ராக்கெட் டிரைவர் சினிமா விமர்சனம் :  ராக்கெட் டிரைவர் கால ஒட்டத்தின் வித்தியாசமான விறுவிறுப்பான பயணத்தை ரசிக்(கலாம்) கொண்டாடலாம் | ரேட்டிங்: 3/5

0
500

ராக்கெட் டிரைவர் சினிமா விமர்சனம் :  ராக்கெட் டிரைவர் கால ஒட்டத்தின் வித்தியாசமான விறுவிறுப்பான பயணத்தை ரசிக்(கலாம்) கொண்டாடலாம் | ரேட்டிங்: 3/5

ஸ்டோரீஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரித்திருக்கும் ராக்கெட் டிரைவர் படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஸ்ரீராம் ஆனந்தசங்கர்.

இதில் பிரபாவாக விஸ்வத், கமலாவாக சுனைனா, ஏபிஜே அப்துல் கலாமாக நாக விஷால், சாஸ்திரியாக காத்தாடி ராமமூர்த்தி, ஆனந்த குமாரசாமியாக ஜெகன், சவரி முத்துவாக ராமச்சந்திரன் துரைராஜ் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : இசை: கௌசிக் கிரிஷ், ஒளிப்பதிவாளர்: ரெஜிமெல் சூர்யா தாமஸ், எடிட்டர் : இனியவன் பாண்டியன், ஆடை வடிவமைப்பாளர்: ஷில்பா ஐயர், தயாரிப்பு வடிவமைப்பாளர்: பிரேம் கருந்தமலை, இணை எழுத்தாளர்: அக்ஷய் பூல்லா, உரையாடல் எழுத்தாளர்: பிரசாந்த் எஸ், தயாரிப்பு நிர்வாகி: செல்வேந்திரன், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: யுவராஜ் பி.வி, மக்கள் தொடர்பு : ஸ்ரீ வெங்கடேஷ்

2023ம் ஆண்டில் இருக்கும் ஒரு இளம் ஆட்டோ ஓட்டுநர் டைம் டிராவல் மூலம் 1948ம் ஆண்டிலிருந்து வரும் சிறு வயது அப்துல் கலாமின் எதிர்பாராத சந்திப்பு, வாழ்க்கையைப் பற்றிய அவனது அணுகுமுறையை மாற்றுவதே இப்படத்தின் கதைக்களம். கல்லூரி படிப்பை முடித்து அறிவியல் விஞ்ஞானியாகி பல சாதனைகளை செய்ய வேண்டும் என்று கனவில் இருக்கும் பிரபா (விஸ்வத்) வறுமை சூழல் காரணமாக தந்தையால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ஆட்டோ ஒட்டுகிறார். இதனால் விரக்தியில் இருக்கும் பிரபா தான் சந்திக்கும் நபர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதும், மற்றவர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் வாழ்கிறார். அவருக்கு ஆதரவாக இருப்பது போக்குவரத்து ஆய்வாளர் கமலா அக்கா(சுனைனா) மட்டுமே. புpரபா இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் தீவிர ரசிகராக இருக்கிறார். அவரைப் போல் சாதனைகளை செய்து புகழ் பெற வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கையில் ஒரு நாள் 17 வயது நிரம்பிய இளைஞனை சந்திக்கிறார். வித்தியாசமான உடையுடன் டிரங்க பெட்டி சகிதமாக நின்று கொண்டிருக்கும் அந்த இளைஞர் பிரபாவிடம் வந்து மெட்ராஸ் யுனிவர்சிடி போக வேண்டும் என்று கூற அவரை அழைத்துச் சென்று அந்த இடத்தில் இறக்கி விடுகிறார் பிரபா. அப்பொழுது தான் அந்த இளைஞர் பெயர் ஏபிஜே அப்துல் கலாம் என்பதும் டைம் டிராவல் மூலம் வந்து இறங்கியிருப்பதும் பிரபாவிற்கு தெரிய வருகிறது. அதன் பின் பிரபா அப்துல் கலாமிற்கு உதவி செய்தாரா? அவரின் வருகைக்கு காரணமென்ன என்று கண்டுபிடித்தாரா? அவரின் நிறைவேறாத ஆசையை பூர்த்தி செய்து மீண்டும் 1948 காலகட்டத்திற்கே அனுப்பி வைத்தாரா? என்பதே படத்தின் கற்பனை கலந்த கதை.

