அக்கா குருவி விமர்சனம்: இரட்டைவால்குருவியான பாசமிகு தளிர்கள்

0
159

அக்கா குருவி விமர்சனம்: இரட்டைவால்குருவியான பாசமிகு தளிர்கள்

மதுரை முத்து மூவீஸ் மற்றும் கனவு தொழிற்சாலை தயாரித்து தமிழகம் முழுவதும் பிவிஆர் சினிமாஸ் வெளியீட்டில் வந்துள்ள படம் அக்கா குருவி. இப்படத்தை உயிர், மிருகம், சிந்து சமவெளி ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் சாமி குழந்தைகளை மையமாக வைத்து இயக்கியுள்ளார்.
இதில் மாஸ்டர் மஹின், பேபி தவியா, வி.எஸ்.குமார், தாரா ஜகதாம்பி, ஹரீஷ்,மீனாட்சி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு-உட்பல் வி.நாயனார், கலை-கே.வீரசமர், எடிட்டிங்-மணிகண்டன் சிவகுமார், பிஆர்ஒ- ஜான்சன்.

அண்ணன் தேவா, தங்கை சாரா இருவரும் கான்வென்ட் பள்ளியில் படிக்கிறார்கள். ஏழ்மையில் இருந்தாலும் தந்தை  குழந்தைகளை சிரமப்பட்டு படிக்க வைத்து அன்புடன் பார்த்துக்கொள்கிறார். நோய்வாய்பட்டிருக்கும் தாய்க்கும் குழந்தைகள் உதவி செய்கின்றனர். இதனிடையே தங்கையின் ஷ_வை அண்ணன் தொலைந்து விடுகிறான். தந்தையிடம் ஷ_ வாங்க காசு கேட்க பயப்படுகின்றனர். இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் சாரா தவிக்க, அதற்கு மாற்று வழியாக காலைப் பள்ளியில் படிக்கும் தங்கையை ஷ_வை அணிந்து செல்லுமாறும், மதியபள்ளியில் படிக்கும் அண்ணன் தேவா அதன் பிறகு அணிந்து செல்வதாக யோசனை கூற, அதன்படி இருவரும் மாற்றி மாற்றி அந்த ஒரு ஜோடி ஷ_வை அணிந்து செல்கின்றனர். தங்கை பள்ளி முடிந்ததும் ஒடி வந்து கொடுக்க, அண்ணன் அதை அணிந்து கொண்டு பள்ளிக்கு வேகமாக ஒடி சென்றாலும், தாமதமாகவே செல்ல நேரிடுகிறது. இதைப் பார்க்கும் தலைமை ஆசிரியர் அண்ணனை எச்சரிக்கிறார். அதனால் உண்டியலில் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருக்கும் கொஞ்ச காசை எடுத்துக்கொண்டு ஷ_ வாங்க அண்ணன் செல்ல, ஷ_வின் விலை அதிகமாக இருக்க திரும்பி வருகிறான். அப்பொழுது தான் பள்ளியில் மராத்தான் ஒட்டப்பந்தயம் பற்றி கேள்விப்பட்டு அதில் சேர்கிறான். அந்த மராத்தானில் மூன்றாவதாக வந்தால் பரிசாக ஷ_ கிடைக்கும் என்ற அறிவிப்பால் ஒட்டப்பந்தயத்தில் சேர்ந்து ஒடுகிறான். இறுதியில் அண்ணன் மராத்தானில் ஜெயித்து ஷ_ வென்றானா? தங்கைக்கு ஷ_ கிடைத்ததா? இந்த சம்பவம் இவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்றத்தை ஏற்படுத்தியது? என்பதே படத்தின் மீதிக்கதை.

மாஸ்டர் மஹின், பேபி தவியா இருவரும் படத்தில் மிகையான நடிப்பை கொடுக்காமல் குழந்தைகளாகவே அளவாக இயல்பாக நடித்திருப்பது தான் படத்தின் பலம். வி.எஸ்.குமார், தாரா ஜகதாம்பி, ஹரீஷ்,மீனாட்சி மற்றும் பலர் படத்திற்கு ஆணிவேறாக இருந்து உறுதுணையாக தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் கதிர் மற்றும் வர்ஷா பொல்லம்மா வந்து போகிறார்கள்.
இசைஞானி இளையராஜா கதைக்கேற்ற இசையிலும், பின்னணி இசையிலும் தன் பழைய இனிமையான பாடல்களாலேயே அழகிய உயிரோட்டமாக கொடுத்து அசத்தியுள்ளார்.

கொடைக்கானலின் அழகையும், மலைகளின் நடுவே பள்ளத்தில் இருக்கும் கிராமம், மலை ரோடுகள், பள்ளி,அண்ணன்-தங்கை பள்ளிக்கு செல்ல எடுக்கும் ஒட்டம், ஒட்டப்பந்தயத்தில் மாணவர்கள் ஒடும் காட்சிகள் என்று பார்த்து பார்த்து காட்சிகளை உள்வாங்கி அழகாக படம் பிடித்திருக்கும் உட்பல் வி.நாயனார் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

கலை-கே.வீரசமர் கச்சிதம் , எடிட்டிங்-மணிகண்டன் சிவகுமார் இடையூறாக இருக்கும் கொஞ்சம் காதல் காட்சிகளை கத்திரி போட்டிருக்கலாம் மற்றபடி சிறப்பாக செய்துள்ளார்.

மஜித் மஜிதி இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஈரானியப் படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறு ஆக்கமாக இயக்குனர் சாமி இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அண்ணன் கதிர், தங்கை வர்ஷா பொல்லம்மா தங்கள் வாழ்க்கையில் 1997ல் நடந்த சம்பவங்களை விவரித்து, அதன் தாக்கத்தில் அயராது உழைத்து பின் வாழ்க்கையில் ஜெயித்து ஜனாதிபதியிடம் பரிசு வாங்க செல்லும் தருணத்தில் நினைவு கூறுவது போல் கதைக்களத்தை அமைத்து சிறப்பாக ஷ_வை மையமாக வைத்து இயக்கியுள்ளார் சாமி. குழந்தை பருவம் தான் படத்தில் பிரதானமாக காட்டப்பட்டு அவர்களின் பாசத்தை விவரித்திருக்கும் விதம் அருமை. பாசத்திற்கு அடையாளமாக இருக்கும் அக்கா குருவி டைட்டிலுக்கான விளக்கத்தையும் படத்திலேயே கொடுத்து விடுகிறார் இயக்குனர் சாமி. பாராட்டுக்கள்.

மொத்தத்தில் மதுரை முத்து மூவீஸ் மற்றும் கனவு தொழிற்சாலை தயாரித்திருக்கும் அக்கா குருவி குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டிய வித்தியாசமான கதைக்களத்தில் அசத்தும் இரட்டைவால்குருவியான பாசமிகு தளிர்கள்.