முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் (மலையாளம்) விமர்சனம்: வித்தியாசமான கோணத்தில் வழக்கறிஞர்களின் குள்ளநரித்தனத்தை தோலுரித்துக் காட்டும்; திரைக்கதை அசர வைத்திடும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் க்ரைம் மலையாள படம் அனைவரையும் கவரும் | ரேட்டிங்: 3.5/5
ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜெயிண்ட் பிலிம்ஸ் வழங்கும் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் மலையாள படத்தில் வினீத் சீனிவாசன், சுராஜ் வெஞ்சாரமூடு, சுதி கோபா, அர்ஷா பைஜு, தன்வி ராம், ஜார்ஜ் கோரா, ரியா சாய்ரா, சுதீஷ் ஆகியோர் நடித்து படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அபினவ் சுந்தர் நாயக்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-எழுத்தாளர்கள்: அபினவ் சுந்தர் நாயக் மற்றும் விமல் கோபாலகிருஷ்ணன்,ஒளிப்பதிவு : விஸ்வஜித் ஒடுக்கத்தில்,இசை: சிபி மேத்யூ அலெக்ஸ்,நிர்வாக தயாரிப்பாளர்கள்: பிரதீப் மேனன், அனூப் ராஜ் எம், கலை : வினோத் ரவீந்திரன்,பாடல் வரிகள்: மனு மஞ்சித், எலிஷா ஆபிரகாம்,சண்டைக்காட்சிகள்: சுப்ரீம் சுந்தர் மற்றும் மாஃபியா சசி, தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: மனோஜ் பொன்குன்னம்,ஒலி வடிவமைப்பு: ராஜ் குமார் பி, ஒலி கலவை: விபின் நாயர்,முதன்மை இணை இயக்குனர்: ராஜேஷ் அடூர்,இணை இயக்குனர்: ஆண்டனி தாமஸ் மங்கலி,ஆடை வடிவமைப்பாளர்: காயத்ரி கிஷோர், ஒப்பனை: ஹாசன் வண்டூர், வண்ணம்: ஸ்ரீக் வாரியர், சண்டைக்காட்சிகள்: சுப்ரீம் சுந்தர் மற்றும் மாஃபியா சசி, பிஆர்ஒ- பரணி, திரு
திருமணமாகாத வக்கீல் முகுந்தனுண்ணி (வினீத் சீனிவாசன்) 36 வயதுடையவர், அசையாத கண்மூடித்தனமான மனதுடன் வாழ்க்கையில் ‘வெற்றி’ அடையப் புறப்பட்டவர். பழைய முகுந்தன் உன்னியாக ஜூனியர் வழக்கறிஞராக நேரத்தை வீணடிப்பதில் விருப்பமில்லாமல், சொந்தமாக வழக்குகளைத் தாக்கல் செய்ய முயற்சிக்கிறார். பல சீனியர் வக்கீல்களிடம் ஜூனியராக பிராக்டீஸ் செய்தும், வாழ்க்கையை செழிப்;பாக்க முடியாதவர், யாருடைய அனுதாபத்தையும் பெறாதவர். முகுந்தன் உன்னி வாழ்க்கையில் வெற்றியடைவதற்கான தனது ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியடைந்து திரும்பும் நேரத்தில் ஒருநாள் வீட்டில் படிக்கட்டுகளில் ஏறும் போது பாம்பைப் பார்த்த தாய் தரையில் தவறி விழ தனது தாயாருக்கு மருத்துவமனைக் கட்டணத்தைச் செலுத்த உதவும் வக்காலத்து வழக்கறிஞர் வேணுவை சந்திக்கிறார். முகுந்தன் வெற்றிக்கான புதிய யோசனைகளை வேணு மூலம் பார்த்து தெரிந்து கொள்கிறார், மேலும் பணம் சம்பாதிக்கவும், செல்வசெழிப்பு மற்றும் வெற்றியைப் பெறவும் தனது வாழ்க்கையை புதிதாகத் தொடங்குகிறார். முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கும் முகுந்தன் உன்னி தனது சட்ட அறிவைப் பயன்படுத்தி ஒவ்வொரு சூழ்நிலையையும் வெல்லும் ஒரு சாதாரண வழக்கறிஞரை விட சுரண்டும் வக்கீலாக மாற முடிவு செய்கிறார். முகுந்தன் உண்ணியின் வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனையாக அமைகிறது. இவரின் ஆசை பேராசையாக மாறி ஒவ்வொரு கட்டத்திலும் தனக்கு தடையாக இருப்பவர்கள், இருக்கின்றவர்களை சாதுர்யமாக வீழத்தியும் அழித்தும் முன்னேறுகிறார். ‘முகுந்தன் உன்னி’ வாழ்க்கையில் வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பவனாக மாறுகிறார். அதன் பின் ‘முகுந்தன் உன்னி’யின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடி சம்பவங்கள் என்ன என்பது தான் படத்தின் மீதிக் கதை.
