போட் திரை விமர்சனம் : போட் பல தடங்கல்களை தாண்டி மூழ்காமல் பயணிக்க போராடுகிறது | ரேட்டிங்: 2.5/5
மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ, சிம்புதேவன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் போட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிம்புதேவன்.
இதில் குமரனாக யோகி பாபு, லட்சுமியாக கௌரி ஜி கிஷன், முத்தையாவாக எம்.எஸ்.பாஸ்கர், நாராயணனாக சின்னி ஜெயந்த், விஜயாவாக மதுமிதா, ராஜாவாக ஷாரா, இர்வின் டோமஸ் குல்லாப்புலியாக ஜெஸ்ஸி, முத்துமாரியாக லீலா, மகேஷ் வேடத்தில் அக்ஷத் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இணை தயாரிப்பாளர் – சி.கலைவாணி,இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – மாதேஷ் மாணிக்கம், தயாரிப்பு வடிவமைப்பு – டி.சந்தானம், எடிட்டர் – தினேஷ் பொன்ராஜ்,கலை இயக்குனர் – எஸ்.ஐயப்பன், தயாரிப்பு மேற்பார்வை – வேல் கருப்பசாமி, ஒப்பனை -பட்டணம் ரஷீத், காஸ்ட்யூமர் – சாய் – சிவா, கலரிஸ்ட் – ஜி.பாலாஜி, விஎஃப்எக்ஸ் –டிடிஎம் லவன் குசன், ஸ்டண்ட்ஸ்- சக்தி சரவணன், ஒலி வடிவமைப்பு மற்றும் கலவை – எஸ்.அழகியகூத்தன் – சுரேன்.ஜி,பப்ளிசிட்டி டிசைனர் – பரணிதரன் நடராஜன், கோ இயக்குநர்கள் – வேல்.கருப்பசாமி – பால பாண்டியன் – யாத்ரா ஸ்ரீPநிவாசன், அசோசியேட் இயக்குனர் – நவீன், பா.கிருஷ்,நிஷாந்த்,கங்காதரன், சித்தார்த், தயாரிப்பு நிர்வாகி – எஸ்.கிருஷ்ணராஜ், பிஆர்ஓ – நிகில் முருகன்.
இரண்டாம் உலகப் போர் நடைப்பெற்ற 1943ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் சுதந்திரப் போராட்ட வேட்கையும் புகைந்து கொண்டிருக்கிறது. பல நாடுகளில் ஜப்பான் குண்டு மழை பொழிந்து அச்சுறுத்தி வந்த சூழலில், சென்னையில் வெள்ளையர்களால் கடற்கரையோரம் அமைத்த மருத்துவ முகாமிற்கு குமரன் (யோகிபாபு) தன் தாயுடன் வருகிறார். அங்கு ஆங்கிலேய அதிகாரிகளிடம் கைதியாக தன் தம்பி மாட்டிக் கொண்டிருக்க, அவரை விடுவிக்க யோகிபாபு கடிதம் கொண்டு வருகிறார். தீடீரென ஜப்பானிய விமானப்படை குண்டு வீசப்போகிறார்கள் என்ற தகவல் பரவுகிறது. அதனால் தன் தம்பியை காப்பாற்ற முடியாமல் தாயுடன் குமரன் தனது படகில் ஏறி கடலுக்குள் தப்பிச்செல்லும்; போது அவருடன் ஒரு கர்ப்பிணி பெண் விஜயா (மதுமிதா), அவரது மகன், ஒரு சுபாஷ் சந்திர போஸ்சின் தீவிர கொள்கையாளர் முத்தையா (எம்.எஸ்.பாஸ்கர்), ஒரு பிராமணர் நாராயணன் (சின்னி ஜெயந்த்), அவரது மகள் லட்சுமி (கவுரி கிஷன்), ஓர் இஸ்லாமியர் ராஜா(ஷா ரா), ஒரு வட இந்தியர் (சாம்ஸ்) ஆக மொத்தம் ஏழு பேர் அந்த படகில் ஏறிக் கொள்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு செல்லும் வழியில் படகு விபத்தில் கடலில் தத்தளித்து கொண்டிருக்கும் பிரிட்டீஷ் அதிகாரியையும் படகில் ஏற்றிக் கொள்கின்றனர். அந்தப் படகில் தீவிரவாதி ஒருவரும் இருப்பதாக தகவல் வர பயத்தில் அனைவரும் பயணிக்கின்றனர். மொத்தமாக பத்து பேர் பயணிக்க, ஒருவர் மேல் ஒருவர் சந்தேகப்பட, பிரிட்டீஷ் அதிகாரி மிரட்ட தொடங்க அப்பொழுது நடக்கும் கைகலப்பில் படகில் நடுவில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் உள்ளே வருகிறது. இதனால் படகை கடலில் ஒரே இடத்தில் நிறுத்தி விட்டு தண்ணீரை வெளியேற்றுகின்றனர்.