ராயர் பரம்பரை திரைவிமர்சனம் : ராயர் பரம்பரை காதலை எதிர்க்கும் நகைச்சுவை அளப்பரை | ரேட்டிங்: 2.5/5
ராயர் பரம்பரை படத்தை சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரித்து ராம்நாத்.டி இயக்கி இருக்கிறார்.
இதில் கிருஷ்ணா, சரண்யா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஆர்.என்.ஆர் மனோகன், கிருத்திகா, அன்ஷ{லா ஜிதேஷ் தவான், கே.ஆர்.விஜயா, கஸ்தூரி, ஷர்மிளா, பாவா லட்சுமணன், சேசு, மிப்பு, தங்கதுரை, கல்லூரி வினோத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்:ஒளிப்பதிவு – விக்னேஷ் வாசு,இசை – கணேஷ் ராகவேந்திரா,எடிட்டர் – சசி குமார், கலை – ராகவ குமார்,ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்,பாடலாசிரியர் – மோகன் ராஜா,நடனம் – சாண்டி, ஸ்ரீசிவா, சங்கர், ஸ்ரீ செல்வி, ஆடை – ரங்கசாமி, ஒப்பனை – ஆர்.கே.ராம கிருஷ்ணன், தயாரிப்பு மேலாளர் – ரகு, நிர்வாகத் தயாரிப்பாளர் – ஆர்.எஸ்.மணிகண்டன், மக்கள் தொடர்பு – எய்ம் சதீஷ்.
கோயம்பத்தூரில் வேட்டைக்காரன்புதூரில் இருக்கும் ராயர் பரம்பரையைச் சேர்ந்த ஆனந்த்ராஜ், மனைவி, மகள் சரண்யா மற்றும் அம்மா கே.ஆர்.விஜயாவுடன் வசிக்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு தங்கை கஸ்தூரி காதலித்து வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் அந்த கிராமத்தில் மொட்டை ராஜேந்திரனை வைத்து க.கா.பி.க என்ற கட்சியை ஆரம்பித்து அடியாட்களை வைத்து காதலிக்கும் ஜோடிகளை கண்டுபிடித்து அடித்து பிரித்து வைக்கிறார். அந்த கட்சியின் துணை தலைவராக இருக்கிறார் கிருஷ்ணா. அந்த கிராமத்தில் இசை கற்றுத் தருகிறார். அவரிடம் நெருங்கி பழகும் கிருத்திகா, அன்ஷ{லா ஜிதேஷ் தவான் ஆகிய இரண்டு பெண்கள் கிருஷ்ணாவை போட்டி போட்டுக் கொண்டு காதலிக்கிறார்கள். இதனிடையே சரண்யாவின் ஜாதகத்தில் காதலித்து தான் திருமணம் செய்து கொள்வார் என்று ஆனந்தராஜிடம் ஜோசியர் மனோபாலா சொல்கிறார். ஒரு நாள் திடீரென்று சரண்யா காணாமல் போகிறார். காதலனுடன் ஒடி விட்டார் என்பதையறிந்து பதறும் ஆனந்தராஜ் தன் அடியாட்களுடன் சேர்ந்து தேடுகிறார். மொட்டை ராஜேந்திரனையும் தேடச் சொல்கிறார். இறுதியில் சரண்யாவை ஆனந்தராஜ் கண்டுபிடித்தாரா? யாரை சரண்யா காதலித்தார்? கிருஷ்ணா இந்த கிராமத்திற்கு வர காரணம் என்ன? ஆனந்தராஜ் மகள் சரண்யாவிற்கு காதலித்த மாப்பிள்ளையே திருமணம் செய்து வைத்தாரா? ஆனந்தராஜ் தன் தங்கை கஸ்தூரியை மன்னித்து ஏற்றுக் கொண்டாரா? என்பதே க்ளைமேக்ஸ்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு கிருஷ்ணர் காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட், காமெடி கலந்து நடித்துள்ளார். கதாநாயகியாக சரண்யா இடைவேளைக்குப்பின் தான் முக்கியமான காட்சிகளில் வருகிறார். பாசக்கார தந்தையாகவும், அண்ணனாகவும், வில்லனாகவும் நகைச்சுவை கலந்து அவருடைய டயலாக் டெலிவரி ஸ்டைலில் ஆனந்தராஜ் சிறப்பாக செய்துள்ளார். படம் முழுவதும் வந்து அளப்பரை பண்ணும் மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஆர்.என்.ஆர் மனோகன், கிருத்திகா, அன்ஷ{லா ஜிதேஷ் தவான், கே.ஆர்.விஜயா, கஸ்தூரி, ஷர்மிளா, பாவா லட்சுமணன், சேசு, மிப்பு, தங்கதுரை, கல்லூரி வினோத் உள்ளிட்ட பலர் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
இந்த படத்தின் ஒளிப்பதிவு – விக்னேஷ் வாசு,இசை – கணேஷ் ராகவேந்திரா,எடிட்டர் – சசி குமார், கலை – ராகவ குமார்,ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன் ஆகிய தொழில் நுட்ப கலைஞர்கள் படத்தை முடிந்தவரை சுவாரஸ்யமாக்க முயற்சித்துள்ளனர்.
காதல் கலந்த காமெடி திரைக்கதையை முழுநீள படமாக கொடுக்க நினைத்திருக்கும் இயக்குனர் ராம்நாத்.டி, அதில் ஆக்ஷன், தங்கை சென்டிமெண்ட் கலந்து ராயர் பரம்பரையை கொடுத்துள்ளார். முழு படத்தை சிரித்து ரசிக்க வைக்க பல காமெடி நடிகர்களை களமிறக்கியிருந்தாலும் சில காட்சிகள் மட்டுமே சிரிக்க வைத்துள்ளனர்.
மொத்தத்தில் சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரித்திருக்கும் ராயர் பரம்பரை காதலை எதிர்க்கும் நகைச்சுவை அளப்பரை.