விருமன் – திரைப்பட விமர்சனம்: குடும்ப பாசத்தை உணர்த்தும் மாஸான விருமனா நிமிர்ந்து நிற்கிறான் | ரேட்டிங்: 3.5|5

0
492

விருமன் – திரைப்பட விமர்சனம்: குடும்ப பாசத்தை உணர்த்தும் மாஸான விருமனா நிமிர்ந்து நிற்கிறான் | ரேட்டிங்: 3.5|5

நடிகர்கள்: கார்த்தி, அதிதி சங்கர், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, கருணாஸ், வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி, மைனா நந்தினி, இந்திரஜா.
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு : எஸ்.கே.செல்வகுமார்
ஸ்டன்ட்: அனல் அரசு
கலை: ஜாக்கி
எடிட்டிங்: வெங்கட்
இயக்கம்: முத்தையா.
தயாரிப்பு: சூர்யா மற்றும் ஜோதிகா – 2டி எண்டர்டெயின்மெண்ட்
மக்கள் தொடர்பு: ஜான்சன்தாசில்தாராக இருக்கும் முனியாண்டி (பிரகாஷ் ராஜ்), சரண்யா பொன்வண்ணன் தம்பதியர்களுக்கு 4 மகன்கள். இதில் கடைசியாக பிறந்த மகன் தான் விருமன். விருமன் சிறுவனாக இருக்கும் போதே அவனுடைய அம்மா தற்கொலை செய்துகொள்கிறார். தன் அம்மாவின் மரணத்திற்கு தாசில்தாராக இருக்கும் அப்பா முனியாண்டி (பிரகாஷ் ராஜ்) தான் காரணம் என அவரைக் கொல்லத் துடிக்கும் சிறு வயது விருமன் (கார்த்தி). கோர்ட்டில் தாய்மாமாவுடன் வளரட்டும் எனத் தீர்ப்பாக, ராஜ்கிரண் பாதுகாப்பில் வளர்க்கிறார். விருமனின் மற்ற மூன்று அண்ணன்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு அப்பாவுக்கு பயந்து அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். முனியாண்டி, விருமனை ஏமாற்றி முத்துலட்சுமி பெயரில் இருக்கும் சொத்தை அபகரிக்க முயற்சிக்கிறார். 25 வருடங்களுக்குப் பிறகு மறுபடி சொந்த ஊருக்கு வருகிறார் விருமன். ஒரு பக்கம் அப்பாவை பழிவாங்க நினைக்கும் விருமன் தன் மூன்று அண்ணன்களுக்கு இருக்கும் பிரச்னைகளையும் ஒவ்வொன்றாக சரி செய்ய முயல்கிறார். பணத்தை பெரிதாக நினைக்கும் ஆணவ அப்பாவை என்ன செய்தார்  விருமன்? அப்பா மகனை ஏமாற்றி சொத்தை அபகரித்தாரா? மூன்று அண்ணன்கள் நிலைமை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
விருமனாக கார்த்தி, வேஷ்டியை தூக்கி கட்டிய கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி படத்தை தன் தோளில் சுமந்து கொண்டு கம்பீரமாக செய்திருக்கிறார். உடல் மொழி, நடை, உடை என அனைத்திலும் மண் மணம் மாறாத வண்ணம் யதார்த்தமான சாமானியனாக மாறியுள்ளார். ஆக்ஷன் காட்சியில் அதகளம் செய்ததோடு செண்டிமெண்ட், ரொமான்ஸ் காட்சிகளில் தூள் கிளப்பி பட்டைய கிளப்பி உள்ளார்.
கோபக்கார திமிர் பிடித்த, ஆணாதிக்க அப்பாவாக பிரகாஷ்ராஜ், முதிர்ச்சியான நடிப்பால் மீண்டும் நிரூபித்துள்ளார்.
கதாநாயகியாக அதிதி ஷங்கர் புதுமுகம் போல் இல்லாமல் கிராமத்து பெண்ணாக கதையின் தேவைக்கு ஏற்றவாறு நடனம் மற்றும் நடிப்பால் இளம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
சாந்த குணத்துடன் அன்பை பொழியும் தாய் சரண்யா பொன்வண்ணன், பாசக்கார தாய் மாமாவாக ராஜ்கிரண், குத்துக்கல்லு சூரி, பந்தல் பாலு கருணாஸ் ஆகியோர் உறவுகளையும் அரவணைத்துக் கொள்ளும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.
‘ஏழரை’ கோஷ்டி ஆர்.கே.சுரேஷ் மதுரை மண்ணுக்கு ஏற்ற வில்லன்.
விருமாயி பாட்டி வடிவுக்கரசி, அதிதியின் அப்பா இளவரசு, நைனா சிங்கம்புலி, குத்தாலம் ஓ.ஏ.கே.சுந்தர், பதினெட்டாம் பாண்டியன் ஜி.எம்.சுந்தர், குழவிக்கல்லு இந்திரஜா, முத்துலட்சுமி அருந்ததி, மகன்கள் கவிஞர் வசுமித்ர, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், மருமகள் மைனா நந்தினி, ஆகியோர் ஒவ்வொரு குடும்பத்திலும் பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட பாத்திரங்களாகவே சிறப்பாக செய்திருக்கிறார்கள். இவர்களில் மைனா நந்தினி கைதட்டல்களை பெறுகிறார்.யுவனின் இசையில் பாடல்கள் மற்றும் அனல் அரசுவின் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிக்கு ஏற்ற பின்னணி இசை, செல்வகுமாரின் ஒளிப்பதிவு, ஜாக்கியின் கலை வடிவமைப்பு இவர்கள் மூவரும் நம்மை கிராமத்துக்கே கொண்டு சென்று வந்த உணர்வை கொடுத்துள்ளனர். இவர்களின் பங்களிப்பு திரைக்கதையில் முக்கியமான பலமாக இருந்தது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.தந்தை மகன் உறவில் மோதல்தான் கரு. அதில் அண்ணன், தம்பி பாசம், காதல், மோதல், குடும்ப வன்முறை என மண் மணம் மாறாத வண்ணம் கொத்தான கமர்ஷியல் கலந்து நம்மை விரைவாக கதைக்களத்திற்குள் இழுத்து செல்லும் திரைக்கதை அமைத்து பக்கா குடும்ப படமாக படைத்துள்ளார் இயக்குனர் முத்தையா.
மொத்தத்தில் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ள விருமன் குடும்ப பாசத்தை உணர்த்தும் மாஸான விருமனா நிமிர்ந்து நிற்கிறான். கமர்சியலாக வசூலில் அள்ளி குவித்து வாகை சூடுவான்.