வல்லான் சினிமா விமர்சனம் : வல்லான் குற்ற பின்னணியில் திடீர் திருப்பங்கள் தரும் வில்லன் | ரேட்டிங்: 2.5/5

0
343

வல்லான் சினிமா விமர்சனம் : வல்லான் குற்ற பின்னணியில் திடீர் திருப்பங்கள் தரும் வில்லன் | ரேட்டிங்: 2.5/5

விஆர் டெல்லா பிலிம் பேக்டரி பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர் வி.ஆர்.மணிகண்டராமன் மற்றும் வி.காயத்ரி தயாரித்திருக்கும் வல்லான் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வி.ஆர்.மணி சேயோன்.

இதில் சுந்தர்.சி. தன்யா ஹோப், ஹெபா பட்டேல், கமல் காமராஜ், அபிராமி வெங்கடாசலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- நிர்வாக தயாரிப்பாளர் – அசோக் சேகர்,ஒளிப்பதிவு – மணி பெருமாள், இசை – சந்தோஷ் தயாநிதி, படத்தொகுப்பு – தினேஷ் பொன்ராஜ்,கலை – சக்தி வெங்கட்ராஜ். எம், ஸ்டண்ட் – விக்கி, பாடல் வரிகள் – உமாதேவி, நடனம் – கல்யாண், சந்தோஷ், பாடியவர்கள் – கார்த்திக் மற்றும் ரக்ஷிதா சுரேஷ், ரைட்டிங் அசோசியேட் – அரவிந்த் சச்சிதானந்தம், ஒலிக்கலவை மற்றும் வடிவமைப்பு – எஸ்.சிவகுமார், ஆடை வடிவமைப்பாளர் – நிகிதா நிரஞ்சன், ஒப்பனை கலைஞர் – ஏ.கோதண்டபாணி, மக்கள் தொடர்பு – (ஏய்ம்) சதீஷ், சிவா

பிரபலமான ஒரு கிறிஸ்தவ மத போதகர் ஜெயகுமார் பெரும் தொழிலதிபர். அவருடைய மருமகன் கமல் காமராஜ் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ் உயர் அதிகாரி, பணிஇடை நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சுந்தர்.சியிடம் இந்த வழக்கை ஒப்படைக்கிறார். இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட கமல் காமராஜ் அலுவலகத்தில் பணி புரிந்த தன் வருங்கால மனைவி காணாமல் போனதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என்று சுந்தர்.சி இந்த விசாரணை பணிக்கு சம்மதிக்கிறார். இந்த கொலைக்கான காரணத்தை விசாரிக்கும் போது கமல் காமராஜிடம் தொடர்பில் இருந்த தோழிகள் மற்றும் மாடல் அழகி ஹெபா படேல், வீட்டு பணிப்பெண், மனைவி அபிராமி வெங்கடாசலம், இவரின் முதல் கணவர், இவர்களின் மகள் என்று விசாரணை நீண்டு கொண்டே​ போக இதனிடையே சில பெண்களின் சடலங்களை மீட்கின்றனர்.இதற்கு பின்னணியில் இருக்கும் அதிகார வர்க்கத்தின் கெடுபிடி அதற்காக வளைந்து கொடுக்கும் போலீஸ் அதிகாரிகள் என்று தகவல்கள், தடயங்கள் கிடைக்க, ஒரு குழந்தையின் சாவும் சம்பந்தப்பட்டிருக்க அனைத்தும் குற்றவாளியை நெருங்க உதவுகிறது. இறுதியில் காணாமல் போன தன் வருங்கால மனைவியை கண்டுபிடித்தாரா? கமல் காமராஜ் எதற்காக கொலை செய்யப்பட்டார்? உண்மையான காரணம் என்ன? யார் தான் குற்றவாளி? சதித்திட்டத்தின் பின்னணி என்ன? என்பதை படத்தில் பார்க்கலாம்.

சுந்தர் சி போலீஸ் அதிகாரி திவாகராக மிடுக்கான தோரணையுடன், சோகமான பின்னணியுடன் பொறுமையாக விசாரணையை நடத்தி உண்மைகளை கண்டறிந்து கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளார்.

வருங்கால மனைவியாக தான்யா ஹோப், வில்லனாக கமல் காமராஜ்,மாடல் அழகியாக ஹெபா படேல், மத போதகரின் மகளாக அபிராமி வெங்கடாசலம், குழந்தையை இழந்த தாயின் பரிதவிப்புடன் சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், கிருத்துவ மத போதகராக ஜெயக்குமார், டி.எஸ்.கே. ஆகியோர் கதையின் நகர்வுக்கு உதவியுள்ளனர்.

மணி பெருமாளின் ஒளிப்பதிவு விறுவிறுப்பை தக்க வைத்துள்ளது மற்றும் சந்தோஷ் தயாநிதியின் இசை சுமாராக உள்ளது.

படத்தொகுப்பு – தினேஷ் பொன்ராஜ்,கலை – சக்தி வெங்கட்ராஜ். எம், ஸ்டண்ட் – விக்கி மீதமுள்ள தொழில்நுட்பங்கள் சராசரிக்கு மேல் உள்ளன.

வி ஆர் மணி சீயோன் இயக்கிய இந்த திரைப்படத்தை ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையாக கொடுக்க நினைத்து குற்ற விசாரணை என்ற பெயரில் திருப்பங்களால் அயர்;ச்சி ஏற்படுத்தி விட்டார். பெரும் செல்வாக்கு மிக்கவர்கள் செய்யும் தவறை மறைக்க எடுக்கும் முயற்சிகள், அதனால் ஏற்படும்  மிரட்டல்கள், அதை சமாளிக்க சதித்திட்டம் தீட்டுவது, அதுவே அவர்களுக்கு எதிராக அமைந்து பல இன்னல்களுக்கு வழி வகுப்பது என்று தொடர் சஸ்பென்ஸ் கலந்த கதைக்களத்தை பல கிளைக்கதைகளுடன் எழுதி இயக்கியிருக்கும் விதத்தில் இன்னும் முன்னுரிமையளித்து அழுத்தமாக சுற்றி வளைக்காமல் க்ரைம் த்ரில்லரை சொல்லியிருந்தால் பேசப்பட்டிருக்கும்;.

மொத்தத்தில் விஆர் டெல்லா பிலிம் பேக்டரி பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர் வி.ஆர்.மணிகண்டராமன் மற்றும் வி.காயத்ரி இணைந்து தயாரித்திருக்கும் வல்லான் குற்ற பின்னணியில் திடீர் திருப்பங்கள் தரும் வில்லன்.