லக்கி மேன் திரைப்பட விமர்சனம் : லக்கிமேன் மனதை கொள்ளை கொள்ளும் கதையம்சம் அனைவரும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம், பார்க்கலாம் | ரேட்டிங்: 3/5

0
343

லக்கி மேன் திரைப்பட விமர்சனம் : லக்கிமேன் மனதை கொள்ளை கொள்ளும் கதையம்சம் அனைவரும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம், பார்க்கலாம் | ரேட்டிங்: 3/5

திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் எஸ் என் எஸ் மூவி புரொடக்ஷன்ஸ் தயாரித்து பாலாஜி வேணுகோபால் இயக்கி இருக்கும் படம் லக்கி மேன்.

இதில்முருகனாக யோகி பாபு, இன்ஸ்பெக்டர் சிவக்குமாராக வீரா, தெய்வானையாக ரேச்சல் ரபேக்கா, வெங்கட்டாக அப்துல் லீ, ஆர்.எஸ். ரவியாக சிவாஜி, ரமணனாக ஜெயக்குமார், பரத் ஊக்கமளிக்கும் பேச்சாளராக கௌதம் சுந்தரராஜன்,வணக்கம் கந்தசாமி கான்ஸ்டபிள் செண்பக மூர்த்தி,தியாகி சுப்பையாவாக ராகுல் தாத்தா, குமாரகுருவாக பிரதீப் கே விஜயன்,அமர்நாத் ஆக அமித் பார்கவ்,தமிழனாக சாத்விக், அபர்ணாவாக சுஹாசினி குமரன், புகழேந்தியாக விளங்கு ரவி,டேவிட் சாலமன் இன்ஸ்பெக்டராக கமேஷ், கமிஷனராக அஜித் கோஷி,நாகார்ஜுனாவாக டெம்பிள் மங்கீஸ் தாவூத் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:இசை: சீன் ரோல்டன், ஒளிப்பதிவாளர்: சந்தீப் கே. விஜய், ஆசிரியர்: ஜி. மதன், கலை இயக்குனர்: சரவணன் வசந்த், ஒலி வடிவமைப்பு: தபஸ் நாயக், ஆடை வடிவமைப்பாளர்: நந்தினி நெடுமாறன்,மக்கள் தொடர்பு : டிஒன், ரேகா, சுரேஷ்சந்திரா.

ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்யும் முருகன் (யோகி பாபு), பிறப்பிலிருந்தே துரதிஷ்டசாலி என்று முத்திரை குத்தப்பட்டு அந்த மனநிலையிலேயே தன் மனைவி தெய்வானை(ரேச்சல் ரெபக்கா) மகன் தமிழன்( சாத்விக்) ஆகியோருடன் கிடைக்கும் சொற்ப கமிஷன் வருமானத்தில் வாழ்க்கையை நடத்துகிறார். பழைய இரு சக்கர வாகனத்தை வைத்துக் கொண்டு மேனேஜரிடம் திட்டு வாங்கிக் கொண்டு வேலையும் பறி போகும் நிலைமையில் போராட்டமான வாழ்க்கைக்கு தனது துரதிர்ஷ்டம் தான் காரணம் என்று நினைக்கிறார். இதனிடையே தான் சேர்ந்த சிட் பண்ட் அதிர்ஷ்டக் குலுக்கலில் எதிர்பாராத விதமாக ஒரு கார் பம்பர் பரிசு விழுகிறது. கார் இருப்பதால் ரியல் எஸ்டேட் கம்பெனியில் மாதச் சம்பளம் கிடைக்க, தொழிலில் முன்னேற்றம் அடைந்து, ஒரளவு பணம் சம்பாதிக்கிறார். தன் வாழ்க்கையில் மகிழ்ச்சி வரக் காரணம் இந்த கார் தான் என்று நம்புகிறார். ஒரு நேர்மையான, கண்டிப்பான போலீஸ் அதிகாரி சிவக்குமாருடன் (வீரா) காரை பார்க் செய்யும் இடத்தில் முருகனுக்கு தகராறு ஏற்படுகிறது. இந்நிலையில், முருகனுக்கும், சிவகுமாருக்கும் ஏதாவது காரணத்தால் அடிக்கடி காரால் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு நாள் முருகனின் கார் வீட்டருகே திடீரென்று காணாமல் போகிறது. கார் திருடு போனதை புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு செல்ல அங்கே இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தான் இந்த புகாரை விசாரிக்க இருப்பதை அறிந்து கலக்கமடைகிறார் முருகன். இறுதியில் அதிர்ஷ்ட காரை யார் திருடினார்கள்? போலீஸ் அதிகாரிக்கும் முருகனுக்கும் உள்ள பிரச்சனை தீர்ந்ததா? திருடு போன அதிர்ஷ்ட கார் மீண்டும் முருகனிடம் வந்து சேர்ந்ததா? எதிரியாக பாவிக்கும் முருகனும், சிவகுமாரும் ஒன்றாக சேர்ந்தார்களா? என்பதே மீதிப்படம்.

