விக்ராந்த் ரோனா விமர்சனம்: ‘விக்ராந்த் ரோனா’ கற்பனை கலந்த திகிலான அனுபவத்தை தந்து சாகச ஆக்ஷனில் 3 டி தொழில்நுட்பத்தில் மிரட்டும் படம் | ரேட்டிங்: 2.5/5

0
607

விக்ராந்த் ரோனா விமர்சனம்: ‘விக்ராந்த் ரோனா’ கற்பனை கலந்த திகிலான அனுபவத்தை தந்து சாகச ஆக்ஷனில் 3 டி தொழில்நுட்பத்தில் மிரட்டும் படம் | ரேட்டிங்: 2.5/5

நடிப்பு: கிச்சா சுதீப், நிருப் பண்டாரி, நீதா அசோக், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ரவி சங்கர் கவுடா, மதுசூதன் ராவ் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு: வில்லியம் டேவிட்
இசை: பி அஜனீஷ் லோக்நாத்
இணை தயாரிப்பாளர்: அலங்கார பாண்டியன்
தயாரிப்பாளர்கள்: ஜாக் மஞ்சுநாத், ஷாலினி மஞ்சுநாத்
எழுதி இயக்கியவர்: அனுப் பண்டாரி மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா.

கொமரத்து என்ற கற்பனைக் கிராமத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தாய் நள்ளிரவில் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காரில் தன் மகளுடன் கொமரோட்டுக்குச் செல்வதில் இருந்து கதை தொடங்குகிறது. அவர்கள் செல்லும் வழியில் திடீரென கார் மீது ஏதோ ஒன்று மோதுகிறது. ஓன்றும் புரியாத நிலையில் மகளைக் கொன்று மரத்தில் தொங்கவிடுவதிலிருந்து கதை தொடங்குகிறது. கொமரத்து கிராமத்தில் தொடர் கொலைகள் நடக்கின்றன. அந்த ஊரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் உள்ள கிணற்றில் சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. பிரம்மராட்சசன் அவர்கள் அனைவரையும் கொன்று விடுவதாக கிராம மக்கள் நம்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்த வீட்டின் வளாகத்தில் கொலைகள் நடக்கின்றன. சிறு குழந்தைகள் காணாமல் போய் காட்டில் உள்ள மரங்களில் பிணங்கள் போல தொங்குகிறார்கள். அந்த கிராமத்து பெரியவர் ஜனார்த்தன் கம்பீர் (மதுசூதன்) மற்றும் அவரது தம்பி ஏக்நாத் கம்பீர் (ரமேஷ் ராய்) ஆகியோரும் இதையே கிராம மக்களிடம் சொல்லி அந்த வீட்டை நோக்கி யாரும் செல்ல விடாமல் தடுக்கிறார்கள். ஆனால் ஒரு முறை அந்த கிராமத்தைச் சேர்ந்த எஸ் ஐ அந்த பாழடைந்த வீட்டிற்குச் சென்றபோது.. தௌ;ளரி கிணற்றில் தலையற்ற முண்டமாக தொங்குகிறார். அவரது உடல் பகுதி மட்டுமே உள்ளது, ஆனால் அவரது தலை காணவில்லை. இந்த கொலை வழக்கை தீர்ப்பதற்காக ஒரு புதிய எஸ் ஐ விக்ராந்த் ரோனா (கிச்சா சுதீப்) ஊருக்கு வருகிறார்.  இந்நிலையில் அங்கு கிராமத் தலைவர் ஜனார்தனின் (மதுசூதன்) அவரது மகன் சஞ்சு கோவில் நகைகளை திருடி சிறு வயதில் ஊரை விட்டு ஓடி விடுகிறான்.விக்ராந்த் ரோனா கிராமத்திற்குள் நுழைவதற்கு சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன மகன் சஞ்சு (நிரூப் பண்டாரி) திடீரென்று திரும்பி வருகிறார். ஜனார்த்தன் தனது நண்பரின் மகள் அபர்ணாவின் (நீதா அசோக்) திருமணத்தை தனது வீட்டில் நடத்த தயாராகிறார். சஞ்சுவும் அபர்ணாவும் காதலிக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த வழக்கை தனக்கே உரிய பாணியில் விக்ராந்த் ரோனா விசாரித்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணையின் போது அவர் சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்கிறார். அந்த கிராமத்தைச் சேர்ந்த பல பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்டது தெரிகிறது. இந்த விசாரணையில் தெரியவந்த உண்மை என்ன? மேலும் குழந்தைகள் கொலைக்கு யார் காரணம்? விக்ராந்த் ரோனாவின் விசாரணைக்கும் சஞ்சுவுக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கொலைகளுக்கு அந்த ஊருக்கும் விக்ராந்த் ரோனாவுக்கு என்ன தொடர்பு? ஊருக்கு புதிதாக வந்த சஞ்சு (நிரூப் பண்டாரி) யார்? கிராம மக்களை பயமுறுத்தும் பிரம்ம ராட்சசன் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

