அம்முச்சி 2 விமர்சனம்: அம்முச்சி 2 கிராமத்து சூழ்ச்சியிலிருந்து காதலியை மீட்டெடுத்து கல்வி பயில அனுப்பும் நகரத்து ஆசான் | ரேட்டிங் – 3/5

0
77

அம்முச்சி 2 விமர்சனம்: அம்முச்சி 2 கிராமத்து சூழ்ச்சியிலிருந்து காதலியை மீட்டெடுத்து கல்வி பயில அனுப்பும் நகரத்து ஆசான் | ரேட்டிங் – 3/5

இரும்புகள் நெட்வொர்க் தயாரிப்பில் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜேஷ்வர் காளிசாமி. ஆஹா ஒடிடி தளத்தில் வெளிவந்துள்ளது.

சின்னமணி, மித்ரா ரங்கராஜ், சாவித்திரி, மீனா, தனம் சந்திரன், ஸ்ரீஜா, வைத்தீஸ்வரி, ரோகிணி நடராஜன், அருண்குமார், சசி செல்வராஜ், பிரசன்னா பாலசந்திரன், சந்திரகுமார், ராஜேஷ் பாலசந்திரன், மனோஜ் பீட்ஸ், தினேஷ்,  சிவன் மூர்த்தி, முத்தமிழ், சஷ்டி பிரநேஷ், தினேஷ் குமார், விக்னேஷ்வர், செல்லா, ஆதன் குமார், அப்பா ரவி, மாணிக்கம், ராம்குமார், பிரபாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்;கள்:- இசை-விவேக் சாரோ, ஒளிப்பதிவு-சந்தோஷ்குமார் எஸ்.ஜே., எடிட்டர்-கண்ணன் பாலு, கலை- ஆசை தம்பி, ஒலி வடிவமைப்பு-விக்ரமன், பாடல்கள்-கிருஷ்ணகாந்த், ராஜேஷ்வர் காளிசாமி, சண்டை-ரவிராஜ், உடை-நவீனா,தீபிகா, தயாரிப்பு மேற்பார்வை-வினோத் குமார். எஸ்., மக்கள் தொடர்பு-யுவராஜ்.

அம்மா, தங்கையை ஏமாற்றிவிட்டு அருண் தன் காதலி மித்ராவை பார்க்க கோடங்கிபாளையம் வந்து தன் நண்பன் சசி வீட்டில் தங்குகிறான். ஏற்கனவே சசி கிராமத்தில் வெட்டியாக ஊர் சுற்றி நக்கல் நய்யாண்டி செய்து  கிராமத்து பஞ்சாயத்தில் மாட்டிக்கொண்டு தன் தந்தை பிரசன்னா பாலசந்திரனிடம் அடியும், திட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறார். இதனிடையே காதலி மித்ரா மேற்படிப்பு படிக்க ஆசைப்பட ஆனால் அவளது தந்தை அனுமதி தராமல் பக்கத்து கிராமத்து முரட்டு ரவுடி மசநாய் மணியுடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். இதனை வெறுக்கும் மித்ரா தன் காதலன் அருணிடம் சொல்லி வருத்தப்படுகிறார். இதற்கு முடிவு கட்ட நினைக்கும் அருண், மித்ராவின் தந்தையிடம் பேச முயல சண்டையில் முடிகிறது.கம்பு சண்டை, மல்யுத்தம், ரேக்ளா, உறிஅடி, முரசு அடி ஆகிய ஐந்து போட்டியில் மணியுடன் அருண் போட்டி போட்டு ஜெயித்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று மித்ராவின் தந்தை நிபந்தனை போட அதற்காக தன் நண்பர்களுடன் சேர்ந்து அருண் பயிற்சி செய்கிறார். சசியின் பாட்டி சின்னமணி அருணை எப்படியாவது தோற்கும்படி செய்து கிராமத்தை விட்டே அனுப்ப தன் பேரன் சசியுடன் சேர்ந்து திட்டம் போடுகிறார். மசநாய் மணி, சின்னமணி அம்முச்சி இந்த இருவரையும் அருண் சமாளித்து போட்டியில் வெற்றி பெற்றரா? தன் காதலியின் ஆசையை நிறைவேற்றினாரா? என்பதே கதையின் சாராம்சம்.

ம்முச்சியாக தன் தேனொழும் பேச்சு பேசி, எதிர்மறையாக சிந்தித்து அருணை பழி வாங்கும் காட்சிகளாகட்டும், தன் மகனை திட்டிவிட்டு பேரனை கொஞ்சுவதாகட்டும், இறுதியில் மனம் மாறி உதவும் அசத்தலான நடிப்பாலும் முக்கியமான கதாபாத்தித்தில் மிளிர்கிறார் சின்னமணி.

