போர்தொழில் சினிமா விமர்சனம் : மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் படத்தின் ரோலர் கோஸ்டர் ரைட் அனுபவம் உங்களை மெய் சிலிர்க்க வைக்கும் | ரேட்டிங்: 4/5
அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட், ஈ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ், எப்ரியாஸ் ஸ்டூடியோஸ் சார்பில் சமீர் நாயர், தீபக் சேகல், முகேஷ் மேத்தா, சாரதி, பூனம் மெஹ்ரா, சந்தீப் மெஹ்ரா தயாரித்திருக்கும் போர்தொழில் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விக்னேஷ் ராஜா
இதில் அசோக் செல்வன் – பிரகாஷ், சரத் குமார் – லோகநாதன், நிகிலா விமல் – வீணா, பி.எல்.தேனப்பன் – மாரிமுத்து, ‘நிழல்கள்” ரவி – மகேந்திரன், ஒ.ஏ.கே.சுந்தர் – ராம் குமார், சந்தோஷ் கீழட்டூர் – ஜான் சபாஸ்டியன், சுனில் சுகடா – முத்துச்செல்வன், ஹரிஷ் குமார் – கென்னடி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்;கள்:- எழுத்தாளர் – ஆல்ப்ரெட் பிரகாஷ் – விக்னேஷ் ராஜா, ஒளிப்பதிவு – கலைசெல்வன் சிவாஜி, இசை – ஜேக்ஸ் பிஜாய், படத்தொகுப்பு – ஸ்ரீஜித் சாரங், கலை இயக்குனர்-இந்துலால் கவீத், மக்கள் தொடர்பு – யுவராஜ்.
குற்றப் பிரிவில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பயந்த சுபாவம் கொண்ட திறமைசாலியான இளைஞன் பிரகாஷ் (அசோக் செல்வன்). போலீஸ் பேட்ரோலின் போது திருச்சி வனப்பகுதியில் இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்க குற்றவாளிகளை கண்டுபிடிக்க கண்டிப்பிற்கு பேர்போன அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரி லோகநாதனிடம் (சரத்குமார்), இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. குற்றப் பிரிவில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முதல் நாளே பிரகாஷ் உயர் அதிகாரியான மூத்த அதிகாரி லோகநாதனுடன் இணைந்து குற்றவாளியை கண்டுபிடிக்க அனுப்பப்படுகிறார். முதலில் மறுக்கும் லோகநாதன் பிறகு தயக்கத்துடன் ஒரு மர்மமான கொலை வழக்கை விசாரிக்க பிரகாஷ{டன் பயணிக்க ஒப்புக்கொள்கிறார். அவர்களுக்கு உதவியாக வீணாவை (நிகிலா விமல்) உடன் அனுப்ப விசாரணையின் போது பிரகாஷ{ற்கு நெருக்கமான பிணைப்பை உருவாக்குகிறது. இந்தப் புலனாய்வுக் கூட்டணி ஆதாரங்களை அலசும் போதும் கொலைக் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற பல இளம் பெண்கள் கழுத்தை நெரித்துக் கொல்லப்படுகிறார்கள், மேலும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க முழு காவல் துறையும் போராடுகிறது. அனைவரையும் உறைய வைக்கும் சீரியல் கில்லரின் கொலைவெறி செயல்களைத் இருவரும் தடுத்தார்களா? இளம் பெண்களை குறிவைத்து கொல்லும் கொலையாளி யார்? உண்மையான சீரியல் கில்லர் யார்? எதற்காக இந்தக் கொலைகள்? என்பதே படத்தின் திகிலும் எதிர்பார்ப்பும் நிறைந்த க்ளைமேக்ஸ்.
ஒரு திமிர்பிடித்த, அனுபவம் வாய்ந்த மூத்த உயர் அதிகாரியாக எஸ்பி லோகநாதனாக சரத்குமார். கோவமும், விவேகமும், பழமையை தாங்கி பிடிக்கும் ஸ்ட்ரிக்ட் ஆபிசராக ஒன்றிணைந்த கதாபாத்திரத்தை தடுமாறாமல் நேர்த்தியுடன் நடித்துள்ளார் சரத்குமார்.
சரத்குமாருக்கு சவால் விடுக்கும் ஒரே நபர் அசோக் செல்வன், அவர் பிரச்சினைகளை அமைதியாக கையாளும் விதமும், அதே வேளையில் தனது சொந்த திறன்களில் முழு நம்பிக்கையுடன் பயணித்து விசாரணையில் திருப்புமுனைகளை ஏற்படுத்தும் அற்புதமான கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்.
இவர்களுக்கு உதவியாக வரும் நிகிலா விமல், மாரிமுத்துவாக பி.எல்.தேனப்பன், ‘நிழல்கள்” ரவி – மகேந்திரன், ஒ.ஏ.கே.சுந்தர் – ராம் குமார், சந்தோஷ் கீழட்டூர் – ஜான் சபாஸ்டியன், சுனில் சுகடா – முத்துச்செல்வன், ஹரிஷ் குமார் – கென்னடி ஆகியோரின் பங்களிப்பு படத்தின் விறுவிறுப்பை எகிற செய்துள்ளனர்.
ஒரு புறம் படத்தொகுப்பு – ஸ்ரீஜித் சாரங், கலை இயக்குனர்-இந்துலால் கவீத் என்றால் மறுபுறம் ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை மற்றும் காளிசெல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவும்
போர் தோழில் இந்த சிறந்த தொழில் நுட்ப குழுவால் பெருமையடையும் விதம் படத்தின் தரத்தையும், விறுவிறுப்பையும் சற்றும் குறையாமல் பார்த்துக் கொள்வதில் வெற்றியும் பெற்று புகழை சேர்த்துள்ளனர் என்றால் மிகையாகாது.
அனைவரையும் உத்வேகத்துடன் வைத்திருக்கும் புத்திசாலித்தனமான தலைப்பு போர்தொழில் பழகினால் தான் கற்றுக் கொள்ள முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கும் படம். சரத்குமார் மற்றும் அசோக்செல்வனின் வலுவான நடிப்பு, படத்திற்குகேற்ற பங்களிப்பை மிகையில்லாமல் கொடுத்திருக்கும் விதம், இருவரின் கேமிஸ்ட்ரி இந்த படத்திற்கு மேலும் கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. நெத்தியடி வசனங்கள், கதையில் ஏற்படும் திருப்புமுனைகள், விசாரணைகள், வழக்கின் போக்கு, த்ரில்லிங் அனுபவத்தை பார்த்து பார்த்து சுவாரஸ்யம் குறையாமல் இறுதி வரை தாங்கி பிடித்து இயக்கியிருக்கும் புதுமுக இயக்குனர் விக்னேஷ் ராஜாவிற்கு பாராட்டுக்கள். இவரின் முயற்சியும், உழைப்பும் படத்தின் பெரும் வெற்றிக்கு துணை புரிந்துள்ளது.
மொத்தத்தில் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட், ஈ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ், எப்ரியாஸ் ஸ்டூடியோஸ் சார்பில் சமீர் நாயர், தீபக் சேகல், முகேஷ் மேத்தா, சாரதி, பூனம் மெஹ்ரா, சந்தீப் மெஹ்ரா தயாரித்திருக்கும் போர்தொழில் திருப்பங்கள், சஸ்பென்ஸ், ஆச்சர்யங்களை அள்ளித்தரும் மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் படத்தின் ரோலர் கோஸ்டர் ரைட் அனுபவம் உங்களை மெய் சிலிர்க்க வைக்கும்.