பிரபாவாக விஸ்வத் முதலில் அவரின் நடவடிக்கை நடந்து கொள்ளும் விதம் என்று வித்தியாசமாக காணப்பட்டாலும் பின்னர் எதனால் இந்த தடுமாற்றம் என்பது புரியும் போதும், சிறு வயது அப்துல் கலாமை சந்தித்த பின் ஏற்படும் மாற்றம், அவருக்காக ராமேஸ்வரம் வரை போய் முடிந்த வரை உதவிகள் செய்யும் குணம் என்று கதாபாத்திரத்தை உணர்ந்து திறம்பட செய்துள்ளார்.

படத்தின் உயிர் நாடி ஏபிஜே அப்துல் கலாமாக வரும் நாக விஷால் தான். அப்பாவியாகவும், வெள்ளேந்தி மனதுடன் சென்னைக்கு வரும் சிறுவயது கலாமாக, பிரபாவை அண்ணா அண்ணா என்று அன்பொழுக அழைத்து தான் எதற்காக வந்தோம் என்பதையறிதாவராக, பின்னர் தன் நண்பன் சாஸ்திரியை பார்த்தவுடன் மகிழ்ச்சியாக நினைவுகளை பகிர்ந்து கொண்டு ஒரு அணாவை திருப்பி தர படாதபாடு பட்டு அதை செய்து விட்டு விடைபெறும் போது நினைவுகளை விட்ட அகலாத வண்ணம் இயல்பான வசன உச்சரிப்பு, நடை, உடை, பாவனை என்று அச்சு அசலாக கண் முன் சிறு வயது கலாமாக வாழ்ந்துள்ளார்.வாழ்த்துக்கள்.

கலாமின் நண்பர் சாஸ்திரியாக காத்தாடி ராமமூர்த்தி தன் முதிர்ந்த அனுபவ நடிப்பை நேர்த்தியாக கொடுத்து கை தட்டல் பெறுகிறார்.

கமலா வேடத்தில் சுனைனா, ஆனந்த குமாரசாமியாக ஜெகன், சவரி முத்துவாக ராமச்சந்திரன் துரைராஜ் ஆகியோர் சில காட்சிகள் என்றாலும் ரசிக்கும்படி செய்துள்ளனர்.

இசை: கௌசிக் கிரிஷ், ஒளிப்பதிவாளர்: ரெஜிமெல் சூர்யா தாமஸ், எடிட்டர் : இனியவன் பாண்டியன், ஆடை வடிவமைப்பாளர்: ஷில்பா ஐயர் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்;களின்  கூட்டு முயற்சியில் வித்தியாசத்தை காட்டும் இரண்டு வித காலகட்டங்களின் விவரிப்பை சிறப்பாக கையாண்டு தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர்.

2015ல் அப்துல் கலாம் தன் டைரியில் குறிப்பிட்ட சிறு வயது சம்பவத்தின் அடிப்படையில் 1948 காலகட்டத்திலிருந்து 2023ம் ஆண்டில் சென்னைக்கு பயணித்து அங்கே ஆட்டோ டிவைராக இருக்கும் இளைஞரிடம் உதவி கேட்டு தான் பூர்த்தி செய்யாத செயலை செய்ய வைத்து மீண்டும் தன் இளமை பருவ ஆண்டிற்கு பயணிப்பதே ராக்கெட் டிரைவர் படத்தின் கற்பனை திரைக்கதையாக இயக்கியிருக்கிறார் ஸ்ரீராம் ஆனந்தசங்கர். இந்த படத்தின் டைட்டில் கதைக்கு மிக பொருத்தமாக அமைத்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு. படத்தில் கற்பனை கலந்த டைம் டிராவல் கான்சப்டில் அத்தனை அம்சங்களையும் நேர்த்தியாக ரசிக்கும்படி கொடுத்து புதுமை, இளமை கலந்து மகிழ்ச்சி என்பது பெரிய சாதனையில் இல்லை மறந்து போன சின்ன விஷயத்தையும் நினைவுகூர்ந்து மறவாமல் செய்து முடிப்பதே என்று  வித்தியாசமான கண்ணோட்டத்துடன் யோசித்து விஞ்ஞானத்தில் மூழ்காமல் எளிமையான விவரிப்புடன் அதையும் அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கும் ஸ்ரீராம் ஆனந்தசங்கருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ஸ்டோரீஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரித்திருக்கும் ராக்கெட் டிரைவர் கால ஒட்டத்தின் வித்தியாசமான விறுவிறுப்பான பயணத்தை ரசிக்(கலாம்) கொண்டாடலாம்.