லத்தி விமர்சனம் : லத்தி சுழற்சியில் பழி வாங்கும் ஆக்ஷன் காட்சிகள் பரபரக்கிறது அதிர வைக்கிறது தடம் பதிக்கிறது | ரேட்டிங்: 3/5

0
866

லத்தி விமர்சனம் : லத்தி சுழற்சியில் பழி வாங்கும் ஆக்ஷன் காட்சிகள் பரபரக்கிறது அதிர வைக்கிறது தடம் பதிக்கிறது | ரேட்டிங்: 3/5

ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமணா மற்றும் நந்தா தயாரித்திருக்கும் லத்தி திரைப்பிடத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.வினோத்குமார்.
இதில் விஷால், ரமணா, சுனைனா, பிரபு, தலைவாசல் விஜய், முனிஷ்காந்த், வினோத் சாகர், மிஷா கோஷல், பிரானா, சன்னி பிஎன், லிரிஷ் ராகவ், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம் மற்றும் பாலகிருஷ்ணா, எடிட்டர் – ஸ்ரீகாந்த் என்.பி, கலை இயக்குனர் – கண்ணன்.எஸ்,  ஸ்டண்ட் டைரக்ஷன் – பீட்டர் ஹெய்ன், நடன கோரியோகிராபி – தினேஷ், ஆடை வடிவமைப்பாளர் – வாசுகி பாஸ்கர், மக்கள் தொடர்பு – ஜான்சன்.

கான்ஸ்டபிளான முருகானந்தம் (விஷால்) கற்பழிப்பு வழக்கில் சந்தேகப்படும் ரவுடியின் மகனுக்கு லத்தியில் அடித்து தண்டனை தர இதனால் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்.இதனால் வீட்டிலிருக்கும் விஷால் உயர் அதிகாரிகளின் சிபாரிசிற்காக பலரிடம் சென்று மன்றாடுகிறார். செவிலியர் மனைவி கவிதா(சுனைனா) பள்ளியில் படிக்கும் மகன் (மாஸ்டர் லிரிஷ் ராகவ்) தான் அவரது வாழ்க்கை. மனைவியின் அறிவுறத்தலின்படி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் உயர் அதிகாரியின் மனைவி மூலம் விஷாலுக்கு சிபாரிசு கிடைத்து போலீஸ் பணியில் சேருகிறார்.  மீண்டும் வேலை கிடைத்தாலும் பெரும் சிக்கலில் மாட்டுகிறார். மகளிடம் தப்பாக நடந்த ரவுடி வெள்ளையை டிஐஜி பிடித்து வைத்து முருகானந்தாவிடம் தன் கஸ்டடியில் இருக்கும் அந்த ரவுடியிடம் லத்தியை பயன்படுத்தும்படி டிஐஜி கேட்கிறார். அந்த சமயத்தில் தான் டார்ச்சர் செய்யும் நபர் மிகவும் மோசமான கேங்ஸ்டரான சுறாவின் (சன்னி பிஎன்) மகன் வெள்ளை (ரமணா) என்பது முருகானந்தத்திற்கு தெரியாது. முருகானந்தம் ரவுடி வெள்ளையை அடிப்பதை டிஐஜி படம் பிடித்து வளைதளத்தில் வெளியிட பெரும் பரபரப்புள்ளாகிறது. போலீசார் ரவுடி வெள்ளையை விளாசிவிட்டு குப்பை மேட்டில் வீசிவிட, அங்கிருந்து ரவுடி வெள்ளை காப்பாற்றப்பட்டு சிகிச்சை பெற்று நலமாக வெளி வந்தவுடன் முதலில் தன்னை அடித்த முருகானந்தத்தை தேடி சென்னை முழுவதும் உள்ள போலீஸ் நிலையத்தை அலசுகிறார். இதனால் முருகானந்தாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் எதிர்பாராத பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ரவுடி மற்றும் கூட்டாளிகளிடமிருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற பலவழிகளில் சிந்திக்கிறார் முருகானந்தம். எதிர்பாராத விதமாக முருகானந்தம் தன் மகனுடன் சுறாவின் கூட்டாளிகள், ரவுடி வெள்ளை ஆகியோரிடம் ஆள் நடமாட்டமில்லாத ஒரு பெரிய கட்டி முடிக்கப்படாத அடுக்குமாடி கட்டடத்தில் மாட்டிக் கொள்கின்றனர். இதன் பின் இவர்கள் உயிருடம் தப்பித்தார்களா? ரவுடிகள் இவர்களை என்ன செய்தார்கள்? பெரும் ரவுடி கூட்டத்தை எப்படி சமாளித்தார்? முருகானந்தம் இவர்களிடமிருந்து தப்பிக்க என்ன சூழ்ச்சி செய்தார்? என்பதே அதிரடி ஆக்ஷன் கலந்த நீண்ட க்ளைமேக்ஸ்.

கான்ஸ்டபிள் முருகானந்தமாக விஷால், தன் கதாபாத்திரத்திற்கு கேற்றவாறு அடக்கமாக, உயர் அதிகாரிகளின் சொல்லுக்கு கட்டுப்பட்டவராக, மனைவி, மகன் மீது மிகுந்த அன்பு கொண்டவராக நச்சென்று பொருந்தி அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் உயிரை கொடுத்து நடித்துள்ளது நன்றாக தெரிகிறது. கட்டிடத்திற்குள் நடக்கும் சண்டைக் காட்சிகள் தான் படத்தின் முக்கிய அங்கமாக வகித்து விஷாலின் கடின உழைப்பை வெளிப்படுத்தியுள்ளது. அதுமிட்டுமில்லாமல் தன் மகனை காப்பாற்ற அவர் போராடும் செண்டிமென்ட் காட்சிகளில் நெஞ்சை நெகிழ செய்து விடுகிறார். வெல்டன்.

