0
319

குலசாமி திரைவிமர்சனம்: குலசாமி தீயவர்களை பழி வாங்கும் கொலைசாமி | ரேட்டிங்: 2/5

எம்ஐகே புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்திருக்கும் குலசாமி படத்தை குட்டிப்புலி சரவண சக்தி இயக்கியிருக்கிறார்.

இதில் விமல், தான்யா ஹோப், வினோதினி, கீர்த்தனா, போஸ் வெங்கட், முத்துப்பாண்டி, சூர்யா, ஜனனி பாலு, லாவன்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- வசனம்-விஜய் சேதுபதி, ஒளிப்பதிவு-வைட் ஆங்கிள் ரவிசங்கரன், எடிட்டர்- கோபி கிருஷ்ணா, இசை – பின்னணி பாடகர் மஹாலிங்கம், சண்டை-கனல் கண்ணன், மக்கள் தொடர்பு தியாகு.

மதுரையில் சூரசங்கின் தங்கை கலை (கீர்த்தனா) நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்று கிராமத்தினரின் உதவியுடன் மருத்துவக்கல்லூரியிpல் சேருகிறார். அங்கேயே அண்ணன் சூரசங்கு ஆட்டோ ஒட்டிக் கொண்டு பாசமுடன் தங்கையை படிக்க வைக்கிறார்.இந்நிலையில் தங்கை கூட்டு பலாத்காரத்தில் இறக்க நேரிட அண்ணன் சூரசங்கு மனமுடைந்து போகிறார். இதனிடையே இன்னொரு மாணவி ஒருவர் கூட்டு பலாத்கரத்தில் இறக்க, விசாரணை போலீஸ் அதிகாரி கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களில் ஒருவரைப் பிடிக்கிறார்.அந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் வர குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன், பாய்ந்து வரும் நாயால் குற்றவாளி கொல்லப்படுகிறார். இந்த கொலையை செய்தது சூரசங்கு என்று போலீஸ் சந்தேகத்தில் பிடித்து விசாரித்தாலும், ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்படுகிறார். அதே சமயம் அந்த மருத்துவ கல்லூரியின் பெண் பேராசிரியர் பணம் கட்ட முடியாமல் தவிக்கும் ஏழை மருத்துவம் படிக்கும் மாணவிகளை குறி வைத்து பணக்கார ஸ்பான்சர்களிடம் சிபாரிசு என்ற பெயரில் பாலியல் ரீதியாக மாணவிகளை மாட்ட வைத்து பணம் சம்பாதிக்கிறார். இதனை கண்டுபிடிக்கும் காயத்ரி(தான்யா ஹோப்) சூரசங்குவிடம் நடந்தவற்றை கூறுகிறார்.அனைத்து வீடியோ ஆதாரங்களையும் காயத்ரியிடம் இருக்க அவரை குறி வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தும் கும்பல் கொலை செய்ய முற்படுகிறது. காயத்ரி இவர்களிடமிருந்து தப்பித்தாரா? சூரசங்கு காயத்ரியை காப்பாற்றனாரா? வில்லன் கும்பலை குலசாமியாக மாறி பழி வாங்கினாரா? என்பதே மீதிக்கதை.

ஆட்டோ ஒட்டுனர் சூரசங்குவாக விமல் பாசக்கார அண்ணனாக, கோபம், இயலாமை, பழி வாங்குதல், ஆக்ஷன் களத்தில் அனைத்திலும் முடிந்த வரை சிறப்பாக செய்துள்ளார்.

மருத்துவ மாணவி காயத்ரியாக தானியா ஹோப் கதாநாயகியாக முக்கிய ஆதரங்களை திரட்டி வில்லன்களிடமிருந்து தப்பிக்க போராடும் இடங்களில் இயல்வாக செய்திருக்கிறார்.

மருத்துவக் கல்லூரி பேராசிரியராக வினோதினி, பாதிக்கப்படும் மருத்துவக் கல்லூரி மாணவியாக லாவண்யா மாணிக்கம், விமலின் தங்கையாக கீர்த்தனா, காவல்துறை உயர் அதிகாரியாக போஸ் வெங்கட், கதாநாயகனின் மாமாவாக இயக்குநர் ஷரவணஷக்தி, கொடூர வில்லனாக இயக்குநர் ஷரவணஷக்தி மகன் சூர்யா ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு உறுதுணையாக உள்ளது.

ஒளிப்பதிவு-வைட் ஆங்கிள் ரவிசங்கரன், எடிட்டர்- கோபி கிருஷ்ணா, இசை – பின்னணி பாடகர் மஹாலிங்கம், சண்டை-கனல் கண்ணன் ஆகிய சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இருந்தாலும் படத்தின் தோய்வை சரி செய்ய முடியவில்லை.

ஆட்டோ ஒட்டுனரில் வாழ்க்கையில் நடக்கும் தனிப்பட்ட இழப்பும், பாலியல் ரீதியாக பெண்களை சீண்டும் சமூக தீமைகளுக்கு எதிராக போராடும் இவரின் பங்களிப்பை திரைக்கதையாக சொல்லியிருக்கும் இயக்குனர் குட்டிப்புலி சரவணஷக்தியின் முயற்சி அழுத்தமான பதிவாக சொல்லியிருந்தால் பேசப்பட்டிருக்கும். பேராசிரியை நிர்மலாதேவி, பொள்ளாச்சி சம்பவங்களை இணைத்து இத்தகைய குற்றங்களை செய்தவர்களை கடுமையாக தண்டனை நிறைவேற்றவேண்டும் என்ற நோக்கத்தையும் கருத்தையும் பதிவு செய்திருந்தாலும் யூகிக்கக்கூடிய திரைக்கதை, நாடகத்தன்மை, பலவீனமான கதைக்களம் சரியானவற்றை சொல்ல தவறியிருக்கிறது.

மொத்தத்தில் எம்ஐகே புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்திருக்கும் குலசாமி தீயவர்களை பழி வாங்கும் கொலைசாமி.