மை டியர் பூதம் விமர்சனம் : ஜாலியா ஒரு தடவை குழந்தைகளுடன் போய் என்ஜாய் பண்ற ஒரு ஃபீல் குட் படம் மை டியர் பூதம்| ரேட்டிங் – 3/5

0
430

மை டியர் பூதம் விமர்சனம் : ஜாலியா ஒரு தடவை குழந்தைகளுடன் போய் என்ஜாய் பண்ற ஒரு ஃபீல் குட் படம் மை டியர் பூதம்| ரேட்டிங் – 3/5

அபிஷேக் பிலிம்ஸ் பேனரில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்து மஞ்சப்பை மற்றும் கடம்பன் புகழ் என்.ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் குழந்தைகளுக்கான முழுநீள ஃபேண்டசி திரைப்படம் மை டியர் பூதம்.
நடிகர்கள்: பிரபுதேவா, அஸ்வந்த் அசோக்குமார், ரம்யா நம்பீசன், ஆலியா, சுரேஷ் மேனன், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி , பரம் குகனேஷ், சாத்விக், சக்தி, கேசிதா.
ஒளிப்பதிவு : யு.கே.செந்தில்குமார்
எடிட்டிங் : சாம் லோகேஷ்
கலை இயக்கம் : ஏ ஆர் மோகன்
வசனம் : தேவ ஹாசா
இசை: டி.இமான்
இயக்கம் : என்.ராகவன்

பூதா பூதங்களின் தலைவராக இருக்கிறார் கர்கிமுகி. தன் மகன் கிங்கினி, விளையாட்டாக செய்யும் ஒரு விபரீதத்தால், கர்கிமுகியின் மகன் கிங்கினி ஒரு முனிவரின் சாபத்துக்கு ஆளாகிறார். மகனுக்கு பதிலாக அந்த சாபத்தை கர்கிமுகி ஏற்றுக்கொண்டு, சிலையாக மாறி பூமியில் வந்து விழுந்து கிடக்கிறது. அதை தொட்டு துடைப்பவர்கள் மூலம் சாப விமோசனம் அடைந்து மீண்டும் உயிர்பெறலாம்.இன்னொரு பக்கம் வாய் பேசச் சிரமப்படும் சிறுவனான திருநாவுக்கரசை அவன் சுற்றமும் நட்பும் நக்கல் அடிக்கிறது. இழிவாகப்பேசுகிறது. அப்போது சிலையான கர்கிமுகியை எதேச்சையாய் சிறுவன் திருநாவுக்கரசு (அஸ்வந்த் அசோக்குமார்) தொட்டுவிட, பூதம் கர்கிமுகி வெளியே வந்துவிடுகிறார்.முதலில் பூதத்தைப் பார்த்து பயப்படும் சிறுவன், நாளடைவில் அதனுடன் நெருக்கமாகி விடுகிறான். அவனுக்கு பூதம் சின்ன சின்ன சாகசங்களை செய்து காட்டி மகிழ்விக்கிறது. சிறுவன் திருநாவுக்கரசுவுக்கோ திக்கிப் பேசும் பிரச்சினை. சரளமாக பேச ஆசைப்படும் அந்த சிறுவன், பள்ளியில் நடைபெறும் பேச்சுப்போட்டியில் கலந்து கொள்கிறான். பேசும்போது திக்குவாய் ஏற்பட்டால், தனக்கு பூதம் உதவும் என்ற நம்பிக்கையுடன் அவன் மேடை ஏறுகிறான். பேசும்போது அவனுக்கு திக்குவாய் ஏற்படுகிறது. சிறுவன் அழுகிறான். மேடையிலேயே நிற்கும் பூதம், அவனுக்கு உதவவில்லையே என்று ஆதங்கப்படுகிறான். அப்போது தனக்கு சில எல்லைகள் உள்ளன என்று அவனிடம் பூதம் விளக்குகிறது. இந்த சமயத்தில், பூதம் பூமியில் வாழ்ந்ததற்கான காலம் முடிவடைகிறது. ஆதாவது, உயிர் கொடுத்தவர்கள் ஒரு மந்திரத்தை 48 நாட்களுக்குள் சொன்னால் மட்டுமே கற்கிமுகி மீண்டும் பூத உலகத்துக்கு திரும்பி மகனுடன் சேர முடியும். அவனால் அந்தமந்திரத்தை சரியாக உச்சரித்து பூதத்தை விடுவித்தாரா? கர்கிமுகி பூதலோகத்தில் இருக்கும் மகனுடன் சேர்ந்தாரா? என்தே மீதி கதை.

பிரபு தேவா மொட்டை அடித்து ஜீனியாக, குழந்தைகளை மகிழ்விக்க ஒரு செகண்ட் காட்சிக்காக கெட்டப் சேஞ்ச் பண்ணுவது என அந்த கதாபாத்திரத்திற்கு ஹோம் வொர்க் செய்து, தன் உடல் மொழியிலும் தேவையான அனைத்தையும் ஏமோஷன்ஸ் கலந்து நீட்டான பர்பாமன்ஸாக கொடுத்துள்ளார்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் அனைவரையும் கவர்ந்த அஸ்வந்த் அசோக்குமார் இந்த படத்தில் திக்குவாய் கதாபாத்திரத்தில் செமயான வசன உச்சரிப்பு அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அஸ்வந்தின் அம்மாவாக வரும் ரம்யா நம்பீசன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். குழந்தை கலைஞர்களான பரம் குகனேஷ், சாத்விக், சக்தி மற்றும் கேசிதா எல்லாரும் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை முடிந்த அளவுக்கு நேர்த்தியாகவே ஸ்கிரீன்ல பதிவு செய்துள்ளார்கள்.

பிரபுதேவா, அஸ்வந்த் அசோக்குமார், ரம்யா நம்பீசன், அவர்கள் கதையின் முக்கியமான கதாபாத்திரங்கள் வைத்து வீட்ல ஒரு பத்து வயதுக்கு கீழ் இருக்கக்கூடிய குழந்தைகளை டார்கெட் செய்து முழுக்க முழுக்க குழந்தைகளின் கற்பனை படமாக கொஞ்சம் நல்ல காமெடி, நல்ல ஏமோஷனல் மற்றும் மோட்டிவேஷனல் என எல்லாத்தையும் கலந்து திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் என்.ராகவன்.

மொத்தத்தில் அபிஷேக் பிலிம்ஸ் பேனரில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்துள்ள மை டியர் பூதம் ஜாலியா ஒரு தடவை குழந்தைகளுடன் போய் என்ஜாய் பண்ற ஒரு ஃபீல் குட் படம்.