ஷூட் தி குருவி விமர்சனம் : ஷூட் தி குருவி வித்தியாசமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் விறுவிறுப்பும், த்ரில்லிங்கும் நிறைந்துள்ளது | ரேட்டிங்: 3/5

0
433

ஷூட் தி குருவி விமர்சனம் : ஷூட் தி குருவி வித்தியாசமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் விறுவிறுப்பும், த்ரில்லிங்கும் நிறைந்துள்ளது | ரேட்டிங்: 3/5

ராசா ஸ்டூடியோ மற்றும் ஷார்ட் பிலிக்ஸ் சார்பில் கே.ஜே.ரமேஷ், சஞ்சீவி குமார் தயாரித்துள்ள ஷூட் தி குருவி படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மதிவாணன்.

இதில் அர்ஜை -குருவி ராஜன்,   சிவ ஷா ரா -கோவிந்த், ஆஷிக் {ஹசைன் – ஷெரிப், ராஜ்குமார் ஜி – பேராசிரியர்  மித்ரன், சுரேஷ் சக்ரவர்த்தி – துறவி, மணி வைத்தி – முன்னாள் பெண் தோழி கணவர், சாய் பிரசன்னா – சூர்யா, ஜிப்ஸி நவீன் – ரவி ஆகியோர் அந்தந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை : மூன்ராக்ஸ், ஒளிப்பதிவு : பிரண்டன் சுஷாந்த்,படதொகுப்பு : கமலக்கண்ணன் கே, கலை இயக்குனர் : சரவணன் பிரான்மலை, ஒலி வடிவமைப்பு : ஜான் பெனியல், பூபாலன் தங்கவேல்,  பிரவீன்,பாடல்கள் : எஸ்.கே சொல்லிசை கவிஞன், சண்டை பயிற்சி : ஓம் பிரகாஷ், ஆடை வடிவமைப்பு : பூர்வா ஜெயின், தயாரிப்பு மேற்பார்வை : பி. செல்லதுரை, தலைமை தயாரிப்பு மேற்பார்வை : எஸ். சேதுராமலிங்கம்,மக்கள் தொடர்பு : யுவராஜ்

மங்களூரிலிருந்து இரண்டு ஆராய்ச்சி மாணவர்கள் பேராசிரியர்,எழுத்தாளர் மித்ரனை சந்தித்து 2020ல் பெரிய கேங்ஸ்டரான குருவிராஜனைப் பற்றி ஆராய்சிசி கட்டுரை எழுத குறிப்புகளை கேட்கின்றனர். அவர்களுக்கு முதலில் தகவல்களை கொடுக்க மறுக்கும் மித்ரன் பின்னர் அவர்களிடமிருந்த கிழிந்த சில துண்டுகளில் குருவி ராஜனின் புகைப்படத்தை பார்த்து அவர்களுக்கு உதவ முன் வருகிறார்.  இரண்டு கதாபாத்திரங்களின் தனிப்பட்ட கதையில் இக்கதையை சொல்ல ஆரம்பிக்கிறார். அதில் ஒருவர் கேங்க்ஸ்டர் அர்ஜை, இரண்டாவதாக வருபவர் ஆஷிக்.

சிறு வயதில் கேங்ஸ்டர் அன்வர் பாயிடம் தஞ்சமடையும் ராஜன், தன் திறமையாலும், கடின உழைப்பாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக முடிக்க, அனைத்து அன்டர்; கிரவுண்ட் வேலைகளுக்கு இவரை நாடுகின்றனர். இதனால் அன்வர் பாய் கோபமடைய, அவரையே ஒரு தருணத்தில் போட்டுத்தள்ளி, பெரிய கேங்ஸ்டராக உருவாகி குருவி ராஜன் என்ற பெயருடன் நிழல் உலகமே பயப்படும் அளவிற்கும், போலீசாலும் நெருங்க முடியாத அளவுக்கு பெரிய கேங்ஸ்டராக உருவெடுக்கிறார்.

அதே சமயம் மற்றோரு நபர் ஷெரிப்பிற்கு 27 வயதிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற ஐந்து லட்சம் தேவைப்படுகிறது. இதனால் பணம் புரட்ட முடியாமல் சோகத்தில் இருக்கும் ஷெரிப்பின் கனவில் தோன்றும்  துறவி சுரேஷ் சக்கரவர்;த்தி 5 கட்டளைகளை செய்து முடித்தால் நன்மைகள் கிடைக்கும் என்று கூறுகிறார். அந்த டார்கெட் நடக்கும் போது, எதிர்பாராதவிதமாக குருவிராஜனை அவர் கேங்க்ஸ்டர் என்று அறியாமலேயே தாக்கி விடுகிறார் ஷெரிப். அதன்பிறகு, அங்கிருந்து நண்பர் மூலம் தப்பித்து வரும் ஷெரிப் கோவிந்திடம் தஞ்சமடைகிறார். அதன் பின் குருவிராஜனிடமிருந்து ஷெரிப் தப்பித்தாரா? கோவிந்த் ஷெரிப்பிற்கு உதவி செய்தாரா? எதிர்பாராத நடந்த சம்பவம் என்ன? குருவிராஜானால் ஷெரிப்பை பழி வாங்க முடிந்ததா? ஐந்து கட்டளைகளையும் nவெற்றியுடன் நிறைவேற்றினாரா? இறுதியில் நடந்த திருப்பம் என்ன? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

