வாய்தா விமர்சனம்: வாய்தா சாமன்ய மனிதரின் வாழ்க்கையில் வழக்கை எதிர்கொள்ளும் வலியை நிறைவாக சொல்லும் படம் | ரேட்டிங் – 2.5/5

0
308

வாய்தா விமர்சனம்: வாய்தா சாமன்ய மனிதரின் வாழ்க்கையில் வழக்கை எதிர்கொள்ளும் வலியை நிறைவாக சொல்லும் படம் | ரேட்டிங் – 2.5/5

வராஹா சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில் படத்தை இயக்கியிருக்கிறார் மகிவர்மன்.சி.எஸ்.
இதில் நாசர், மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, காக்கா முட்டை பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, பிரசன்னா பாலசந்திரன், முத்து அழகர்சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-லோகேஸ்வரன், ஒளிப்பதிவு-சேதுமுருகவேல் அங்காரகன், படத்தொகுப்பு-நரேஷ் குணசீலன், கலை-ஜாக்கி, பாடல்கள்- இயக்குநர் ராஜு முருகன், உமா தேவி, மணி அமுதன், நவகவி, மகிவர்மன், சண்டை-சுப்ரீம் சுந்தர், உடைகள்-சீனு, தயாரிப்பு மேலாளர்-செல்வா, மக்கள் தொடர்பு-யுவராஜ்.

ஜாதி வேறுபாட்டில் மூழ்கி கிடக்கும் கிராமத்தில் வெவ்வேறு திசையில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொள்ளாமல் திரும்ப தடுமாறி தெரு ஒரத்தில் கடை நடத்தும் வயதான சலவைத் தொழிலாளி மீது எதிர்பாராத விதமாக மோத அதனால் கை அடிபட்டு கிழே விழுகிறார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முதியவரை அந்த ஊர் அரசியல்வாதி இழப்பீடு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறுகிறார். ஏழ்மையில் இருக்கும் அந்த முதியவரும் அவரது மகனும் இதற்கு சம்மதிக்கின்றனர்.அரசியல்வாதியும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிகுந்த பெரிய மனிதரும் சலவைத் தொழிலாளிக்கு இழப்பீடு தர சமரசம் பேசுகிறார்கள். ஆனால் சமரசம் இருவரின் சொந்த பகைமை காரணமாக சண்டையாக மாறி சலவைத் தொழிலாளி வழக்கு போட்டு இழப்பீடு வாங்கும் அளவிற்கு விட்டு விடுகிறது. நீதிமன்றத்தில் பல மாதங்களாக வழக்கு வாய்தா வாங்குவதிலேயே போய்விட, உதவி செய்யும் வக்கீலும் பணத்தை கேட்கிறார். முதலில் உதவி செய்ய வரும் அரசியல்வாதியும் இந்த முதியவருக்கு எதிராக திரும்பி பக்கத்து ஊர் பெரிய மனிதரிடம் சமரசம் செய்துக் கொள்வதால், தனியே அந்த முதியவர் வழக்கை எதிர்கொள்கிறார். இறுதியில் அந்த சலலைத் தொழிலாளிக்கு நீதி நியாயம் கிடைத்ததா? இழப்பீடு வாங்க முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாசர், மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, காக்கா முட்டை பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, பிரசன்னா பாலசந்திரன், முத்து அழகர்சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர் மற்றும் பலர் நடித்திருக்க ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் புதுமுகங்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை தந்து இயல்பாக நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்கள் சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும் பின்னணி இசையோ படத்திற்குள் நம்மை ஒன்றிணைய வைத்துள்ளார் இசையமைப்பாளர் லோகேஸ்வரன்.

ஒளிப்பதிவு-சேதுமுருகவேல் அங்காரகன், படத்தொகுப்பு-நரேஷ் குணசீலன் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.

சாதி வெறி பிடித்த சமூதாயத்தில் ஏழை எளிய முதியவர் விபத்திற்கான இழப்பீடு கிடைக்க நீதிமன்றத்தை நாடி நியாயம் கிடைக்க அரும்பாடுபடுவதை கருத்து பேதங்கள்,முரண்பாடுகளை முன்னிறுத்தி துணிச்சலாக சவாலாக இயக்கியுள்ளார் மகிவர்மன்.சி.எஸ்.  சாதி ஆணவம், காதல், பிளவு, ஏழை மக்களின் வலி, இழைக்கப்படும் அநீதி, இழப்பீடு கிடைத்தாலும் அறியாமையால் இழக்கும் அபாயம், உயர் சாதியினரின் அடக்குமுறை, நியாயம் கிடைக்க வேண்டிய இடத்தில் எதிர்பாராதவிதமாக தீhப்பு கிடைப்பது என்று சமூக அக்கறையோடு கொடுத்திருந்தாலும் திரைக்கதையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் வராஹா சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில் வாய்தா சாமன்ய மனிதரின் வாழ்க்கையில் வழக்கை எதிர்கொள்ளும் வலியை நிறைவாக சொல்லும் படம்.