இந்த மர்ம திரில்லர் படத்தின் கதைக்கு சிறந்த ஒன் மேன் ஷோ ஸ்டைலான தேர்வாக கிச்சா சுதீப். மிக எளிதாக பெர்ஃபார்மென்ஸ் கொடுத்து சில எமோஷனல் காட்சிகளும், ஆக்ஷன் எபிசோடுகளில் சண்டைகளும் சிறப்பாகவும் பல திறமைகளைக் கொண்ட ஒரு தனிப்படை போன்ற அவர் கதாபாத்திரத்தில் நடிப்பிலும் அவர் தனது ரசிகர்கள் விரும்புவதை கொடுக்க முயன்றுள்ளார். இதில் அவர் பேஸ் குரலில் டப்பிங் செய்வதால் சில டயலாக்குகள் புரியவில்லை. அறிமுகம் முதல் கிளைமாக்ஸ் வரை படத்தின் மொத்த கதையும் சுதீப்பை சுற்றியே செல்கிறது. வழக்கை தீர்க்கும் வகையில் சுதீப் சில சமயங்களில் வில்லனாகவும் தோன்றுவது போல் செய்துள்ளார்.

பார் கேர்ளாக ஹாட் லுக்கிங் பாலிவுட் அழகி ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஐட்டம் (‘ரா ரா ரக்மா) பாடலில் தனது ஸ்டைலை வெளிப்படுத்தி ஈர்க்கிறார். தன் வசீகரத்தால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

பன்னாவாக மாறிய நீதா அசோக் தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தைரியமாகவும் அப்பாவியாகவும் இருக்கிறார். நிருப் பண்டாரி மற்றும் குழந்தை கலைஞர் சம்ஹிதாவின் பணி குறிப்பிடத்தக்கது.

ரவிசங்கர் கவுடா,வாசுகி வைபவ், சித்து மூலிமணி, சிட்கலா பிரதார், ரமேஷ் குக்குவல்லி மற்றும் பலர் தங்கள் பாத்திரங்களுக்கு கண்ணியமாக இருந்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் ஹாலிவுட் ரேஞ்சில் நல்ல தரத்தில் உள்ளது. இந்தப் படத்தின் பெரும்பகுதி வீட்டுக்குள்ளேயே படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் மீதி பகுதிகளில் இருள் சூழ்ந்த அடர்ந்த காடுகளை தவிர வேறு முக்கிய இடங்கள் இல்லை. பெரும்பாலும் ஏகுஓ சார்ந்து உயர் தரத்தில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

சிவகுமாரின் கலைப்படைப்பு, வில்லியம் டேவிட்டின் ஒளிப்பதிவு, ஏ.விஜய்யின் ஸ்டண்ட், நிர்மல் குமாரின் வி{வல் எஃபெக்ட்ஸ் என அனைத்தும் மிக அருமை. படத்திற்கு ரிச் லுக்கை கொண்டு வந்துள்ளார்கள். குறிப்பாக இந்தப் படத்தில் அஜனீஷ் லோக்நாத்தின் ஒலி வடிவமைப்பு பாராட்ட வேண்டும். சில திகில் காட்சிகள் புதிதாக பயமுறுத்தியுள்ளார்கள். சில இடங்களில் ஏதோ நடக்கப் போகிறது என்ற எண்ணம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையும் கச்சிதம். பாடல்களில்… ‘ரா ரா ராக்கம்மா’ படம் வெளியாவதற்கு முன்பே சூப்பர் ஹிட்டானது. மற்ற பாடல்கள் ஒகே.