ஷா ரா, விஜே ஆஷிக், அர்ஜை ஆகிய மூன்று பேரை சுற்றியே கதைக்களம் நகர்கிறது. இதில் அர்ஜை அடக்கமாகவும், அழுத்தமாகவும் கேங்ஸ்டராக மிகையில்லா நடிப்பில் மூலம் கவர்கிறார். ஆஷிக் செய்யும் சம்பவம் தான் அவரின் வாழ்க்கையையே புரட்டி போட்டு குருவிராஜனை எதிர்பாராமல் சந்தித்து அடித்து அவரையே போட்டுத் தள்ளும் அளவிற்கு அப்பாவியாகவும், அதே சமயம் நகைச்சுவையோடு ஷாராவுடன் சேர்ந்து செய்யும் அளப்பரை கவனிக்க வைத்து அவரது நடிப்பு ஈர்க்கிறது. ஷாரா இவர் இல்லை என்றால் படத்தில் கலகலப்பு இல்லாமல் சீரியஸான கதைக்களமாக சென்றிருக்கும். இவரின் உதவியால் தான் ஷெரிப் குருவிராஜானிடன் தைரியமாக சண்டை போடும் அளவிற்கு தெம்பை கொடுத்து சாதிக்க வைக்கிறார். இவர்களின் கதாபாத்திரம் முக்கிய பங்கு வகித்து படத்தின் கதையை மும்முரமாக எடுத்துச் செல்ல பெரும் உதவி புரிகிறது.

இவர்களுடன் ராஜ்குமார் ஜி – பேராசிரியர்  மித்ரன், சுரேஷ் சக்ரவர்த்தி – துறவி, மணி வைத்தி, சாய் பிரசன்னா – சூர்யா, ஜிப்ஸி நவீன் – ரவி ஆகியோர் துணை கதாபாத்திரங்கள் பக்க  மேளங்கள்.

இசை : மூன்ராக்ஸ், ஒளிப்பதிவு : பிரண்டன் சுஷாந்த்,படதொகுப்பு : கமலக்கண்ணன் கே, கலை இயக்குனர் : சரவணன் பிரான்மலை, , எஸ்.கே சொல்லிசை கவிஞன் பாடல்கள், ஓம் பிரகாஷ் சண்டை அமைப்பு, பூர்வா ஜெயின் ஆடை வடிவமைப்பு படத்தில் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் பங்களிப்பால் படம் விறுவிறுப்பாகவும், ஆக்ஷன் காட்சிகள் பொருத்தமாகவும் அமைந்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

2032ல் ஆரம்பிக்கும் கதைக்களத்தில் ஆராய்ச்சிக்காக குருவிராஜனை பற்றி தெரிந்து கொள்ள புறப்படும் 65 நிமிட திரைக்கதையை குறுகிய நேரத்தில் அழகாகவும், சுருக்கமாகவும் ஒரு கேங்ஸ்டர் கதையை எடுப்பது சிரமம். ஆனால் அதை சிறப்பாக கொடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளார் இயக்குனர் மதிவாணன். இணையான கதைகள் ஒரு தொடர்பைக் கண்டுபிடிக்கும் விதம் நம் ஈடுபாட்டைத் தூண்டுகிறது. இரண்டாம் பாதி நம்மை இருக்கையின் விளிம்பில் வைத்திருக்க முயற்சிக்கிறது, க்ளைமாக்ஸ் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் முடிகிறது. படத்தைத் தயாரிக்க பெரிய பட்ஜெட் எதுவும் எடுக்கப்படவில்லை கொடுக்கப்பட்ட தயாரிப்பு மதிப்புடன், படம் ஒரு கண்ணியமான பொழுதுபோக்கு இறுதிவரை கவர்ந்திழுக்கிறது. அதிக பட்ஜெட்டைக் கொடுத்து கதைக்களத்தை அதிக நேரம் எடுத்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இன்னும் சிறப்பாகச் செய்யும் என்று உறுதியளிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ள படம் இது. ரன் டைம் அதன் மிகப்பெரிய நன்மை என்றாலும், அந்த எண்ணத்தை அப்படியே வைத்துக்கொண்டு, ஷ_ட் தி குருவி ஒரு குறுகிய மற்றும் வேடிக்கையான பொழுதுபோக்காகும், இது எதிர்பார்ப்பதை விட அதிகமாகவும், கொடுக்கக்கூடியதை விட குறைவாகவும் கொடுக்கிறது.. நகைச்சுவை, க்ளைமேக்ஸ் திருப்பம், ஒரே அறையில் நடக்கும் சண்டைக் காட்சிகள், குருவிராஜன் என்பது பிராண்ட் அது அப்படியே தான் இருக்கும் ஆட்கள் தான் மாறிக்கொண்டே இருப்பார்கள் என்பது போன்ற வசனங்களும் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.

மொத்தத்தில் ராசா ஸ்டூடியோ மற்றும் ஷார்ட் பிலிக்ஸ் சார்பில் கே.ஜே.ரமேஷ், சஞ்சீவி குமார் தயாரித்துள்ள ஷூட் தி குருவி வித்தியாசமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் விறுவிறுப்பும், த்ரில்லிங்கும் நிறைந்துள்ளது.