ஹாஸ்டல் விமர்சனம்: ‘ஹாஸ்டல்” காமெடி கலாட்டா

0
191

ஹாஸ்டல் விமர்சனம்: ‘ஹாஸ்டல்” காமெடி கலாட்டா

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர்,  சதீஷ், நாசர், முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, கேபிஒய் யோகி, கிரிஷ்குமார் ஆகியோர் நடித்து சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கும் படம் ஹாஸ்டல். இசை-போபோ சாஷி, ஒளிப்பதிவு-பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் – ராகுல், பிஆர்ஒ-ஏய்ம் சதீஷ்.

முனீஸ்காந்த் வார்டனாக இருக்க கண்டிப்பு மிகுந்த நாசர் நடத்தும் கல்லூரி மாணவர்கள் விடுதியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் அசோக்செல்வன். தன் நண்பனுக்கு உதவ ரவிமரியாவிடம் கடன் வாங்கி மாட்டிக் கொள்கிறார். பணத்தை திரும்ப கேட்கும் ரவிமரியாவிடமிருந்து தப்பிக்க பிரியா பவானி சங்கரிடம் பணம் வாங்குகிறார். பிரியா பவானி சங்கர் ஒரு நாள் இரவு மட்டும் மாணவர்கள் விடுதியில் தங்க வேண்டும் என்று வேண்டுகோளோடு பணத்தை கொடுக்கிறார். அதற்கு சம்மதிக்கும் அசோக்செல்வன் பிரியா பவானி சங்கரை யாருக்கும் தெரியாமல் விடுதிக்குள் அழைத்து வந்தாரா? பின் அவரை பத்திரமாக வெளியேற்றினாரா? ஏன்? எதற்கு? பிரியா பவானி சங்கர் விடுதிக்குள் வந்தார்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், ரவிமரியா, சதீஷ், நாசர், முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, கேபிஒய் யோகி, கிரிஷ்குமார் மற்றும் பலர் படத்திற்கு உறுதுணையாக இருந்து நடித்துள்ளனர்.

இசை-போபோ சாஷி, ஒளிப்பதிவு-பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் – ராகுல் ஆகியோர் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக செய்துள்ளனர்.

2015ல் வெளியான அடி கப்பியரே கூட்டாமணி என்ற மலையாள படத்தின் ரீமேக் தான் ஹாஸ்டல். ஆண்கள் விடுதியில் நுழைந்த பெண் எப்படி அங்கிருந்து வெளியே வந்தார் என்பதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை வைத்து காமெடி கலந்து பேய் சென்டிமெண்டுடன் இயக்கியுள்ளார் சுமந்த் ராதாகிருஷ்ணன்.

மொத்தத்தில் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில்  ‘ஹாஸ்டல்” காமெடி கலாட்டா.