நர்ஸ் மனைவியாக சுனைனா கணவனிடம் அன்பு செலுத்தும் போதும், வேலைக்காக மெனக்கெடும் போதும் உறுதுணையாக தனித்து நிற்கிறார். மகனாக மாஸ்டர் லிரிஷ் ராகவ் தந்தையின் வேலையை பெருமையாக கருதி நண்பர்களிடம் அறிமுகம் செய்வதும், உடம்பு சரியில்லாமல் கஷ்டப்படும் போதும், ரவுடிகளிடம் மாட்டிக்கொண்டு கதறும் போதும் சிறப்பாக செய்துள்ளார்.

ரவுடி வெள்ளையாக இப்படத்தை தயாரித்து வில்லனாக நடித்திருக்கும் ரமணா, முதல் பகுதியில் பிளாஸ்டிக் உறையால் முகத்தை மறைத்து தரும் பில்டப் காட்சிகள், அதன் பின் விடாப்பிடியாக அடித்தவனை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள், முருகானந்தத்தை எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் என்ற வெறியோடு அலைவது , ஏகப்பட்ட ரவுடிகளுடன் களமிறங்கும் காட்சிகள் என்று முறைப்பும், மிரட்டலுடன் நடிப்பால் அசர வைத்துள்ளார்.

சிறப்பு கதாபாத்திரத்தில் பிரபு, போலீஸ் உயர் அ;திகாரியாக தலைவாசல் விஜய், முனிஷ்காந்த், வினோத் சாகர், மிஷா கோஷல், பிரானா, சுறாவாக சன்னி பிஎன் ஆகியோர் படத்தின் முக்கிய காட்சிகளாகவும் சாட்சிகளாகவும் வலம் வந்து அசர வைத்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பான ஆக்ஷன் பிளாக்களுக்கு  மிரள வைக்கும் இசையால் அதிர வைத்துள்ளார்.

பாலசுப்ரமணியம் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோரின் பங்களிப்பு படத்தின் போலீஸ் சம்பந்தபட்ட காட்சிகள், முதல் காட்சியில் அடுக்கு மாடி கட்டிடத்தில் மறைவாக ரவுடிகளிடமிருந்து தப்கிக்க கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கும் விஷாலின் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சியில் ஆக்ஷன் துவம்சம் பண்ணும் காட்சிகள் வரை இருவரும் நான்ஸ்டாப்பாக அதகளம் பண்ணியுள்ளனர்.
படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் முக்கிய சண்டை காட்சிகளை வடிவமைத்து தடம் பதித்திருக்கிறார் ஸ்டண்ட் டைரகடர் பீட்டர் ஹெய்ன். தன் கற்பனை திறனை எந்த அளவிற்கு பயன்படுத்தப் முடியுமோ அந்த அளவிற்கு ரவுடிகளின் சாம்ராஜ்ஜியத்தையே நிரப்பி, ஆக்ஷன் காட்சிகளையும், துரத்தல் காட்சிகளையும் பெரிய கட்டிடத்திலேயே க்ளைமேக்ஸ் காட்சியுடன் முடித்திருப்பது பிரமிக்க வைக்கிறது. லாஜிக்கை மீறிய ஆக்ஷன் காட்சிகளாக இருந்தாலும் அதை திறம்பட கொடுத்திருக்கும் விதம்  பீட்டர் ஹெய்னின் வலிமையை காட்டுகிறது. ஹாட்ஸ் ஆஃப்.

கலை இயக்குனர் – கண்ணன்.எஸ் கச்சிதம்.

எடிட்டர் – ஸ்ரீகாந்த் என்.பி எதை விடுவது, எதை எடுப்பது என்ற குழப்பமான கடினமான பணியை முடிந்தவரை நிறைவாக கொடுக்க முயற்சிசித்துள்ளார்.

எப்பொழுதுமே அதிகாரம் படைத்த உயர் போலீஸ் அதிகாரிக்கும் ரவுடிக்கும் தான் சண்டையை பிரதானப்படுத்தி இயக்கியுள்ளனர். இதில் சாதாரண கான்ஸ்டபிளுக்கும் ரவுடிக்கும் நடக்கும் பழி தீர்க்கும் சண்டையில் அதிகாரத்தை பயன்படுத்தாமல், தன் மனதைரியத்தையும், உடல் வலிமையையும், புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி பெரும் வில்லன் படைகளை எதிர்க்கும் கதைக்களத்தை எடுத்து முதல் பாதி சுறுசுறுப்பாகவும், இரண்டாம் பாதி ஆக்ஷனில் விறுவிறுப்பாகவும் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஏ.வினோத்குமார். தோய்வில்லாமல் வித்தியாசமான கோணத்தில் செல்லும் முதல்பாதி இரண்டாம் பாதியில் திரளாக வரும் சண்டைக் காட்சிகள் ஒவர்டேக் செய்து விடுகிறது.

மொத்தத்தில்  ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமணா மற்றும் நந்தா தயாரித்திருக்கும் லத்தி சுழற்சியில் பழி வாங்கும் ஆக்ஷன் காட்சிகள் பரபரக்கிறது அதிர வைக்கிறது தடம் பதிக்கிறது.