‘பொய்க்கால் குதிரை’ விமர்சனம் : ‘பொய்க்கால் குதிரை’  தந்தை மகள் பாசத்தை சொல்லி இரண்டு கால் பாய்ச்சலில் இறுதி வரை திருப்பங்களுடன் சீறிப் பாய்ந்து செல்கிறது | ரேட்டிங்: 3/5

0
191

‘பொய்க்கால் குதிரை’ விமர்சனம் : ‘பொய்க்கால் குதிரை’  தந்தை மகள் பாசத்தை சொல்லி இரண்டு கால் பாய்ச்சலில் இறுதி வரை திருப்பங்களுடன் சீறிப் பாய்ந்து செல்கிறது | ரேட்டிங்: 3/5

‘டார்க் ரூம் பிக்சர்ஸ்’ மற்றும் ‘மினி ஸ்டுடியோஸ்’ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் எஸ்.வினோத் குமார் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’.

இதில் பிரபுதேவா , வரலட்சுமி சரத்குமார், ஜான் கொக்கேன், ஜெகன், பிரகாஷ்ராஜ், ஷ்யாம், ரைசா வில்சன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆழியா, குழந்தை ருத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு : பல்லு, இசை:  டி.இமான், பாடல்கள்: கார்க்கி, ஸ்டண்ட்: தினேஷ் காசி, கலை: பாபாநாடு உதயகுமார், நடனம்: சதீஷ் மற்றும் பூபதி, வசனம்: மகேஷ், உடை: ஜெயலட்சுமி, படத்தொகுப்பு-ப்ரீத்தி மோகன், இயக்கம்:  சந்;தோஷ் பி ஜெயக்குமார், தயாரிப்பு மேற்பார்வை: சி.பி.ஜெய், நிர்வாக தயாரிப்பு-கே.மதன், மக்கள் தொடர்பு : யுவராஜ்

கதிரவன்(பிரபுதேவா) விபத்தில் மனைவியையும், ஒரு காலையும் இழந்து தன் எட்டு வயது மகளுடன் வாழ்கிறார்.பாச மகளுக்கு இருதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு 70 லட்சம் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யும் கட்டாயத்தில் தள்ளப்படுகிறார். பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தில் வேலை செய்யும் கதிரவனால் அவ்வளவு பெரிய தொகை கட்ட முடியாமல் தவிக்கிறார். சிறையில் இருக்கும் அப்பா பிரகாஷ்ராஜ் பணக்கார பெண்ணான ருத்ரா(வரலட்சுமி சரத்குமார்)மகளை கடத்தி மிரட்டி பணம் வாங்கும் திட்டத்தை சொல்கிறார். முதலில் இதற்கு மறுக்கும் கதிரவன், பின்னர் வேறு வழியின்றி நண்பன் மதன்(ஜெகன்) கூட்டணியுடன் கடத்த திட்டமிட்டு ருத்ரா மகள் படிக்கும் பள்ளிக்கும் செல்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக ருத்ராவின் குழந்தை அதே நாளில் கடத்தப்பட, கதிரவன் போடும் திட்டம் வீணாவதோடு, ருத்ராவிடம் மாட்டிக் கொள்கிறார். ருத்ரா கதிரவனின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்டு அவரது மகளுக்கு உதவி செய்கிறார். இதனால் கதிரவன் நெகழிந்து ருத்ராவின் மகளை கண்டுபிடித்து தருவதாக உறுதி அளிக்கிறார். பின்னர் கதிரவன் ருத்ராவின் குழந்தையை மீட்டாரா? யார் ருத்ராவின் குழந்தையை கடத்தியது? அவர்கள் நோக்கம் என்ன? என்பதே படத்திக் க்ளைமேக்ஸ்.

படத்தை தன் தோளில் சுமந்து ஒன் மேன் ஆர்மியாக பொய்க்கால் குதிரையை திறமையாக எடுத்துச் செல்வது பிரபுதேவாதான். ஓற்றைக் காலோடு சவாலான வேடத்தை வழங்கினால் பிரபுதேவா அதை ஏற்றுக்கொண்டு அநாயசமாக செய்து முடிப்பார் என்பதற்கு இது மற்றொரு சான்று. மகளின் உடல்நிலையால் கலக்கமடைந்த தந்தையாக, இன்னொரு குழந்தையின் வலியை புரிந்து கொண்டு உதவும் நல்லுள்ளம் கொண்ட மனிதராக உணர்ச்சிகளை வெளிக்காட்டி சிறப்பாக செய்திருக்கிறார்.ஒற்றைக் காலோடு நடனம், சண்டை, துரத்தல் என்று படத்தில் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரியுமாறு அசத்தியுள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார், ஜான் கொக்கேன், ஜெகன், பிரகாஷ்ராஜ், ஷ்யாம், ரைசா வில்சன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆழியா, குழந்தை ருத்ரா ஆகியோர் படத்தின் விறுவிறுப்பான திருப்பங்களுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கி படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர்.

டி இமானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவசப்படுத்துகிறது.

பல்லுவின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சிகளிலும் தனித்திறமை பளிச்சிடுமாறு உழைத்திருப்பது தெரிகிறது.

தினேஷ் காசியின் சண்டைக்காட்சிகள் மிரள செய்கிறது.

ப்ரீத்தி மோகனின் படத்தொகுப்பு படத்திற்கு ப்ளஸ்.

முதலில் மெதுவாக தொடங்கும் கதைக்களம் முதல் பாதி முடியும் நேரத்தில், இழந்த வேகத்தை மீண்டும் பெறத் தொடங்குகிறது கதை ஆர்வத்தைத் தூண்டும் ஒரு சுவாரசியமான கேள்வியை எழுப்பி, முதல் பாதியை முடிக்கிறார் இயக்குனர் சந்தோஷ். இரண்டாம் பாதி முழுக்க முழுக்க திருப்பங்கள் மற்றும் உங்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் நல்ல கதை மற்றும் சுவாரசியமான விவரிப்பு இருந்தபோதிலும், படம் சில இடங்களில் வேகத்தடை இருக்கத்தான் செய்கிறது. இப்படத்தின் ஹைலைட் ஏழை நோயாளிகளை வைத்து விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கும் இணையதள மோசடிகளை விவரித்துள்ளது.இப்படத்தை வைத்து தொடக்க கதை மற்றும் இரண்டாம் பாகத்தை எடுக்கக்கூடிய கதைக்களமாக அமைத்துள்ளது சிறப்பு.

மொத்தத்தில் ‘டார்க் ரூம் பிக்சர்ஸ்’ மற்றும் ‘மினி ஸ்டுடியோஸ்’ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் எஸ்.வினோத் குமார் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொய்க்கால் குதிரை’  தந்தை மகள் பாசத்தை சொல்லி இரண்டு கால் பாய்ச்சலில் இறுதி வரை திருப்பங்களுடன் சீறிப் பாய்ந்து செல்கிறது.