காதலியாக மித்ரா படிப்பதையே தன் குறிக்கோளாக வைத்துக் கொண்டு தன் பெற்றோரிடம் அசால்டாக பேசி எதிர்ப்பை துணிச்சலாக தன் செய்கையினாலும், நடவடிக்கைகளினாலும் காட்டும் விதம் நகைச்சுவை நிறைந்து அசத்தும் கிராமத்து பெண்ணாக சூப்பராக மிகையில்லாமல் நடித்துள்ளார் மித்ரா ரங்கராஜ்.

அருண்குமார் ஏற்கனவே பரிச்சயமான முகம் என்றாலும், கதாபத்திரத்தை உணர்ந்து தன் தாயாரை ஏமாற்றி விட்டு செல்வதாகட்டும், கோவாவில் இருப்பது போல் நடிக்க அதுவே வினையாக முடிந்து முழிப்பதாகட்டும், தன்னை எதிரியான நினைக்கும் அம்முச்சியை தன் அன்பால் திருத்துவதாகட்டும், போட்டியில் சிரமங்களுக்குடையே வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைப்பை தந்திருப்பதில் அருண்குமார் தனித்து நின்று படத்தில் அனைவரையும் கவர்ந்து ஜெயித்திருக்க்கிறார்.

பிரசன்னா பாலசந்திரன் சமீபத்தில் பார்த்த படங்களில் நல்ல முதன்மையான கதாபாத்திரங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவரின் தடையில்லா வசனத்தில் குரல் வளம், குணசித்திர நகைச்சுவை கலந்த நடிப்பு சீரியஸான காட்சிகளில் கூட நகைச்சுவை கலந்து நடிக்கும் பாங்கை திறம்பட கையாள்கிறார். இவரின் திறமைக்கு பிரகாசமான எதிர்காலம் நிச்சயம் உண்டு. வரும் காலங்களில் முக்கிய நடிகராக வலம் வருவார் என்பதில் ஐயமில்லை.

சாவித்திரி, மீனா, தனம் சந்திரன், ஸ்ரீஜா, வைத்தீஸ்வரி, ரோகிணி நடராஜன்,  சசி செல்வராஜ், சந்திரகுமார், ராஜேஷ் பாலசந்திரன், மனோஜ் பீட்ஸ், தினேஷ்,  சிவன் மூர்த்தி, முத்தமிழ், சஷ்டி பிரநேஷ், தினேஷ் குமார், விக்னேஷ்வர், செல்லா, ஆதன் குமார், அப்பா ரவி, மாணிக்கம், ராம்குமார், பிரபாகரன் ஆகியோர் பன்பட்ட கிராமத்து மண் சார்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இசை-விவேக் சாரோ, ஒளிப்பதிவு-சந்தோஷ்குமார் எஸ்.ஜே., எடிட்டர்-கண்ணன் பாலு, கலை- ஆசை தம்பி ஆகியோர் கிராமத்து கதைக்கேற்ற பங்களிப்பை சிறப்புடன் கொடுத்து வெற்றிக்கு வழி வகை செய்துள்ளனர்.

சாதாரண காதல் கதையில் காதலன் தன் காதலியின் படிக்கும் ஆசையை கிராமத்து மக்களுடனும், காதலியின் பெற்றோர்களுடன் போராடி இறுதியில் பல தடைகற்களை தாண்டி கல்லூரிக்கு அனுப்பும் உன்னதமான செயலை நட்பு, சூழ்ச்சி, காமெடி கலந்து கிராமத்து போட்டிகளுடன் திரைக்தையை அமைத்து கிராமத்து விருந்துடன் தடபுடல் படையலை கொடுத்து அசத்தியுள்ளார் இயக்கும் ராஜஷ்வர் காளிசாமி. சமூக அக்கறையுடன் ஒரு பெண்ணிற்கு முதலில் படிப்பு அதன் பின் தான் திருமணம் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருப்பதில் தனித்து நிற்கிறார். வெல்டன்.

மொத்தத்தில்  இரும்புகள் நெட்வொர்க் தயாரிப்பில் அம்முச்சி 2 கிராமத்து சூழ்ச்சியிலிருந்து காதலியை மீட்டெடுத்து கல்வி பயில அனுப்பும் நகரத்து ஆசான்.