முருகனாக யோகி பாபு சாதாராண வாழ்க்கையை நடத்தும் மனிதனாக, துரதிஷ்டத்தை நினைத்து அதற்காக கவலைப்படாமல் முடிந்தவரை போராடும் குணம் கொண்டவராக வாழ அதுவே அவருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தருணத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிகளில் சிறப்பாக செய்துள்ளார்.காரை முதலில் ஒரு மாதத்திற்கு வைத்து பார்க்கலாம் என்று மனைவியுடன் போட்டி போடும் இடங்கள் சுவாரஸ்யம். கார் வந்த பின்பு அதை ஒட்ட கற்றும் கொள்ளும் போதும், அதன் பின்னர் பார்க்கிங் பிரச்சனையில் சிக்கும் போதும், கார் காணாமல் போன பிறகு தன் நண்பனுடன் சேர்ந்து பண்ணும் அளப்பறைகள் ரசிக்கும் வண்ணம் உள்ளது. யோகிபாபுவிற்கு  ஏற்ற கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்துகிறது என்பது சிறப்பம்சம்.

தெய்வானையாக ரேச்சல் ரபேக்கா யோகிபாபுவின் மனைவியாக நடுத்தர குடும்பத்தலைவியின் அச்சு அசலாக, வசனத்திலும் எடுக்கும் முடிவிலும் இறுதியில் யோகிபாவுவை தன் மகனை விட்டு அடிக்க சொல்லும் இடத்தில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் சிவக்குமாராக வீரா இறுக்கமான முகத்துடன், நேர்மையான அதிகாரியாக காட்டினாலும், கோவத்தை அடக்கமுடியாமல் முருகனிடம் சிறு சிறு விஷயங்களில் கடுமையாக நடந்து கொள்ளும் விதமும், தனக்கு பதவி உயர்வு கிடைக்க இருக்கும் தருணத்தில் எந்த ஒரு இடர்பாடுகளும் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வதும், ஈகோவினால் ஏற்படும் பிரச்சனை எத்தகைய நல்ல மனிதரையும் மாற்றும் வல்லமை படைத்தது என்பதை மெய்ப்பட வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழனாக சாத்விக் யோகிபாபுவின் மகனாக சரியான தேர்வு இயல்பாக நடித்துள்ளார்.

வெங்கட்டாக அப்துல் லீ நண்பனாக யோகிபாபுவிற்கு இறுதி வரை தோல் கொடுக்கும் தோழன் கதாபாத்திரத்தில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துவிடுகிறார். இவர்களுடன், ரவியாக ஆர்.எஸ். சிவாஜி, ரமணனாக ஜெயக்குமார், பரத் பேச்சாளராக கௌதம் சுந்தரராஜன்,வணக்கம் கந்தசாமி கான்ஸ்டபிள் செண்பகமூர்த்தி,தியாகி சுப்பையாவாக ராகுல் தாத்தா, குமாரகுருவாக பிரதீப் கே விஜயன்,அமர்நாத் ஆக அமித் பார்கவ்,தமிழனாக சாத்விக், அபர்ணாவாக சுஹாசினி குமரன், புகழேந்தியாக விளங்கு ரவி,டேவிட் சாலமன் இன்ஸ்பெக்டராக கமேஷ், கமிஷனராக அஜித் கோஷி,நாகார்ஜுனாவாக டெம்பிள் மங்கீஸ் தாவூத் என்று எண்ணற்ற கதாபாத்திரங்கள் படத்தின் உயிரோட்டமான கதைக்கு முக்கியத்துவமான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

வீடு, கார், அலுவலகம், போலீஸ் நிலையம் என்று பயணிக்கும் கதைக்களத்தை எளிமையான மக்கள் வாழ்விடத்தையும் தத்ரூபமான ஒளிப்பதிவில் சந்தீப் கே. விஜய் தனி முத்திரை பதித்துள்ளார்.

சீன் ரோல்டன் இசையும், பின்னணி இசையும் அதிரடியாக இல்லாமல் அமைதியான தெளிந்த நீரோடைப்போல் கொடுத்துள்ளார்.

கலை- சரவணன் வசந்த் பங்களிப்பு கச்சிதம்.

வாழ்நாளில் துரதிருஷ்டத்தையே பார்க்கும் ஒருவர் திடீரென்று அதிர்ஷ்டம் அடித்தால் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கும்? அந்த அதிர்ஷ்டமே அவருக்கு பல சிக்கல்களையும், சங்கடங்களையும் ஏற்படுத்த, அதை தீர்;த்த பிறகு அந்த அதிர்ஷ்டம் அவரிடமிருந்து பறிக்கப்படும்போது  அந்த மனிதருக்கு என்ன நடக்கிறது என்ற திரைக்கதையைக் கொண்டது படத்தின் மீதிக்கதை. முதல் பாதியில் எல்லாமே சீராக இருந்தாலும், இரண்டாம் பாதியில் வேகத்தடைகள் நிரம்பி வழிகின்றன. முருகனின் காரை யார் எடுத்துச் சென்றார்கள் என்பதைக் காட்டிலும் அதை எப்படி திரும்பப் பெறுகிறார் என்பதை சுற்றி இரண்டாம் பாகம் சுழல்கிறது. அதை குடும்ப சென்டிமெண்ட், ஈகோ, பழி வாங்குதல் என்று மாறுபட்ட கோணத்தில் கதை பயணித்திருப்பதை சுவாரஸ்யமாகவும் கொஞ்சம் நகைச்சுவை இழையோடு வசனத்திலும் மெருக்கேற்p கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். பாராட்டுக்கள்.

மொத்தத்தில் திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் எஸ் என் எஸ் மூவி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் லக்கிமேன் மனதை கொள்ளை கொள்ளும் கதையம்சம் அனைவரும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம், பார்க்கலாம்.