ரெட் சாண்டல் வுட் திரைப்பட விமர்சனம் : ரெட் சாண்டல் வுட் செம்மரக்கடத்தல் பின்னணி கதையை சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்து அசத்தியுள்ளனர் | ரேட்டிங்: 2.5/5

0
212

ரெட் சாண்டல் வுட் திரைப்பட விமர்சனம் : ரெட் சாண்டல் வுட் செம்மரக்கடத்தல் பின்னணி கதையை சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்து அசத்தியுள்ளனர் | ரேட்டிங்: 2.5/5

ஜெஎன் சினிமாஸ் சார்பில் ஜெ.பார்த்தசாரதி தயாரிப்பில் ரெட் சாண்டல் வுட் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் குரு ராமானுஜம்.

இதில் வெற்றி (பிரபாகரன்), தியா மயூரிக்கா (வினிதா), கேஜிஎப் ராம் (ஹரிமாறன் ஷ), எம் எஸ் பாஸ்கர் (முத்தையா), கணேஷ் வெங்கட்ராமன் (ராமைய்யா), மாரிமுத்து (இளவரசு), கபாலி விஷ்வந்த் (கருணா), ரவி வெங்கட்ராமன் (எஸ்.பி), மெட்ராஸ் வினோத் (தீனா), வினோத் சாகர் (புரோக்கர் பாஸ்கர்), லட்சுமி நாராயணன் (நரசிம்மன்), சைதன்யா, விஜி, அபி, கர்ணன் ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் .

தொழில்நுட்ப கலைஞர்கள் :இசை –  சாம் சி எஸ், பாடல்கள் – யுகபாரதி ,கேமரா – சுரேஷ் பாலா,சவுண்ட் டிசைன் – ஆஸ்கார் நாயகன் ரெசுல் பூக்குட்டி, எடிட்டிங் –  ரிச்சர்ட் கெவின்,சண்டை பயிற்சி – மிராக்கில் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன், மக்கள் தொடர்பு : மணவை புவன்

கபாலி விஸ்வந்த் தன் தந்தை படும் கஷ்டத்தை கண்டு மணவேதனையில் பெற்றோர்களுக்கு தெரியாமல் ஆந்திராவில் செம்மரக் கடத்தல் வேலையில் ஈடுபடுகிறார். சில மாதங்கள் அண்ணன் விஸ்வந்திடம் இருந்து எந்த தகவலும் வராததால் தங்கை தன் காதலன் வெற்றியிடம் கண்டுபிடித்து தருமாறு சொல்கிறார். விஸ்வந்தை தேடுவதற்கு முன் போலீசிடம் தகவல் அறிக்கை பதிவு செய்து விட்டு வெற்றி திருப்பதிக்கு செல்கிறார். திருப்பதி செல்லும் வழியில் தனக்கு தெரிந்த நண்பனின் லாரியில் ஏற அதில் செம்மரம் இருக்க, அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தர்மஅடி கொடுத்து விசாரிக்கப் படுகின்றனர். அனைவருமே ஏஜெண்ட் மூலம் செம்மரம் வெட்ட வந்ததாகவும், யார் இதற்கு பின்னணியில் இருக்கிறார்கள் என்பது தெரியாது என்று கூறுகின்றனர். போலீஸிற்கு உண்மையில் யார் செய்தார்கள் என்று தெரிய வந்தாலும், அதிகாரம், பணம் மூலம் அதை மறைத்து கைது செய்யபட்டவர்களை என்கவுண்டர் செய்ய திட்டமிடுகின்றனர். இதை உணரும் வெற்றி தக்க நேரத்தில் அங்கிருந்து தப்பிக்கிறார். செம்மரக் கடத்தல்  தலைவன் கேஜிஎஃப் ராம் தான் நண்பனை கடத்தி வைத்துள்ளார் என்பதையறிந்து தனி ஆளாக அவனை எதிர்க்கச் செல்கிறார். இறுதியில் வில்லன்களிடமிருந்து தன் நண்பன்; விஸ்வந்தை வெற்றி காப்பாற்றினாரா? தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தாரா?என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

காதலனாக வெற்றி (பிரபாகரன்), காதலியாக தியா மயூரிக்கா (வினிதா), வில்லனாக கேஜிஎப் ராம் (ஹரிமாறன்), எம்.எஸ்.பாஸ்கர் (முத்தையா), சிறப்புப் பணி அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராமன் (ராமைய்யா), மாரிமுத்து (இளவரசு), கபாலி விஷ்வந்த் (கருணா), ரவி வெங்கட்ராமன் (எஸ்.பி), மெட்ராஸ் வினோத் (தீனா), வினோத் சாகர் (புரோக்கர் பாஸ்கர்), லட்சுமி நாராயணன் (நரசிம்மன்), சைதன்யா, விஜி, அபி, கர்ணன் ஜானகி ஆகியோர் படத்தின் உயிர்நாடிகளாக இருந்து திறம்பட செய்துள்ளனர்.

யுகபாரதியின் பாடல் வரிகளில் சாம் சி.எஸ்ஸின் இசை கேட்கும்படி உள்ளது.

மலைக்காடுகளின் பின்னணியில் சூழ்ந்துள்ள ஆபத்துக்கள், ஏழ்மை நிலையில் தத்தளிக்கும் குடும்பங்கள், அதற்காக அவர்கள் படும் இன்னல்கள், தன் காட்சிக்கோணங்களால் தத்ரூமாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா. அனைத்து தொழில் நுட்ப கலைஞர்;களின் பணி கச்சிதமாக உள்ளது.

செம்மரத்தின் உயர் பண்புகள் பற்றி முதல் காட்சியில் விவரித்து, அதன் பின் காணாமல் போன நண்பனைத் தேடி செல்லும் இளைஞனின் பயணத்தில் ஏற்படும் இன்னல்கள், அதை ஆக்ரோஷமாக சமாளித்து அரசியல் பலம் வாய்ந்த கடத்தல் கும்பலிடமிருந்து நண்பரை பத்திரமாக மீட்பதை இயல்பான காட்சிக்கோணங்களுடன் உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு  ஏழ்மை தமிழ் மக்கள் பலிகாடாக ஆக்கப்படுவதை தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குனர் குரு ராமானுஜம். முயற்சிக்கு பாராட்டுக்கள்.

ஜெஎன் சினிமாஸ் சார்பில் ஜெ.பார்த்தசாரதி தயாரிப்பில் ரெட் சாண்டல் வுட் செம்மரக்கடத்தல் பின்னணி கதையை சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்து அசத்தியுள்ளனர்.