அந்த படகில் அதிக எடை இருப்பதால் உயிர் பிழைக்க வேண்டுமானால் மூன்று பேர் கடலில் குதித்தால் தான் படகை இயக்க முடியும் என்ற சூழ்நிலையில் அனைவரும் தத்தளிக்கின்றனர். இதில் யார் அந்த மூன்று பேர் சாவது என்பதை நிர்ணயிப்பதில் சண்டை ஏற்படுகிறது? இதனிடையே படகில் யார் தீவிரவாதி என்று கண்டுபிடித்தார்களா? இறுதியில் சுயநயலத்தோடு இருக்கும் அனைவரும் வஞ்சகத்தன்மையோடு யாரை கொல்ல நினைக்கிறார்கள்? அதன் பின் அவர்கள் அனைவரும் கரை சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படகோட்டி குமரனாக யோகி பாபு கடல் பயணத்தின் அனுபவத்தை பகிர்ந்து சமயோஜிதமாக வழி நடத்தி செல்வது, சென்னை மக்களின் ஆதாங்கத்தையும், மற்றவர்களுக்கு உதவும் குணம், தன் சமூகத்தின் ஏழ்மை நிலையை நினைத்து வருந்துவது என்று மொத்த படத்தையும் தன்னுடைய இயல்பான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். லட்சுமியாக கௌரி ஜி கிஷன், முத்தையாவாக எம்.எஸ்.பாஸ்கர், நாராயணனாக சின்னி ஜெயந்த், விஜயாவாக மதுமிதா, ராஜாவாக ஷாரா, இர்வின் டோமஸ் குல்லாப்புலியாக ஜெஸ்ஸி, முத்துமாரியாக லீலா, மகேஷ் வேடத்தில் அக்ஷத் என்று அனைவரும் கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கேற்ற வசனங்களையும், சர்ச்சையான விவாதங்களையும் பேசி சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்துள்ளனர்.
இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – மாதேஷ் மாணிக்கம், எடிட்டர் – தினேஷ் பொன்ராஜ்,கலை இயக்குனர் – எஸ்.ஐயப்பன் ஆகிய தொழில் நுட்ப கலைஞர்;களின் பணி படத்தின் காட்சிகளை உயிரோட்டமாகவும், கடலில் படகில் நடக்கும் சம்பவங்களையும் திறம்பட கையாண்டுள்ளனர்.
இரண்டு ஆங்கில நாவல்களை தழுவி எடுத்துள்ள இந்தப் படத்தில் பேஸ்ட் ஆன் ஏ ட்ரூ இன்ஸ்சிடென்ட் என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமே போட். படகை சுற்றியே படம் நகர்வதால் சுவாரஸ்ய காட்சிகளை விட வசனங்கள் தான் ஆக்ரமித்துள்ளன. நிகழ்கால சம்பவங்களை அந்த காலகட்டத்தின் நிகழ்வோடு சம்பந்தப்படுத்தி வசனங்களை அமைத்தும், வடஇந்திய, தென்னிந்திய பாகுபாடு, மொழிப்பிரச்சனை, ஜாதி மத வேறுபாடு, சுதந்திர வேட்கை, தீவிரவாதம் என்ற பலவற்றை திணித்து மனிதர்களின் சுயநலத்தையும் கலந்த பயணத்தை தோய்வில்லாமல் கொடுக்க நினைத்தாலும் அதில் அழுத்தமில்லாத திரைக்கதையால் தடுமாற்றத்துடன் கொடுத்துள்ளார் இயக்குனர் சிம்புதேவன்.
மொத்தத்தில் மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ், சிம்புதேவன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் போட் பல தடங்கல்களை தாண்டி மூழ்காமல் பயணிக்க போராடுகிறது.