குற்றம் புரிந்தால் விமர்சனம்: குற்றம் புரிந்தால் தப்பிக்க முடியாது தண்டனை நிச்சயம் | ரேட்டிங்: 2.5/5

0
220

குற்றம் புரிந்தால் விமர்சனம்: குற்றம் புரிந்தால் தப்பிக்க முடியாது தண்டனை நிச்சயம் | ரேட்டிங்: 2.5/5

அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆத்தூர் ஆறுமுகம், சுகந்தி ஆறுமுகம் தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டிஸ்னி.
இதில் ஆதிக்பாபு, அர்ச்சனா, எம்.எஸ்.பாஸ்கர், நாடோடிகள் அபிநயா, அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-கே.கோகுல், இசை-கே.எஸ்.மனோஜ், எடிட்டிங்-எஸ்.பி.அஹமத், சண்டை-மிரட்டல் செல்வா, கலை-வினோத்குமார், பாடல்கள்-கபிலன், கார்த்திக் நேதா, நடனம் இருஷன், பிஆர்ஒ-கோவிந்தராஜ்.

மாமா எம்.எஸ்.பாஸ்கர் ஆதரவில் வளரும் ஆதிக் பாபு, அவரின் கல்லூரியில் படிக்கும் மகள் அர்ச்சனாவை காதலிக்க,  இருவருக்கும் திருமணம் செய்து வைக்க எம்.எஸ்.பாஸ்கர் முடிவு செய்கிறார். அப்போது மூன்று பேர் வீட்டுக்குள் புகுந்து ஆதிக் பாபுவையும் எம்.எஸ்.பாஸ்கரையும் ஆயுதங்களால் அடித்து போட்டு விட்டு அர்ச்சனாவை பாலியல் வன்கொடுமை செய்ய, இதில் அர்ச்சனா இறந்து விடுகிறார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீளும் ஆதிக் பாபு மாமாவும், அர்ச்சனாவும் ரவுடிகள் தாக்குதலில் இறந்துபோன தகவலும், இதற்கு போலீஸ் அதிகாரியும், அரசு மருத்துவரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை அறிந்து துடித்து போகிறார். உண்மையான கொலையாளிகளை பிடித்து தண்டனை கொடுக்க முடியாமல் தவிக்கும் ஆதிக் பாபு, சட்டத்தை தன் கையில் எடுத்து போலீஸ் அதிகாரியையும், அரசு மருத்துவரையும் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் செல்கிறார். இந்த கொலைகளை செய்தவனை பிடிக்க இன்ஸ்பெக்டர் நாடோடிகள் அபிநயா களமிறங்குகிறார். தேடுதல் வேட்டையில் ஆதிக் பாபு, போலீசில் மாட்டினாரா? மற்ற மூன்று பேரை கொலை செய்ய செல்லும் ஆதிக் பாபு அவர்களை பழி தீர்த்தாரா? இல்லையா இறுதியில் என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.

புதுமுக நாயகனாக ஆதிக் பாசமான மாமா, நேசிக்கும் காதலி என்று சந்தோஷ வாழ்க்கை ஒரு நொடியில் சுக்குநூறாக உடையும் தருணமும், அதிலிருந்து மீள முடியாமல்  மனஉளைச்சலில் தவிப்பதும், கொலையாளிகளை கண்டுபிடித்து பழி வாங்குவது, போலீசிடமே தடையமும், சவாலும் விட்டு செல்வது என்று அனைத்து காட்சிகளிலும் இயல்பாகவும், உணர்வுபூர்வமாகவும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

காதலியாக அர்ச்சனா, மாமாவாக எம்.எஸ்.பாஸ்கர், இன்ஸ்பெக்டராக நாடோடிகள் அபிநயா ஆகியோர் நடிப்பு கச்சிதம். இவர்களுடன் அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் போன்றோர் அவரவர் கதாபாத்திரங்களை உணர்ந்து நிறைவாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவு-கே.கோகுல், இசை-கே.எஸ்.மனோஜ், எடிட்டிங்-எஸ்.பி.அஹமத், சண்டை-மிரட்டல் செல்வா, கலை-வினோத்குமார் ஆகியோரின் பங்களிப்பு க்ரைம் த்ரிலிலிங் அனுபவத்தை கொடுத்திருப்பது சிறப்பு.

தன் மாமா குடும்பத்தை கொன்றவர்களை சட்டம் தண்டிக்கவில்லை என்றாலும், குற்றம் செய்தவர்களை தேடி கண்டுபிடித்து கொல்ல துடிக்கும் ஆக்ரோஷ நாயகனைப் பற்றிய கதையில் போலீஸ் துரத்தல் காட்சிகளுடன் திரைக்கதையமைத்து கொஞ்சம் சுவாரஸ்யம் கலந்து சில காட்சிகளை கொடுத்துள்ளார் இயக்குனர் டிஸ்னி.

மொத்தத்தில் அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆத்தூர் ஆறுமுகம், சுகந்தி ஆறுமுகம் தயாரித்திருக்கும் குற்றம் புரிந்தால் தப்பிக்க முடியாது தண்டனை நிச்சயம்.