யானை விமர்சனம் : யானை சரியான ஆல்-சென்டர் மாஸ் ஆக்ஷன் கலந்த ஃபேமிலி என்டர்டெய்னர்| மதிப்பீடு: 3|5

0
506

யானை விமர்சனம் : யானை சரியான ஆல்-சென்டர் மாஸ் ஆக்ஷன் கலந்த ஃபேமிலி என்டர்டெய்னர் | மதிப்பீடு: 3|5

ட்ரம்ஸ்டிக் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் வேடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல் தயாரித்து யானை படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஹரி.
இதில் அருண் விஜய், ராஜேஷ், ராதிகா சரத்குமார், பிரியாபவானி சங்கர், அம்மு அபிராமி , சமுத்திரக்கனி,  போஸ் வெங்கட், கேஜிஎஃப் ராமச்சந்திரா ராஜீ, ஆடுகளம் ஜெயபாலன், சஞ்சீவ், யோகி பாபு, இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை  – ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு-கோபிநாத், கலை-மைக்கேல்,எடிட்டர்-ஆண்டனி, பாடல்கள்- சினேகன், ஏகாதேசி. அறிவு, சண்டை-அனல் அரசு, இணை இயக்குனர்-ஜான் ஆல்பர்ட், நடனம்-பாபா பாஸ்கர்,தினா, தயாரிப்பு நிர்வாகி- சின்னா ஆர். ராஜேந்;திரன், ஒப்பனை-முனியராஜ், உடை-ரங்கசாமி, நிவேதா ஜோசப், நீது, மக்கள் தொடர்பு – ஏய்ம் சதீஷ்.

ராமநாதபுரத்தில் பி.ஆர்.வீரப்பாண்டியனின் (பி.வி.ஆர்.) குடும்பம் பெரிய குடும்பம். மூன்று பெரிய சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளை ரவி (அருண் விஜய்). ரவி தனது அண்ணன்களான சமுத்திரனி, வெங்கட் போஸ், சஞ்சீவ் மூவரின் மீதும் அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். அண்ணன்கள் மூவரும் (சாதிக்கு அடிமையானவர்கள்) அருண் விஜய்யை இரண்டாம் தாய் வயிற்றில் பிறந்த பையனாக தான் பார்க்கின்றனர். பி.ஆர்.வி  மற்றும் சமுத்திரத்தின் (ஆடுகளம் ஜெயபாலன்) குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால், சமுத்திரத்தின் மகன் பச்சி (முபுகு ராமச்சந்திரா) தற்செயலாக கொல்லப்படுகிறார். தன் சகோதரனை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரியை கொன்று லிங்கம் சிறை செல்கிறான். பாச்சியின் இரட்டை சகோதரர் லிங்கம் (கேஜிஎஃப் ராமச்சந்திரா) மற்றும் அவரது தந்தை சமுத்திரம் பிஆர்வி குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்று பழிவாங்க முடிவு செய்கிறார்கள். ஆனால்  ரவி (அருண்; விஜய்) ஒரு பாதுகாவலனாக இருப்பதால், தனது கூட்டுக் குடும்பத்தை போட்டி கும்பலில் இருந்து பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் அருண் விஜய் குடும்பத்தின் மீது இருக்கும் பகையை தீர்த்துக்கொள்ள லிங்கம் சிறையில் இருந்து வெளியே வருகிறார். லிங்கம் பழிவாங்க துடிக்க அதனை சமரசமாக சமாதானப்படுத்தும் முயற்சியில் அருண்விஜய் களம் இறங்குகிறார்.  பி.ஆர்.வி குடும்பத்தில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது, அதில் ரவி கெட்டவனாக குடும்பத்திற்கு தெரிய பெரிய அண்ணன் சமுத்திரக்கனி மற்றும் அவருடைய தம்பிகள் ரவியை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள். ரவியுடன் அவருடைய தாயும் (ராதிகா) விட்டை விட்டு வெளியேறுகிறார்;. அதன் பின் பி.ஆர்.வி குடும்பத்தை பழிவாங்க காத்திருக்கும் லிங்கத்திடம் இருந்து தன் குடும்பத்தை ரவி காப்பாற்றினாரா? எதிரியை எப்படி சமாளித்தார், கூட்டுக் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுவதற்கு என்ன காரணம்? அதை எப்படி தீர்த்து வைத்து, மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் அருண் விஜய் நடிப்பில் மாஸ் காட்டி முழு படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார். அருண் விஜய் தனது பாத்திரத்தில் அருமையாக தெறிக்கும் ஆக்ஷனாக இருந்தாலும் சரி, உணர்ச்சிகரமான காட்சியாக இருந்தாலும் சரி, அருண் விஜய் வலுவான நடிப்பை வெளிப்படுத்தி, ரவியின் கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்.

மூத்த சகோதரனாக சமுத்திரக்கனி மற்றும் நடுத்தர சகோதரன் வேடங்களில் வரும் போஸ் வெங்கட், சஞ்சீவ், தங்களுடைய கதாபாத்திரத்திற்கு திறம்பட நியாயம் சேர்த்து தங்களது பங்களிப்பை சிறப்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ராஜேஷ், ராதிகா சரத்குமார், பிரியா பவானி சங்கர், ஆடுகளம் ஜெயபாலன், அம்மு அபிராமி, கே.ஜி.எஃப் புகழ் ராமச்சந்திர ராஜு, தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, புகழ்ஆகியோர் தங்கள் மாறுபட்ட கதாபாத்திரங்களில், உணர்ச்சிகரமான காட்சிகளில் யதார்த்தமாக நடித்து ஸ்கோர் செய்து அசத்தியிருக்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு யோகி பாபுவின் நகைச்சுவை பாராட்டுக்குரியது.
கோபிநாத்தின் ஒளிப்பதிவு இறால் பண்ணை,  போக்குவரத்து பணிமனை, படகு சேசிங் உண்மையிலேயே அருமை. படத்தின் முன்கதை கடலோரப் பகுதியில் அமைக்கப்பட்டு அந்த இடங்களை அழகாக படம் பிடித்துள்ளார்.

இன்று அனைத்து சினிமாவிலும் சண்டை காட்சிகள் ரசிகர்களை தியேட்டர்களுக்கு ஈர்ப்பதால் சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதில் ஸ்டண்ட்  இயக்குனர் அனல் அரவு ஆக்~ன் காட்சிகளை சிறப்பாக அமைத்து படத்தின் கதைகளத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் பாடல்கள் தாளம் போட வைக்கிறது, பின்னணி  இசையில் ஸ்கோர் செய்துள்ளார்.

அந்தோணியின் எடிட்டிங்கில் கொஞ்சம் கத்திரி வைத்தால் படம் இன்னும் கொஞ்சம் வேகம் அதிகரித்திருக்கும்.

வழக்கமான கதையில் போதுமான குடும்ப உணர்வுகளை இணைத்து அண்ணன், அண்ணி, பெரியப்பா, சித்தப்பா சூழ்ந்த ஒரு குடும்ப பாசத்தை அனைத்து ஆக்ஷன் டிராமாவா திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி  இயக்கி,  வெகுஜன  ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளார். குறிப்பாக க்ளைமாக்ஸ் வேறொரு முடிவில்; முடிந்திருப்பது இன்னொரு ப்ளஸ்.

மொத்தத்தில் ட்ரம்ஸ்டிக் ப்ரொடக்ஷன்ஸ் வேடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல் தயாரித்துள்ள யானை சரியான ஆல்-சென்டர் மாஸ் ஆக்ஷன் கலந்த ஃபேமிலி என்டர்டெய்னர்.