வாழ்வு தொடங்குமிடம் நீதானே திரைப்பட விமர்சனம் : வாழ்வு தொடங்குமிடம் நீதானே இருபாலாரின் காதலின் உணர்வை முழுவதுமாக மாற்றியமைத்திருக்கும் நவீனயுகத்தின் காதல் | ரேட்டிங்: 3/5
பரணிதரன், செந்தில் குமார் அவர்களின் ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்காக, நீலிமா மற்றும் இசை இருவரின் தயாரிப்பில் ஜெயராஜ் பழனியின் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழ்வு தொடங்குமிடம் நீதானே. ஷார்ட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இதில் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஆறுமுக வேல், பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை சதீஷ் கோகுல கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய தர்ஷன் ரவிக்குமார் இசையமைக்க, ஆர்.எல். விக்னேஷ் படத்தொகுப்பு பணிகளையும், ரவி பாண்டியன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். மக்கள் தொடர்பு யுவராஜ்.
தரங்கம்பாடியில் செல்வாக்குமிக்க மதநம்பிக்கை மிகுந்த இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவரின் மகள் ஷகீரா (நிரஞ்சனா நெய்தியார்). வெளியே எங்கும் செல்ல அனுமதியில்லாமல் வீட்டிலேயே ஒவியம்; வரைந்து கொண்டு பொழுதை கழிக்கிறார். அப்பொழுது அடிதட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பேட்டி எடுத்து யூ ட்யூப் வலைதளத்தில் வெளியிட திருச்சியில் இருந்து வரும் நவநாகரீக இளம் பெண் வினோதா (ஸ்ருதி பெரியசாமி). இஸ்லாமிய பெரியவரை அணுகி அனுமதி பெற்று அவரின் மகள் ஷகீராவுடன் அவர்கள் வீட்டிலேயே தங்குகிறார். முதலில்; ஷகீரா – வினோதா நட்பாக பழக இருவரும் அதன் பின் தன்பாலினசேர்க்கையாளர்கள் என்பதை உணர்கிறார்கள். அதன் பின் இருவரின் நட்பு காதலாக மாறுகிறது. தன் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பும் வினோதா ஷகீராவின் தந்தையிடம்; உண்மையை சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் ஷகீராவின் தந்தை வினோதாவை திட்டி அனுப்பிவிட்டு, ஷகீராவிற்கு அவசரஅவசரமாக நிக்காஹ் செய்ய ஏற்பாடு செய்கிறார். ஒரு தலையாக காதலிக்கும் இர்பானையே மணமகனாக ஷகீராவிற்கு பார்த்து முடிக்கின்றனர். இர்பான் தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள போவதை நினைத்து மகிழ்ச்சியோடு இருக்கிறார். ஷகீரா திருமணத்திற்கு முன்பு இர்பானை தனியாக அழைத்து வினோதாவை காதலிப்பதாக கூற பேரதர்ச்சியில் உரைந்து போகிறார் இர்பான். முதலில் கோபத்தோடு இருக்கும் இர்பான் பின்னர் ஷகீராவிற்கு உதவ முன்வருகிறார். அதன் பின் ஷகீரா திருச்சிக்கு வினோதாவை தேடிப் போக, வினோதா தரங்கம்பாடிக்கு ஷகீராவை தேடி வருகிறார். ஏற்கனவே ஷகீரா காணாமல் போன ஆத்திரத்தில் இருக்கும் அவர்கள் வினோதாவை பார்த்தவுடன் என்ன செய்தார்கள்? வினோதா என்ன கேட்டார்? அதன் பின் வினோதாவிற்கு நடந்த கொடுமை என்ன? ஷகீரா திரும்பி வந்து வினோதாவை மீட்டாரா? சமூகத்தை எதிர்த்து இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார் இருவருமே ரொம்ப சென்சிடிவ்வான கதைக்களத்திற்கு கேற்றவாறு ஒரு சில காட்சிகளில் நெருக்கம் அதே சமயம் ஜாக்கிரதையாக நடித்துள்ளனர். இவர்களுடன் அர்ஷத் ஆறுமுக வேல், பிரதீப் ஆகியோர் துணை கதாபாத்திரங்களாக வந்து போகின்றனர்.
சதீஷ் கோகுல கிருஷ்ணன் ஒளிப்பதிவு, தர்ஷன் ரவிக்குமார் இசை, ஆர்.எல். விக்னேஷ் படத்தொகுப்பு, ரவி பாண்டியன் கலை இயக்கம்; பட்ஜெட்டிற்கு தகுந்த மாதிரி படத்தை இயன்ற வரை சிறப்பாக செய்து முடித்து கொடுத்துள்ளனர்.
இரண்டு வௌ;வேறு சமூகத்தைச் சேர்ந்த இரு லெஸ்பியன் பெண்கள் எதிர்ப்பு, அவமானங்களை தாங்கிக் கொண்டு குடும்பத்தை எதிர்த்து தனியாக போராடி சுதந்திரத்தோடு சேர்ந்து வாழ்ந்து ஜெயிப்பதையே கதைக்களமாக எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயராஜ் பழனி. முதலில் சில பல குழப்பங்களில் ஆரம்பிக்கும் திரைப்படம், பின்னர் மெதுவாக கதைக்குள் பயணிக்கும் போது என்ன நடக்குமோ என்று பதட்டத்தை எற்படுத்தியிருப்பதில் கொஞ்சம் கவனிக்க வைத்துள்ளார் இயக்குனர் ஜெயராஜ் பழனி. இன்றைய சூழலில் காதல் என்பது ஆண்,பெண் இருவருக்கும் மட்டுமே உணர்வுகள் வரும் என்பதை உடைத்தெரிந்து தைரியமாக ஆணும், பெண்ணும் தன்பாலின சேர்க்கையாளர்களாக இருப்பதையும் அங்கீகரிக்க வேண்டும் என்பதையும், அப்படிப்பட்ட உணர்வுகள் நிறைந்த மனிதர்களை அவர்கள் விருப்பப்படியே வாழ விடுங்கள் என்பதை ஆபாச வசனங்கள், விரசங்கள் இல்லாமல் அழுத்தமான பதிவாக கொடுக்க முயற்சித்துள்ள ஜெயராஜ் பழனியின் தைரியத்திற்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள். இது போன்ற உண்மைச் சம்பவங்கள் நடைபெறுவதை பார்த்தும் கேள்விபட்டதைத்தான் எடுத்துள்ளார் இயக்குனர் ஜெயராஜ் பழனி.
மொத்தத்தில் பரணிதரன், செந்தில் குமார் அவர்களின் ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்காக, நீலிமா மற்றும் இசை இருவரின் தயாரித்திருக்கும் வாழ்வு தொடங்குமிடம் நீதானே இருபாலாரின் காதலின் உணர்வை முழுவதுமாக மாற்றியமைத்திருக்கும் நவீனயுகத்தின் காதல்.