கறுப்பு பிரேம் கண்ணாடி அணிந்து, எண்ணெய் தடவிய தலைமுடி, வெள்ளை உடை அணிந்த ஹீரோ அல்ல, வில்லன் என்பதை ஊழல் மற்றும் சுயநலம் பொருந்திய வழக்கறிஞராக நெகட்டிவ் ஷேடுடன் முகுந்தன் உன்னியாக திரையில் வினித் சீனிவாசன் நிரப்புகிறார். ஒரு சுயநல வழக்கறிஞர், வெற்றியை மனதில் கொண்டு, எளிதாக கதாபாத்திரத்திற்க்கு பொருந்துகிறார். படத்தின் பெரும்பகுதி முகுந்தன் தன்னுடனான உரையாடல்களைச் சுற்றியே சுழல்கிறது. குறிப்பாக அவரது ஆளுமைக்கு முரணான விஷயங்களை அவர் மனதிற்குள் மற்றவர்களைப் பற்றி உரக்கச் சொல்வதை நீங்கள் கேட்கும்போது உண்மையாகவே படத்திற்கு பெரும் பலமாக அமைகிறது. அவரது காதலி ஜோதி, மருத்துவமனை வரவேற்பாளர் மீனாட்சி, அவரது தோழி ராபி மற்றும் அவரது போட்டியாளர் வேணு ஆகியோருக்கு இடையேயான அவரது n;தாடர்புகள் – முகுந்தனின் நிஜ சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டுபவர்களாக சிறப்பாக நடித்துள்ளனர்.
சுராஜ் வெஞ்சாரமூடு, சுதி கோபா, அர்ஷா பைஜு, தன்வி ராம், ஜார்ஜ் கோரா, ரியா சாய்ரா, சுதீஷ் ஆகிpயோர் கதையின் முன்னேற்றத்திற்கு கவனம் பெறும் முக்கிய கதாபாத்திரங்களாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
அபினவ் தனது எடிட்டிங்கை நன்றாக பயன்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் விஸ்வஜித் தொடக்கம் முதல் இறுதி வரை காட்சிகளை மிகவும் நேர்த்தியுடன் கொடுத்து கதாபாத்திரங்கள் மீது கவனத்தை சிதறாமல் உறுதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்.சிபி மேத்யூ அலெக்ஸின் இசை மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்குகேற்றவாறு கொடுத்திருப்பது அருமை.
த்ரில்லர் டிராக்கில் கதைக்களம் சென்றாலும், முகுந்தன் என்ன செய்ய முற்படுகிறான், அவனது வழியில் உள்ள தடைகள் என்ன என்பதை சொல்லியிருக்கும் கதைக்களமும் ஷார்ப்பாக உள்ளது. ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ வெறும் வக்கீல் கதை அல்ல என்பதை மருத்துவமனை, காப்பீடு, அரசியல், போலீஸ் மற்றும் பிற துறைகளை உள்ளடக்கிய பல்வேறு கதைக்களங்கள் அமைத்து எழுதியுள்ளார்கள் அபினவ் சுந்தர் நாயக் மற்றும் விமல் கோபாலகிருஷ்ணன்.
ஊழல் மற்றும் சுயநலம் என்ற பெயரில் பொதுமக்கள் வழக்கமான துறைகளில் சந்தித்திருக்கும் சூழ்நிலையிலிருந்து விலகி, ஒரு வழக்கறிஞர் மீது கவனம் செலுத்தும் வகையில் இயக்கியுள்ளார் அபினவ் சுந்தர் நாயக். வக்கீல் மட்டுமின்றி, சாமானியர்களின் நம்பிக்கைக்கு உரிய மருத்துவர், போலீஸ், ஆம்புலன்ஸ் டிரைவர், போலீஸ்காரர்கள் என நெறிமுறைகளை மறந்து சமூகத்தின் முன் சாமானியர்களை சாதகமாக்குபவர்களை அம்பலப்படுத்தும் வகையில் இப்படம் அருமையாக வழங்கி உள்ளார் இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக்.படம் ஆரம்பிக்கும் போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை தரும் அறிவிப்புகளிலிருந்து புதுமையாக கையாண்டிருக்கும் விதமே கவனிக்க வைக்க, மலையாளத்தில் இருந்தாலும் ஆங்கில சப்டைட்டலுடன் கதைக்களம் நகர, புரியாதவர்களுக்கும் புரியும் வண்ணம் கதைக்குள் ஈடுபாடு ஏற்படுத்தும் வண்ணம் நம்மை அழைத்துச்சென்று விடுவதில் பெரும் பெற்றி பெற்று விடுகிறார் இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக். ஆரம்பத்தில் அப்பாவியாக தோன்றும் முகுந்தன் உண்ணி அதன் பின் சுயநலமிக்க வில்லனாக கொஞ்சம் கொஞ்சமாக மாற அந்த கதாபாத்திரத்தின் மேல் வெறுப்பு வராமல் இருக்கும் அளவிற்கு திரைக்கதையை நகைச்சுவையாக அமைத்து வாழ்க்கையில் நெகடிவாக இருக்கும் நபர் எப்படி வெற்றி பெற்று முன்னேறுகிறார் என்பதை பாசிடிவ்வாக மற்றவர்களுக்கு தெரியுமாறு புதியதொரு படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக். இருந்தாலும், தமிழில் டப் செய்து வெளியிட்டிருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜெயிண்ட் பிலிம்ஸ் வழங்கும் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்; வித்தியாசமான கோணத்தில் வழக்கறிஞர்களின் குள்ளநரித்தனத்தை தோலுரித்துக் காட்டும்; திரைக்கதை அசர வைத்திடும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் க்ரைம் மலையாள படம் அனைவரையும் கவரும்.