மூத்தகுடி சினிமா விமர்சனம் : மூத்தகுடி மதுவை ஒழிக்க போராடும் துணிச்சலான கிராமம் | ரேட்டிங்: 2/5

0
192

மூத்தகுடி சினிமா விமர்சனம் : மூத்தகுடி மதுவை ஒழிக்க போராடும் துணிச்சலான கிராமம் | ரேட்டிங்: 2/5

தி ஸ்பார்க்லேண்ட் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்திருக்கும் மூத்தகுடி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்  ரவி பார்கவன்.

இதில் தருண்கோபி ( வீரய்யன் ), பிரகாஷ் சந்திரா ( அய்யாதுரை ),அன்விஷா ( ஜோதி ), கே.ஆர். விஜயா ( மூக்கம்மா ), ஆர்.சுந்தர்ராஜன் ( நச்சாளி ), ராஜ்கபூர் ( செந்தூரப்பாண்டியன் ), யார் கண்ணன் (பழையசோறு ), சிங்கம் புலி ( பஞ்சுபெட்டி ) ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – கந்தா ரவிச்சந்திரன், இசை –ஜெ.ஆர். முருகானந்தம், பாடல்கள் – நந்தலாலா, எடிட்டிங் – வளர்பாண்டி, ஸ்டண்ட் – சரவெடி சரவணன், நடனம் – ரம்யா தேவி, கதை, வசனம் – ஆ.சரக்குட்டி, மக்கள் தொடர்பு – மணவை புவன்

மூக்கம்மா (கே.ஆர்.விஜயா) மூத்தகுடி கிராமத்தில் அவரின் சொல்லுக்கு ஊரே கட்டுப்படும் அளவிற்கு செல்வாக்கு மிக்கவர். மூக்கம்மாவின் குடும்பத்தில் பலர் மது குடிக்கும் பழக்கம் இருக்கிறது. ஒரு நாள்;; குலதெய்வகோவிலுக்கு சென்று மூக்கம்மா பூஜை செய்ய நினைத்து குடும்பத்தினருடன் வண்டியில் புறப்படுகிறார். வழியில் மூக்கம்மாவின்  மகன், மருமகன்; மற்றும் டிரைவர் ஆகியோர் நன்றாக மது அருந்திச் சென்றதால் வண்டி விபத்துக்குள்ளாகி அதில் இருந்தவர்கள் பலர் உயிரிழக்கின்றனர். இந்த விபத்தில் மூக்கம்மா, அவரது தம்பி பழையசோறு (யார் கண்ணன்) மற்றும் மூன்று பேரக்குழந்தைகள் மட்டுமே உயிர் தப்புகின்றனர். அனாதையான குழந்தைகளை மூக்கம்மாவும், தம்பி பழையசோறு ஆகிய இருவரும் எடுத்து வளர்க்கிறார்கள். பல உயிர் பலி வாங்கிய அந்த மோசமான சம்பவத்துக்கு பிறகு மதுவை ஒழித்துக் கட்ட முடிவு செய்கிறார் மூக்கம்மா.மூத்தகுடியில் இனி யாரும் மது குடிக்க கூடாது, அப்படி குடித்தால்  ஊரை விட்டு அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்றும் கட்டுப்பாடு போட்டு ஊருக்குள் மது விற்கவும் தடை விதிக்கிறார். அவருடைய கட்டுப்பாட்டை மீறாமல் மூத்தகுடி மக்கள் மது குடிக்காமல் வாழ்ந்து வருகின்றனர். மூக்கம்மாவின் பேரக்குழந்தைகள் வீரய்யன் (தருண் கோபி), அய்யாதுரை (பிரகாஷ் சந்திரா) மற்றும் முறைப்பெண் ஜோதி (அன்விஷா) ஆகியோர் வளர்ந்து பெரியவர்களாகி விடுகின்றனர். வீரய்யனுக்கு ஜோதியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கின்றனர். ஆனால் ஜோதி அய்யாதுரையை காதலிப்பதால் திருமணத்திற்கு சம்மதிக்காமல் இருக்கிறார். இதை கேள்விப்படும் ஜோதியை ஒருதலையாக காதலிக்கும் வீரய்யனுக்கு கோபம் வந்து மூக்கம்மாவிடம் மற்றும் ஊர் பெரியவர்களிடமும் சண்டை போடுகிறார். இதற்கிடையில், தொழிலதிபர் செந்தூரப்பாண்டியன் (ராஜ்கபூர்) கிராமத்தில் ஒரு மதுபான தொழிற்சாலையை உருவாக்க திட்டமிட்டு மூத்தகுடி கிராமத்திற்குள் நுழைய வீரய்யனை தன் பக்கம் இழுக்;க திட்டம் போடுகிறார். வீரய்யன் செந்தூரப்பாண்டியன் சூழ்ச்சி வலையில் சிக்கி, மதுவுக்கு எதிரான கட்டுப்பாட்டை உடைக்க முயற்சி செய்கிறார். இறுதியில் செந்தூரப்பாண்டியனின் திட்டம் பலித்ததா?  ஜோதி யாரை திருமணம் செய்து கொண்டார்? வீரய்யனின் ஆசை நிறைவேறியதா? வீரய்யன் என்ன ஆனார்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

வீரய்யனாக தருண் கோபி முடிந்த அளவு முயற்சி செய்து ஓரளவு உணர்ந்து செய்திருந்தாலும் சில இடங்களில் மிகையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரகாஷ் சந்திராவின் கதாபாத்திரம் அழுத்தமில்லாமல் இருக்கிறது.

கே.ஆர்.விஜயா தனது அனுபவ நடிப்பால் தனித்து தெரிகிறார். அன்விஷா, வில்லவனாக ராஜ் கபூர் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.மற்ற நடிகர்களும் தங்கள் பங்களிப்பை திருப்திகரமாக செய்திருக்கிறார்கள்.

ஆர். சுந்தர்ராஜன் மற்றும் சிங்கம் புலி ஆகியோரைக் கொண்ட நகைச்சுவை துணைக்கதை எடுபடவில்லை.

காந்தா ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவும், ஜே ஆர் முருகானந்தத்தின் இசையும் நன்றாக உள்ளது.

அதீத மது அருந்துதல் காரணமாக பல கிராமவாசிகளின் துயர மரணங்களை தழுவதும்,அதனால் ஏற்படும் பாதகங்கள், விளைவுகள், தீர்வுகள் என்ன என்பதை ஆ.ராசுகுட்டியின் வசனத்திலும் கிராமத்து கதையாக காதலுடன் கலந்து  இயக்கியிருக்கிறார் ரவி பார்கவன்.  மது குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ரவி பார்கவன். எழுத்து மற்றும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் படத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.

மொத்தத்தில் தி ஸ்பார்க்லேண்ட் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்திருக்கும் மூத்தகுடி மதுவை ஒழிக்க போராடும் துணிச்சலான கிராமம்.