ஆஷிக் குசுகொல்லியின் எடிட்டிங் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும்.

தயாரிப்பு நிர்வாகம்; நன்றாக செலவழிக்கப்பட்டுள்ளது என்பது புரிகிறது. பல காட்சிகள் அற்புதமான விஷ{வல் எஃபெக்ட்களுடன் வசீகரிக்கின்றன.
அனூப் பண்டாரி எழுதி இயக்கிய விக்ராந்த் ரோனா கற்பனை சாகசப் படம் அட்வென்ச்சர் எண்டெவர் என்று அழைக்கப்படும். இதில் பல வகைகளை இணைக்க முயன்றிருக்கிறார். இது ஆக்ஷன்-சாகச-ஃபேண்டஸி படம் என்று அழைக்கப்பட்டாலும், சில சமயங்களில் குழந்தைகளுக்கான எடுக்கப்பட்ட படம் போலவும், சில சமயம் இருட்டாகவும், சில சமயம் திகில் படமாகவும் இருக்க, ஆனால் கடைசியில் எதுவும் இல்லை. இயக்குனர்கள் என்ன செய்கிறோம் என்று குழம்புவது போலவே, படத்தின் திரைக்கதையிலும் அதே குழப்பம் காணப்படுவதால் பார்வையாளர்களும் குழப்பமடைகிறார்கள். டிரெய்லர் கட் பார்க்கும் போது அதிலிருந்து நிறைய சிலிர்ப்பை எதிர்பார்த்தோம். ஆனால் அனுப் தொடக்கத்தில் சிறு ஜர்க் கொடுத்து முதல் பாதியை எளிமையாக வழிநடத்திய விதம், கதாபாத்திரங்களை நீளமாக அறிமுகப்படுத்தி அவர்களுக்கிடையேயான உறவுகளை வளர்ப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. ஒருமுறை பயன்படுத்திய டெம்ப்ளேட்டை, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அதை மீண்டும் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. கமர்ஷியல் கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ஹாரர் த்ரில்லர்களில் அந்த நெகிழ்வுத்தன்மை இல்லை. அதுவும் ஸ்டார் ஹீரோக்களை சமாளிக்கும் போது. அனுப் பண்டாரியின் கற்பனைக் கதை குழந்தைகள் கதை சொல்வதில் தொடங்குகிறது. பிறகு அமானுஷ்ய ஹாரர் த்ரில்லர் உணர்வைத் தருகிறது. அதன் பிறகு அது மர்மமாகிறது. இடைவேளைக்கு முன் கதை வெகுவாக சிதறுகிறது. உள்ளூர் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகள் குழப்பமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இடைவேளைக்குப் பிறகு கதை வேகமெடுக்கிறது. கதை எந்த திசையில் செல்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். கதாபாத்திரங்களுடன் தொடர்புடைய சஸ்பென்ஸை இறுதிவரை தக்கவைப்பதில் அனூப் வெற்றி பெற்றுள்ளார். இந்த மர்மத்தை அடைய நடுவில் காதல் கதையின் ஒரு கோணமும் உள்ளது. படத்தில் VFX அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 3டி படத்தில் ஆக்ஷனை பார்ப்பது ஒரு சிலிர்ப்பான அனுபவம். ஆனால் க்ளைமாக்ஸில் ஆக்ஷன் ஃபுல் ஆகும்போது அங்கே 3டி அனுபவம் இருக்காது. ஃபேன்டஸி படம் என்பதால் லாஜிக்கை இங்கே தேட வேண்டாம். வலுவான கதைக்களத்துடன் திரைக்கதை அமைந்திருந்து கதாபாத்திரங்கள் சரியாக கட்டமைக்கப்பட்டு இருந்தால் இந்த சஸ்பென்ஸ் ஃபேன்டஸியை மேம்படுத்துவதற்கு அதிக இடம் இருந்திருக்கும் என்று சொல்லலாம்.

மொத்தத்தில் ‘விக்ராந்த் ரோனா’ கற்பனை கலந்த திகிலான அனுபவத்தை தந்து சாகச ஆக்ஷனில் 3 டி தொழில்நுட்பத்தில் மிரட்டும் படம்.